தி.மு.க

“பொய்ச் செய்தி பரப்பும் பா.ஜ.க ரூ. 100 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கவேண்டும்” - தி.மு.க வக்கீல் நோட்டீஸ்!

தி.மு.க மீது திட்டமிட்டுப் பொய்ச் செய்தி பரப்பும் பா.ஜ.க, நஷ்ட ஈடாக 'கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி வழங்கவேண்டும் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

“பொய்ச் செய்தி பரப்பும் பா.ஜ.க ரூ. 100 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கவேண்டும்” - தி.மு.க வக்கீல் நோட்டீஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க மீது திட்டமிட்டுப் பொய்ச் செய்தி பரப்பும் பா.ஜ.க, நஷ்ட ஈடாக 'கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி வழங்க வேண்டும் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் தமிழக மக்கள் அவதியுற்று வரும் நிலையில், பொறுப்புமிக்க எதிர்க்கட்சியான தி.மு.க மக்களுக்காக களத்தில் இறங்கிப் பணியாற்றி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதி வழங்குவதோடு நின்றுவிடாமல் களத்தில் இறங்கி, மக்களுக்கு அத்தியாவசிய உதவிகளைச் செய்வதோடு அச்சம் களையவும் போராடி வருகிறது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்காக, அரசியல் எல்லைகள் கடந்து அனைவரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். ஆனால், இந்த இக்கட்டான நேரத்திலும், தி.மு.க மீது அவதூறு பரப்பி அதன் மூலம் ஏதாவது அரசியல் லாபம் அடையலாமா எனத் தமிழக பா.ஜ.க செயல்பட்டு வருகிறது.

ஆட்சியில் இல்லாவிட்டாலும், மக்களுக்காகச் செயல்படும் தி.மு.கவினரின் பொதுநல நோக்கிலான செயல்களைப் பொறுக்கமாட்டாமல் பா.ஜ.க-வினர் வழக்கம்போல் அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர். பா.ஜ.க-வின் அதிகாரப்பூர்வ பக்கங்களிலேயே இந்த அவதூறுக் கணைகள் ஏவப்பட்டுள்ளன.

தி.மு.க அறக்கட்டளை சார்பில் ரூ. 1 கோடி, தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் தங்களது ஒரு மாதச் சம்பளத்தையும் வழங்கியுள்ளதோடு, தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தும் பணத்தை ஒதுக்கியுள்ளனர்.

அதோடு, தி.மு.க தலைமை நிலையமான 'அண்ணா அறிவாலயத்தின்' வளாகத்தில் அமைந்துள்ள 'கலைஞர் அரங்கை' கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ளப் பயன்படுத்திக் கொள்ளவும் வழங்கியுள்ளது. தி.மு.கழக நிர்வாகிகளும் தங்களால் இயன்ற உதவிகளை அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவி வருகின்றனர்.

“பொய்ச் செய்தி பரப்பும் பா.ஜ.க ரூ. 100 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கவேண்டும்” - தி.மு.க வக்கீல் நோட்டீஸ்!

இவை அனைத்தையும் 'முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது' போல், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தி.மு.க. எதுவுமே செய்யவில்லை என தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாக அவதூறு பரப்பி வரும் பா.ஜ.க, கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கான 'தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு' 100 கோடி ரூபாய் வழங்கிட வேண்டும் என கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி அவர்களின் சார்பாக, வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், ட்விட்டர் நிறுவனத்தின் சர்வதேச தலைமை நிர்வாகி, ட்விட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஆகியோருக்கு 'வக்கீல் நோட்டீஸ்' அனுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories