தி.மு.க

தி.மு.க-வில் புதிய கொள்கை பரப்புச் செயலாளர்கள் நியமனம் : பொதுச்செயலாளர் அறிவிப்பு!

தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர்கள் பொறுப்பில் திண்டுக்கல் ஐ. லியோனி மற்றும் முனைவர் சபாபதி மோகன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தி.மு.க-வில் புதிய கொள்கை பரப்புச் செயலாளர்கள் நியமனம் : பொதுச்செயலாளர் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தேனி மாவட்ட கழக நிர்வாக வசதிக்காகவும், கழகப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும் தேனி வடக்கு மற்றும் தேனி தெற்கு என இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்படுவதாக தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி தேனி தெற்கு மாவட்டத்தில் கம்பம், ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிகளும், தேனி வடக்கு மாவட்டத்தில் போடிநாயக்கனூர், பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிகளும் இடம்பெறும்.

தி.மு.க-வில் புதிய கொள்கை பரப்புச் செயலாளர்கள் நியமனம் : பொதுச்செயலாளர் அறிவிப்பு!

புதிதாக அமையப்பெற்ற தேனி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக கம்பம் என்.ராமகிருஷ்ணன், தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக தங்க.தமிழ்ச்செல்வன் ஆகியோர் நியமிக்கப்படுவதாக தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

மேலும், தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர்களாக பணியாற்றி வந்த ஆ.ராசா கழக துணை பொதுச் செயலாளராகவும், தங்க.தமிழ்ச்செல்வன் தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்ட நிலையில், அவர்கள் கொள்கை பரப்புச் செயலாளர்கள் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தி.மு.க-வில் புதிய கொள்கை பரப்புச் செயலாளர்கள் நியமனம் : பொதுச்செயலாளர் அறிவிப்பு!

அவர்களுக்கு பதிலாக ஏற்கனவே கொள்கை பரப்புச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் திருச்சி சிவா எம்.பி அவர்களுடன் தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர்கள் பொறுப்பில் திண்டுக்கல் ஐ. லியோனி மற்றும் முனைவர் சபாபதி மோகன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories