தி.மு.க

"டெல்டா மக்களை ஏமாற்றாத முழுமையான பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் வேண்டும்”- தி.மு.க விவசாய அணி தீர்மானம்!

தி.மு.க. விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் - துணை அமைப்பாளர்கள் கூட்டத்தில் 7 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க. விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் - துணை அமைப்பாளர்கள் கூட்டம் இன்று (22-02-2020) பிற்பகல் 3 மணிக்கு சென்னை, தேனாம்பேட்டை, அண்ணாசாலையில் உள்ள அன்பகம் “அண்ணா மன்றத்தில்”, கழக விவசாய அணி செயலாளர் கே.பி. இராமலிங்கம் தலைமையில் விவசாய அணி செயலாளர்கள் கரூர் ம.சின்னசாமி, ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு :

தீர்மானம் 1 :

தமிழகத்தில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட வேளாண் பாதுகாப்பு மண்டலம், காவிரி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் பயன்படத்தக்க வகையில் அறிவிக்காமல், திருச்சி, கரூர், அரியலூர் மாவட்டங்கள் தவிர்த்திருப்பதும், பாதுகாப்பு மண்டல பகுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு அது விவசாய விளை நிலங்களை நஞ்சாக்கி நாசப்படுத்தும் திட்டங்களாக இருந்தாலும், அதற்கு விதிவிலக்கு அளித்திருப்பதும் - விவசாய நிலங்களை ரியல் எஸ்டேட் தொழிலுக்கு பயன்படுத்த வகை செய்யப்பட்டிருப்பதும், முழுமையான பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டமாக இருக்க முடியாது என்பதால் முழுமையான பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா முழுவதையும் அறிவித்து அதற்கு மத்திய அரசின் முழுஅங்கீகாரத்தையும் பெற்றிட வேண்டுமென, தமிழக அரசை தி.மு.க விவசாய அணியின் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 2 :

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் அனைத்து மதகுகளும் பழுதடைந்ததால், கடந்த காலங்களில் நீர் நிரம்பியும் அணையின் முழு கொள்ளவான 52 அடியை முழுமையாக பயன்படுத்த இயலாமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது 22 அடி முழுவதும் மண் மண்டிக் கிடப்பதை தூர்வாராமல் கதவுகள் பழுது பார்க்கும் பணி மட்டுமே நடைபெற்று வருகிறது. இந்த அணை முழுவதுமாக விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் தூர்வாருவதுடன், அணையின் பராமரிப்பு பணிகளை செப்பனிட வேண்டுமென தமிழக அரசை தி.மு.க விவசாய அணி கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 3 :

மத்திய அரசு சமீபத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் மாற்றம் செய்து விருப்பப்பட்ட விவசாயிகள் மட்டும் சேர்ந்து கொள்ளலாம் என்ற அறிவிப்பும் - காப்பீட்டு தொகையின் அளவை குறைத்திருப்பதும், பயிர் காப்பீட்டு திட்டத்தையே பாழ்படுத்தும் வகையில் அமைந்துள்ளதை தி.மு.க விவசாய அணி வன்மையாக கண்டிக்கிறது.

"டெல்டா மக்களை ஏமாற்றாத முழுமையான பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் வேண்டும்”- தி.மு.க விவசாய அணி தீர்மானம்!

தீர்மானம் 4 :

தற்போது தமிழகத்தில் நிலத்தடிநீர் உயர்ந்திருப்பதாகவும், தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்வதாகவும், உபரி மின்சாரம் உள்ளதாகவும், தமிழக அரசு தன் சாதனை பட்டியலில் குறிப்பிட்டுள்ளது உண்மையென்றால், தமிழகத்தில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக மின் இணைப்பை வழங்கிட வேண்டுமென தமிழக அரசை தி.மு.க விவசாய அணி வற்புறுத்துகிறது.

தீர்மானம் 5 :

தமிழக கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை முழுவதையும் வழங்க வேண்டுமென பலமுறை விவசாய சங்கங்கள் வற்புறுத்தியும், தமிழக அரசு எதையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் - அரசு பிரதிநிதிகள் - ஆலை அதிபர்கள் ஆகியோர் அடங்கிய முத்தரப்பு பேச்சு வார்த்தை கூட்டத்தை நடத்தாமல் தவிர்ப்பதையும் தி.மு.க. விவசாய அணி கண்டிப்பதுடன், இன்னும் இரண்டுமாத கால இடைவெளிக்குள் தனியார் ஆலைகள் உள்ளிட்ட அனைத்து ஆலைகளும் 2017-18, 2018-19 மற்றும் 2019-20க்கான கரும்பு முழு நிலுவை தொகையையும் வழங்கிட மாநில அரசு தவறினால் தி.மு.க. விவசாய அணி நிலுவை தொகை வழங்கப்படாத அனைத்து ஆலைகள் முன்பும், விவசாயிகளை திரட்டி மாபெரும் போராட்டத்தை தி.மு.க. விவசாய அணி நடத்தும் என தி.மு.க. விவசாய அணி தீர்மானிக்கிறது.

தீர்மானம் 6 :

தமிழகத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் ஏரி மராமரத்துப் பணிகள் மிகவும் ஊழல் மையமாக திகழ்கிறது என்பதை தமிழக விவசாயிகள் கவலையுடன் பார்த்து வருகிறார்கள் என்பதை தமிழக அரசு உணர்ந்து முழுமையான மராமரத்து பணிகளை மேற்கொள்ள வேண்டுமென தி.மு.க விவசாய அணி வற்புறுத்துகிறது.

"டெல்டா மக்களை ஏமாற்றாத முழுமையான பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் வேண்டும்”- தி.மு.க விவசாய அணி தீர்மானம்!

தீர்மானம் 7 :

திராவிட முன்னேற்ற கழகமும் - திராவிட முன்னேற்றக் கழக தலைவரும் எப்போதும் எல்லா வகையிலும் விவசாயிகளின் பாதுகாவலராகவும், உழவர்களை உயர்த்தும் உத்தம பணிகளில் தொடர்ந்து செயல்பட்டு வருவதை தமிழக விவசாயிகள் உணர்ந்துள்ளனர். விவசாயிகளின் நிரந்தர பாதுகாவலராக திகழும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரின் பிறந்த நாளை “விவசாயிகளின் பாதுகாப்புத் தின”மாக கருதி வருகிற மார்ச் 1ந் தேதி முதல் 7ந் தேதி வரை தமிழகத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் கழகத் தலைவரின் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சிகளை தி.மு.க விவசாய அணி நடத்துவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தி.மு.க. விவசாய அணி நடத்தும் “விவசாயிகளின் பாதுகாப்புத் தின” நிகழ்ச்சிகளில், மாநில விவசாய அணி நிர்வாகிகள் கலந்து கொள்பவர்கள் விவரம் பின்வருமாறு:-

மாவட்டம் மாநில விவசாய அணி நிர்வாகிகள்

கோவை மாநகர் கிழக்கு - டாக்டர் கே.பி.இராமலிங்கம், செயலாளர்

நாமக்கல் கிழக்கு - கரூர் ம.சின்னசாமி, செயலாளர்

திருப்பூர் வடக்கு - ஏ.கே.எஸ்.விஜயன், செயலாளர்

நாமக்கல் மேற்கு - கள்ளிப்பட்டி மணி, இணைச் செயலாளர்

புதுக்கோட்டை தெற்கு - ஆர். அருட்செல்வன், இணைச் செயலாளர்

இராமநாதபுரம் - எஸ்.அப்துல்காதர், இணைச் செயலாளர்

சேலம் மேற்கு - பா.செந்தமிழ்ச்செல்வன், இணைச் செயலாளர்

கிருஷ்ணகிரி கிழக்கு - இரா. தமிழ்மணி, துணைத் தலைவர்

தருமபுரி - தே. மதியழகன், துணைத் தலைவர்

சேலம் கிழக்கு - வி.என்.மணி, துணைச் செயலாளர்

திருவள்ளூர் வடக்கு, தெற்கு - ஆர்.டி.ஏ.ஆதிசேஷன், துணைச் செயலாளர்

விருதுநகர் தெற்கு - ஆர். கணேசன், துணைச் செயலாளர்

காஞ்சிபுரம் தெற்கு - டேம் டி.வெங்கடேசன், துணைச் செயலாளர்

கன்னியாகுமரி மேற்கு - கு. செல்லப்பா, துணைச் செயலாளர்

கரூர் - ஜித்து (எ) ராஜரத்தினம், துணைச் செயலாளர்

மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் இம்மாவட்டங்களைத் தவிர, மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் தலைமையில், மாவட்ட துணை அமைப்பாளர்கள் முன்னிலையில், அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள்/பொறுப்பாளர்களின் அனுமதியோடு, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சிகளை “விவசாயிகளின் பாதுகாப்புத் தினம்” என்ற தலைப்பில் எழுச்சியோடும் - சிறப்போடும் நடத்திட வேண்டுமென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

banner

Related Stories

Related Stories