தி.மு.க

“பொதுவுடைமை இயக்கத் தியாகத் தலைவர் என்.சங்கரய்யா பல்லாண்டு வாழ்க”: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

பொதுவுடைமைக் கொள்கையினை இலட்சியமாக ஏற்றுக்கொண்டு சங்கரய்யா பல்லாண்ட வாழ்க என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியமான ஆளுமை நிறைந்த தலைவர்களுள் ஒருவர் சுதந்திர போராட்ட வீரர் என்.சங்கரய்யா. பொதுவாழ்வில் சாதனை பல கண்ட அவர் இன்று தனது 99 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

பொதுவுடைமை இயக்கத் தியாகத் தலைவர் சங்கரய்யாவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தியில் கூறியிப்பதாவது:

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் என்.சங்கரய்யா அவர்கள் 99-வது பிறந்தநாளினைக் காண்பது பொதுவாழ்வில் ஈடுபடும் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் நிகழ்வாகும்.

“பொதுவுடைமை இயக்கத் தியாகத் தலைவர் என்.சங்கரய்யா பல்லாண்டு வாழ்க”: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

பொதுவுடைமைக் கொள்கையினை வாழ்வின் இலட்சியமாக ஏற்றுக்கொண்டு, பதவி சுகங்களை எதிர்பாராமல், எளிய மக்களின் நலனுக்காக வாழ்வை அர்ப்பணித்து, தியாகத் தழும்புகளையே பதக்கங்களாகக் கொண்டவர்.

பொதுவாழ்வில் ஈடுபடுவோர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழும் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா அவர்கள் நூற்றாண்டு விழா கண்டு, பல்லாண்டுகள் நலமுடன் வாழ்ந்திட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories