தி.மு.க

“கொள்ளையடிப்பதையே கொள்கையாகக் கொண்ட அதிமுக ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்கத் தயாராவோம்”: மு.க.ஸ்டாலின்

”கொள்ளையடிப்பதையே கொள்கையாகக் கொண்ட அ.தி.மு.க ஆட்சியின் கொடுமையில் இருந்து தமிழகத்தை மீட்கத் தயாராவோம்” எனத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“கொள்ளையடிப்பதையே கொள்கையாகக் கொண்ட அதிமுக ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்கத் தயாராவோம்”: மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“நீதியரசர் கலையரசன் அவர்கள் தலைமையிலான குழு 10 சதவீதமாகப் பரிந்துரைத்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை, 7.5 சதவீதமாகக் குறைத்து தமிழக அரசு சட்ட மசோதா நிறைவேற்றியது. அதற்குக்கூட இன்னும் அனுமதி அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார்”

“கொள்ளையடிப்பதையே கொள்கையாகக் கொண்ட அ.தி.மு.க. ஆட்சியின் கொடுமையில் இருந்து தமிழகத்தை மீட்கத் தயாராவோம்” எனத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று கொளத்தூர் கிழக்குப் பகுதிச் செயலாளர் ஐ.சி.எஃப். வ.முரளிதரன் இல்லத் திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்கள் சசிதரன் - சண்முகப்பிரியா ஆகியோரை வாழ்த்தி உரையாற்றினார்.

“கொள்ளையடிப்பதையே கொள்கையாகக் கொண்ட அதிமுக ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்கத் தயாராவோம்”: மு.க.ஸ்டாலின்

கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய வாழ்த்துரை வருமாறு: “கொளத்தூர் கிழக்குப் பகுதியின் செயலாளர் அருமை நண்பர் ஐ.சி.எப். முரளிதரன் - லதா முரளிதரன் ஆகியோரின் அருமை மகன் சசிதரன் அவர்களுக்கும், ரமேஷ் - உமா தம்பதியினருடைய அன்பு மகள் சண்முகப்பிரியா அவர்களுக்கும் நமது அன்பான வாழ்த்துகளுடன் இந்த மணவிழா நிகழ்ச்சி நிறைவேறியிருக்கிறது.

இந்த இனியதொரு மணவிழா நிகழ்ச்சிக்குத் தலைமைப் பொறுப்பேற்று, மணவிழாவை நடத்தி வைத்து அதேநேரத்தில் மணமக்களை வாழ்த்தக்கூடிய சிறப்பான வாய்ப்பை பெற்றமைக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன் - பெருமைப்படுகிறேன். இங்கு வந்திருக்கும் நம்முடைய முன்னோடிகள், கழகத்தின் நிர்வாகிகள், வாழ்த்திப் பேச வந்திருந்தாலும் பேசக்கூடிய வாய்ப்பைப் பெறமுடியவில்லை. காலத்தின் சூழல் காரணமாக இந்த அரங்கத்தில் நீண்ட நேரம் நாம் இருக்கக்கூடாது. உடனடியாக கலைந்து செல்ல வேண்டும்.

காரணம் இன்றைக்கு கொரோனா என்ற கொடிய நோயில் நாம் மட்டுமல்ல, உலகமே சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளக்கூடிய நிலையில் நாம் இருந்து வருகிறோம். அதனால் தான் நம்முடைய சேகர்பாபு அவர்கள் அடையாளத்திற்கு வரவேற்புரை ஆற்றி, மணவிழாவை நாம் நடத்தி வைத்து, இங்கு வந்திருக்கும் அனைவரது சார்பிலும் நான் ஒருவன் மட்டுமே வாழ்த்தக்கூடிய வாய்ப்பை பெற்றிருக்கிறேன்.

“கொள்ளையடிப்பதையே கொள்கையாகக் கொண்ட அதிமுக ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்கத் தயாராவோம்”: மு.க.ஸ்டாலின்

இது உங்களுக்கு நன்றாகத் தெரியும். சற்று ஏறக்குறைய ஏழெட்டு மாதங்களாக வெளியில் திருமண மண்டபங்களில் நடைபெறக்கூடிய திருமண நிகழ்ச்சிக்கு நான் வரமுடியாத நிலை இருந்து வந்தது. பெரும்பாலும் திருமண மண்டபங்களில் நடைபெறவிருந்த திருமணங்கள் ஏழெட்டு மாதங்களாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இப்போதுதான், கொஞ்சம் அந்த நிகழ்ச்சிகள் நடைபெறத் தொடங்கியுள்ளன. இந்தச் சூழ்நிலையிலும் நாம் இன்னும் ஜாக்கிரதையாக, பத்திரமாக இருக்க வேண்டும்.

ஏனென்றால் கொரோனா முற்றிலும் சரியாகிவிட்டதா, அந்த தொற்றைத் தடுத்து விட்டார்களா, அதற்குரிய சிகிச்சையைக் கண்டுபிடித்து விட்டார்களா, அல்லது அதற்குரிய தடுப்பூசியைக் கண்டுபிடித்து மக்களுக்குப் பயன்படுத்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறார்களா என்றால், அவை இன்னமும் கேள்விக்குறியாகத்தான் இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் அதிகநேரம் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. இருந்தாலும், எட்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன் என்றால் அது நம்முடைய முரளிதரன் இல்லத்தில் நடைபெறும் திருமண விழாவாக - முரளிதரன் இல்லத்தில் நடைபெறும் திருமணம் என்று சொல்வதைக்காட்டிலும், என்னுடைய கொளத்தூர் தொகுதியில் - நம்முடைய கொளத்தூர் தொகுதியில் நடைபெறக்கூடிய மணவிழா நிகழ்ச்சியாக இருக்கின்ற காரணத்தால், இந்தத் திருமண விழாவில் மிகுந்த மகிழ்ச்சியுடன் பூரிப்புடன் கலந்து கொண்டிருக்கிறேன். நம்முடைய முரளிதரன் அவர்களைப் பற்றி மாவட்டச் செயலாளர் சேகர்பாபு அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். நான் அதிகம் அவரைப் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

“கொள்ளையடிப்பதையே கொள்கையாகக் கொண்ட அதிமுக ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்கத் தயாராவோம்”: மு.க.ஸ்டாலின்

கிராமத்தில், “கொல்லன் தெருவில் ஊசி விற்ற கதை” என ஒரு பழமொழி கூறுவார்கள். அவரைப் பற்றி அறிந்தவர்கள் நீங்கள். அவரைப் புரிந்து வைத்திருப்பவர்கள் நீங்கள். எந்த அளவிற்கு இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

என்னைப் பொறுத்தவரையில் ஐ.சி.எப். என்றால் முரளிதரன்; முரளிதரன் என்றால் ஐ.சி.எப். தான். இப்போது கொளத்தூர் என்றால் முரளிதரன்; முரளிதரன் என்றால் கொளத்தூர் தான் என்று சொல்லக்கூடிய நிலைக்குத் தன்னை இந்த இயக்கத்தில் ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றி வருபவர். இப்படியாக வளர்ந்து வந்ததை நம்முடைய சேகர்பாபு அவர்கள் அழகாக எடுத்துச் சொன்னார்கள்.

பகுதிப் பிரதிநிதியாக, இளைஞரணியில் ஒரு பொறுப்பை ஏற்றுக் கொண்டு, மாவட்ட இளைஞரணியின் துணை அமைப்பாளராகப் பணியாற்றி, ஒருங்கிணைந்த கொளத்தூர் தொகுதியின் பகுதிச் செயலாளராகவும் பணியாற்றி, அதன்பிறகு கழக வளர்ச்சிக்கும், நாம் ஆற்றக்கூடிய பணிகளை இன்னும் சிறப்பாக ஆற்ற வேண்டும் என்பதற்காக இந்தக் கொளத்தூர் தொகுதியை இரண்டாகப் பிரித்த நேரத்தில் ஒரு தொகுதிக்கு நாகராஜன் அவர்களும், மற்றொரு தொகுதிக்கு முரளிதரன் அவர்களும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பணியாற்றி வருகிறார்கள்.

“கொள்ளையடிப்பதையே கொள்கையாகக் கொண்ட அதிமுக ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்கத் தயாராவோம்”: மு.க.ஸ்டாலின்

நமது நாகராஜன் அவர்களும், முரளிதரன் அவர்களும் போட்டிபோட்டுக் கொண்டு இந்த கொளத்தூர் தொகுதியில் பணியாற்றிக் கொண்டிருப்பதை நானே பலமுறை நேரடியாகப் பார்த்திருக்கிறேன். அந்தப் பணிகளைப் பார்த்து நான் உள்ளபடி பெருமைப்படுவதுண்டு. இன்றைக்கு நான் சட்டமன்ற உறுப்பினராக, தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றால் முரளிதரன் போன்றோர் உழைப்பின் காரணமாகத்தான் என்பதை நான் ஒரு காலமும் மறந்துவிடமாட்டேன். அதுதான் உண்மை. அப்படிப் பட்டவரின் இல்லத்தில் நடைபெறக்கூடிய மணவிழா இது.

இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் உங்கள் அனைவரிடமும் நான் அன்போடு கேட்டுக் கொள்ள விரும்புவது, விரைவில் சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறோம். சட்டமன்ற பொதுத்தேர்தல் மிக விரைவில் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கான ஆயத்தப் பணிகளில் நாம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். கொளத்தூர் பகுதியில் உள்ள கழகத் தோழர்களுக்கு அதிகம் நான் சொல்ல வேண்டியதில்லை. தேர்தல் பணியென்றால் இப்படித்தான் ஆற்ற வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக ஆற்றக்கூடியவர்கள் நீங்கள். அதிலும், நாகராஜனும், முரளிதரனும் திட்டமிட்டுப் பணியை நிறைவேற்றக்கூடியவர்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தேர்தலை நாம் சந்திக்கவிருக்கிறோம். இந்தத் தேர்தலில் நீங்கள் நல்ல முடிவை எடுத்தாக வேண்டும். இன்றைக்கு நாட்டின் சூழ்நிலை எப்படி இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். எப்படிப்பட்ட ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதும் உங்களுக்குத் தெரியும்.

மத்தியில் இருக்கும் பா.ஜ.க. ஆட்சிக்கு அடிமையாக, கூனிக்குறுகி இன்றைக்கு ஒரு சேவகனாக அடிமைத்தனமாக இருந்து கொண்டிருக்கக்கூடிய ஆட்சி தான் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. வேறு ஒன்றும் நான் உதாரணம் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

தமிழக ஆளுநர் அவர்கள் ஒரு அனுமதி தருவதில் உள்ள சிக்கல் என்ன என்பது உங்களுக்குத் தெரியும். நேற்று முன்தினம் மிகப்பெரிய போராட்டத்தைச் சென்னையில் நடத்தினோம். எதற்காக என்றால், ஏழை - எளிய மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு என்னென்ன இடர்ப்பாடுகளை எல்லாம் தந்திட வேண்டுமோ - நீட் தேர்வைக் கொண்டு வந்து மாணவர்களின் மருத்துவப்படிப்பை பாழ்படுத்தி வருகிறார்களோ - அவற்றை ஓரளவிற்குச் சரிசெய்ய வேண்டும் என்பதற்காகத்தான், அரசுப் பள்ளி மாணவர்களுக்காக போராடினோம்.

“கொள்ளையடிப்பதையே கொள்கையாகக் கொண்ட அதிமுக ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்கத் தயாராவோம்”: மு.க.ஸ்டாலின்

10 சதவீத இடஒதுக்கீட்டுக்கான பரிந்துரையை நீதியரசர் கலையரசன் அவர்கள் தலைமையிலான குழு அரசிடம் தந்திருந்தாலும், அதையும் இந்த ஆட்சி குறைத்து 7.5 சதவீதம் வழங்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து அதை மசோதாவாக நிறைவேற்றி ஏகமானதாகச் சட்டமன்றத்தில் தி.மு.க. உள்ளிட்ட எல்லாக் கட்சிகளும் அதை ஆதரித்து ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். அனுப்பிவைத்து ஏறக்குறைய நாற்பது நாள்கள் ஆகிவிட்டன. ஆளுநர் இன்னும் அதற்கு ஒப்புதல் தரவில்லை. தருவார், தருவார் என்று காத்திருந்தும் அவர் அனுமதி தரவில்லை.

இங்கிருக்கும் அமைச்சர் பெருமக்கள் ஆளுநரைச் சந்தித்துக் கேட்டபோது, அவர் என்ன சொன்னார் என்பதை அமைச்சர்கள் வெளியில் சொல்லவில்லை. அதற்குப்பிறகு நானே ஆளுநருக்குக் கடிதம் எழுதினேன்.‘7.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்காக நாங்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாவுக்கு ஒப்புதல் தாருங்கள்’ என்று கடிதம் அனுப்பினேன். அதற்கு ஆளுநர் அனுப்பிய பதிலில், “நீங்கள் சொன்னதைப் புரிந்துகொண்டேன். ஆனால் அதுகுறித்து பரிசீலித்துத்தான் முடிவெடுக்க முடியும். முடிவெடுக்க 4 வாரங்கள் அவகாசம் வேண்டும்” என்று எழுதியிருந்தார். எப்படியாவது காலம்தாழ்த்தி இதை நீர்த்துப்போகச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் ஆளுநர் இருக்கிறார். அதைக் கண்டித்து, அதைப்பற்றிக் கவலைப்படாமல் இருக்கும் இந்த ஆட்சியைக் கண்டித்து நேற்று முன் தினம் சென்னையில் மாபெரும் போராட்டத்தை நடத்திக்காட்டியிருக்கிறோம். அதைக்கூட முதலமைச்சர் திரு. பழனிசாமி, "தி.மு.க. இந்தப் பிரச்சினையில் அரசியல் செய்கிறது, ஸ்டாலின் அரசியல் செய்கிறார்" என்று சொல்கிறார்.

நாங்கள் எதிர்க்கட்சி. அரசியல்தான் செய்வோம். நேற்றுமுன் தினம் நடந்த ஆர்ப்பாட்டத்தில்கூட சொன்னேன், ‘நாங்கள் அரசியல் செய்யாமல் அவியலா செய்வோம்’ என்று. தயவுசெய்து சிந்தித்துப்பாருங்கள். இன்று அ.தி.மு.க.வின் கொள்கை என்ன, கொள்ளையடிப்பது, ஊழல் செய்வது, கமிஷன் கேட்பது. நம்முடைய கொள்கை என்ன? நாட்டுக்காகப் பாடுபடுவது, நாட்டுமக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடுவது, உரிமைகளை மீட்கப் போராடுவது.

“கொள்ளையடிப்பதையே கொள்கையாகக் கொண்ட அதிமுக ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்கத் தயாராவோம்”: மு.க.ஸ்டாலின்

இப்படிப்பட்ட கொடுமையில் இருந்து தமிழகத்தைக் காப்பாற்ற இந்த ஆட்சியை ஒழிக்க வேண்டும். அதற்கான வாய்ப்பு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்தான். அதை நீங்கள் நல்லவகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உங்களையெல்லாம் நான் இந்த நேரத்தில் கேட்டுக்கொண்டு, மணக்கோலம் பூண்டிருக்கும் இந்த மணமக்கள் வாழ்க்கையில் எல்லா நன்மைகளையும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்து நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை சேர்க்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

முரளிதரன் அவர்கள் நம் இயக்கத்துக்காகப் பாடுபடுபவர். அவரது இல்லத் திருமண விழாவில் பங்கேற்றதற்காக மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன், பூரிப்படைகிறேன். அதே பூரிப்புடன், அதே மகிழ்ச்சியுடன், அதே பெருமையுடன் மீண்டும் ஒருமுறை எடுத்துச்சொல்கிறேன். புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் சொன்னதைப்போல வீட்டுக்கு விளக்காய், நாட்டுக்குத் தொண்டர்களாய் மணமக்கள் வாழ்க, வாழ்க என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories