தி.மு.க

“தி.மு.க தலைவரிடம் உறுதியளிக்கிறேன்...” - பொதுச் செயலாளர் துரைமுருகன் உணர்ச்சிகர பேச்சு!

"தி.மு.க-வுக்கு முன்னால் இமையமே தூசாகத்தான் தெரியும் எனக்கு” என தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் உரையாற்றினார்.

“தி.மு.க தலைவரிடம் உறுதியளிக்கிறேன்...” - பொதுச் செயலாளர் துரைமுருகன் உணர்ச்சிகர பேச்சு!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில், பொதுச் செயலாளராக துரைமுருகன் மற்றும் பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

பின்னர், பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க-வின் பொதுச் செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ ஆற்றிய உரை வருவாறு :

“என் மீது முழு நம்பிக்கை வைத்து என்னை பொதுச் செயலாளராக்கிய தி.மு.க தலைவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னைப் பற்றிய எந்தத் தகவலையும் கேட்காமல், தொண்டனாக, நண்பனாக, அமைச்சராக படிப்படியாக வளர்த்த தலைவர் கலைஞர். அவருக்கு இறுதி வரை நல்ல நண்பனாக இருந்தேன்.

நான் தி.மு.க தலைவருக்கு ஒரு உறுதிமொழியைத் தருகிறேன். நான் எக்காலத்திலும் கலைஞருக்கு துரோகம் நினைத்ததில்லை. என்னை வளர்த்த எம்.ஜி.ஆர், சட்டமன்றத்தில் ஒருமுறை என்னைப் பிடித்து தன்னோடு இருக்கச் சொன்னார். நான் மறுத்துவிட்டேன். என் தலைவர் கலைஞர்; என் கட்சி தி.மு.க என்று சொன்னேன்.

“தி.மு.க தலைவரிடம் உறுதியளிக்கிறேன்...” - பொதுச் செயலாளர் துரைமுருகன் உணர்ச்சிகர பேச்சு!

தி.மு.க-வுக்கு முன்னால் இமையமே தூசாகத்தான் தெரியும் எனக்கு. நான் மட்டுமல்ல; எனக்குப் பின்னால் என் குடும்பமும் உங்களுக்கு நன்றி கொண்டதாக இருக்கும்.

காலில் செருப்பு போடக்கூடாது; தோளில் துண்டு போடக்கூடாது; பெண்கள் ரவிக்கை போடக் கூடாது என்கிற நிலை இருந்தது. நூறாண்டு காலத்தில் இவற்றையெல்லாம் தலைகீழாகப் புரட்டிப்போட்டது திராவிட இயக்கம்.

இப்போது நம் இயக்கத்திற்கு ஏற்பட்டிருக்கிற சவால் மிகப்பெரியது. இதுவரை மத்தியில் ஆட்சி செய்தவர்கள் ஜனநாயகம் அறிந்தவர்கள். இப்போது நம்மை எதிர்ப்பவர்கள் ஜனநாயகத்தை எதிர்ப்பவர்கள்.

இந்தியை திணிப்போம்; சமஸ்கிருதத்தைக் கொண்டு வருவோம் என முயற்சி செய்கிறார்கள். இதை எதிர்ப்பதற்கான பலத்தை நாம் பெற்றாக வேண்டும். இளைய சமுதாயம் வந்தாக வேண்டும்.

இளைஞர்களுக்கு நாம் விடுக்கும் கோரிக்கை இதுதான். மிகப்பெரிய ஆபத்து நம்மைச் சூழ்ந்திருக்கிறது. இளைய சமுதாயமே வீறுகொண்டு எழு! மாணவ சமுதாயமே புரட்சிக்கு வா! உணர்வு குன்றாத கழக நண்பர்களே நாம் கலாச்சார போராட்டத்திற்கு தயாராக வேண்டும்!

“தி.மு.க தலைவரிடம் உறுதியளிக்கிறேன்...” - பொதுச் செயலாளர் துரைமுருகன் உணர்ச்சிகர பேச்சு!
Vignesh

இரண்டு தாரக மந்திரங்களை எப்போதும் நினைவில் வைத்திருங்கள்.

பேரறிஞர் அண்ணா சொன்னது : "I belong to the Dravidian stock. I am proud to call myself a Dravidian. That does not mean that I am against a Bengali or a Maharashtrian or a Gujarati. As Robert Burns has stated, ‘A man is a man for all that’. I say that I belong to the Dravidian stock and that is only because I consider that the Dravidians have got something concrete, something distinct, something different to offer to the nation at large. Therefore it is that we want self-determination.”

தந்தை பெரியார் சொன்னது : “ஈ. வெ. ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன்.

அந்தத் தொண்டு செய்ய எனக்கு ‘யோக்கியதை’ இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன்.

இதைத் தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும், பகுத்தறிவையே அடிப்படையாய்க் கொண்டு கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும், நான் அத்தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன். சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகிறேன்.”

நான் திராவிடம்! நான் திராவிடன்! நான் திராவிடன் எனச் சொல்லிக்கொண்டே இருங்கள்!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உறுதி அளிக்கிறேன். கலைஞரிடத்திலே இருந்தது போன்று, என் வாழ்நாள் முழுதும் உங்களிடத்திலே இருப்பேன். இது உறுதி! இது சத்தியம்” என உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories