தி.மு.க

“அவர்களால் தான் உலகம் இயங்குகிறது” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் அன்னையர் தின வாழ்த்து!

என் அன்னைக்கும் அவர் போன்ற அன்னையர் குலத்துக்கும் வாழ்த்துகள் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

இன்று உலக அன்னையர் தினம் என்பதால் பலரும் தங்களின் அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பலர் தங்களின் அம்மா பற்றி சிறப்புகளைக் கூறி ட்வீட் செய்து அன்னையர் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “உயிரின் கரு!

உணர்வின் திரு!

வாழ்வின் உரு!

வளர்ச்சியின் எரு!

- எல்லாம் சேர்ந்தவள் அன்னை!

அவர்களால் தான் உலகம் இயங்குகிறது. இயற்கையும் அன்னையும் இல்லாமல் எவரும் வளர்ந்திருக்கவும் வாழ்ந்திருக்கவும் முடியாது!

என் அன்னைக்கும் அவர் போன்ற அன்னையர் குலத்துக்கும் வாழ்த்துகள்!

உங்கள் அன்பும் கருணையுமே உலகம் என்றும் வேண்டி நிற்பது!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories