தி.மு.க

"தி.மு.க மீதான பொய்களை உடைப்போம்” : தி.மு.க ஆதரவாளர்களை ஒன்றிணைக்க ஹேஷ்டேக் - அசத்தும் உடன்பிறப்புகள்!

தி.மு.கவில் இணைந்துள்ள சமூகவலைதளவாசிகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக '#ஒன்றிணையுங்கள்_திமுக_நட்புகளே' என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

"தி.மு.க மீதான பொய்களை உடைப்போம்” : தி.மு.க ஆதரவாளர்களை ஒன்றிணைக்க ஹேஷ்டேக் - அசத்தும் உடன்பிறப்புகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்பான தகவல்களையும், செய்திகளையும் பொதுமக்களிடம் எளிதில் கொண்டு சேர்ப்பதற்காக தி.மு.க மீது அபிமானம் கொண்டவர்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப், டெலிகிராம் போன்ற தளங்களில் தி.மு.க பற்றிய செய்திகளைப் பகிர்ந்தும், தி.மு.க-வுக்கு எதிராகப் பரப்பப்படும் புரட்டுகளை விளக்கியும் வருகின்றனர்.

தி.மு.க-வுக்கு எதிராகப் பரப்பப்பட்டு வரும் பொய்களையும், புரட்டுகளையும், ஆதாரப்பூர்வமாக அடித்து நொறுக்கும் விதமாக தி.மு.க இளைஞரணி சார்பில், ‘பொய் பெட்டி’ எனும் நிகழ்வும் நடத்தப்பட்டு வருகிறது.

"தி.மு.க மீதான பொய்களை உடைப்போம்” : தி.மு.க ஆதரவாளர்களை ஒன்றிணைக்க ஹேஷ்டேக் - அசத்தும் உடன்பிறப்புகள்!

இந்நிலையில், சமீபத்தில் தி.மு.கவில் இணைந்துள்ள சமூகவலைதள இளைஞர்கள், தி.மு.க ஆதரவாளர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியாக '#ஒன்றிணையுங்கள்_திமுக_நட்புகளே' என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தி.மு.க ஆதரவாளர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதே இந்த ஹேஷ்டேகின் நோக்கம். இந்த ஹேஷ்டேகுடன் பதிவிடுவோரை தி.மு.க அபிமானிகள் பின்தொடர்வதன் மூலம் ஒத்த தத்துவப்புலம் கொண்டவர்கள் எளிதாக இணைந்துகொள்ளலாம்.

தொடர்ந்து, #திமுகமீதானபொய்களைஉடை_உண்மையைசொல் எனும் ஹேஷ்டேக்கில் தி.மு.க குறித்த அவதூறுகளுக்கான பதில்களைப் பகிர்ந்து பரப்பி மக்களிடம் உண்மைகளைக் கொண்டு சேர்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

தி.மு.க அபிமானியான பரிமளம் என்பவர், தன்னார்வலராக இந்தப் பணிகளை முன்னெடுத்து வருகிறார். இதற்கு சமூக வலைதளங்களில் இயங்கும் தி.மு.க-வினரிடையே பலத்த வரவேற்பு எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories