DMK

#LIVEUPDATES : “தி.மு.கழகத்தின் துணிச்சல் மிக்க தூண் ஜெ.அன்பழகன்” - தலைவர்கள் இரங்கல்! #RIPAnbazhagan

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்ததை அடுத்து அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

#LIVEUPDATES : “தி.மு.கழகத்தின் துணிச்சல் மிக்க தூண் ஜெ.அன்பழகன்” - தலைவர்கள் இரங்கல்! #RIPAnbazhagan
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on
10 June 2020, 11:57 AM

சென்னை கண்ணம்மாப்பேட்டையில் பெற்றோர் நினைவிடம் அருகே ஜெ.அன்பழகன் அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது!

10 June 2020, 11:49 AM

திராவிட இயக்கம் மறவாது அவரது திருமுகத்தை!

“நாட்டுக்காக போராடி உயிரிழந்த இராணுவ வீரனின் தியாகத்திற்கு இணையானது, கொரோனா தொற்று தடுப்பு பணிக்காக போராடி உயிரிழந்த என் சகோதரர் ஜெ.அன்பழகனின் தியாகம்.

அவரது தியாக வாழ்வைப் போற்றுவோம்! திராவிட இயக்கம் மறவாது அவரது திருமுகத்தை!”

- தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!

10 June 2020, 07:21 AM

ஜெ.அன்பழகன் மறைவுக்கு நெட்டிசன்கள் இரங்கல்!

சமூக வலைதளங்களில் துடிப்புடன் செயல்பட்டு சினிமா, கால்பந்து, கிரிக்கெட் என அனைத்து துறை தொடர்பாகவும் தொடர்ந்து பதிவிட்டு வந்த ஜெ.அன்பழகன் மறைவுக்கு நெட்டிசன்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

#LIVEUPDATES : “தி.மு.கழகத்தின் துணிச்சல் மிக்க தூண் ஜெ.அன்பழகன்” - தலைவர்கள் இரங்கல்! #RIPAnbazhagan
10 June 2020, 07:19 AM

தந்தைக்கு அருகிலேயே அடக்கம்!

மறைந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல் சென்னை தியாகராயநகரில் உள்ள கண்ணம்மாப்பேட்டையில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இதற்காக 15 அடிக்கு குழி தோண்டப்பட்டு கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டுள்ளது.

அவரது தந்தை புதைக்கப்பட்ட இடத்துக்கு அருகிலேயே ஜெ.அன்பழகனின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

10 June 2020, 07:16 AM

சுகாதாரத்துறையின் ஜெ.அன்பழகனின் உடல் ஒப்படைப்பு!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தி.மு.க. எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனின் உடல் சுகாதாரத்துறையிடம் ஒப்படைத்தது ரேலா மருத்துவமனை நிர்வாகம்.

10 June 2020, 07:15 AM

எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம், சட்டமன்றத்தில் சண்டமாருதம் - திருச்சி சிவா புகழஞ்சலி!

10 June 2020, 07:14 AM

செயல் சிங்கத்தை இழந்தது இயக்கம் - வைரமுத்து இரங்கல்!

#LIVEUPDATES : “தி.மு.கழகத்தின் துணிச்சல் மிக்க தூண் ஜெ.அன்பழகன்” - தலைவர்கள் இரங்கல்! #RIPAnbazhagan
10 June 2020, 07:14 AM

ஜெ.அன்பழகன் மறைவை அடுத்து தி.மு.க. நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!

#LIVEUPDATES : “தி.மு.கழகத்தின் துணிச்சல் மிக்க தூண் ஜெ.அன்பழகன்” - தலைவர்கள் இரங்கல்! #RIPAnbazhagan
10 June 2020, 06:05 AM

தி.மு.கவின் சென்னை மாவட்ட தூண்களில் ஒருவர் ஜெ.அன்பழகன்!

#LIVEUPDATES : “தி.மு.கழகத்தின் துணிச்சல் மிக்க தூண் ஜெ.அன்பழகன்” - தலைவர்கள் இரங்கல்! #RIPAnbazhagan
10 June 2020, 05:21 AM

”அனைவராலும் உச்சரிக்கப்படும் பேரன்பை இழந்தோம்” - கே.என்.நேரு

#LIVEUPDATES : “தி.மு.கழகத்தின் துணிச்சல் மிக்க தூண் ஜெ.அன்பழகன்” - தலைவர்கள் இரங்கல்! #RIPAnbazhagan
10 June 2020, 05:13 AM

ஜெ.அன்பழகன் மறைவு - மு.க.ஸ்டாலின் உருக்கம்!

உண்மையான உடன்பிறப்பாக இறுதி மூச்சுவரை இடையறாது செயல்பட்டவர் சகோதரர் ஜெ.அன்பழகன். இனி எப்போது அவருடைய பாசமுகம் காண்பேன்? - மு.க.ஸ்டாலின்

banner

Related Stories

Related Stories