தி.மு.க

2021ல் அதிசயத்தை நிகழ்த்த திமுக தலைவரால் மட்டுமே முடியும் - பொய் பெட்டி நிகழ்வில் நாஞ்சில் சம்பத் பேச்சு!

கடந்த வாரம் நடைபெற்ற பொய் பெட்டி நிகழ்ச்சியில் அரசியல் விமர்சகர் நாஞ்சில் சம்பத் பங்கேற்று பேசியதை ட்விட்டரில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.

2021ல் அதிசயத்தை நிகழ்த்த திமுக தலைவரால் மட்டுமே முடியும் - பொய் பெட்டி நிகழ்வில் நாஞ்சில் சம்பத் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனைகளை மறைத்து அதன் மீது பல்வேறு அவதூறுகளையும், பொய், புரட்டுகளையும் சுமத்தி வரும் அ.தி.மு.க, பா.ஜ.க. போன்ற எதிரிகளின் பிரசாரங்களை சுக்கு நூறாக உடைக்கும் வகையில் ‘பொய் பெட்டி’ நிகழ்வு தி.மு.கழக இளைஞரணி செயலாளரால் முன்னெடுக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ‘பொய் பெட்டி’-இன் முதல் அத்தியாயத்தில் பத்திரிகையாளர் கோவி.லெனின் பங்கேற்று கழகத்தின் மீதான அவதூறுகளை துடைத்தெறிந்த அவர், தி.மு.க குடும்பக் கட்சி என காலங்காலமாகப் பரப்பப்பட்டு வரும் பொய் பிரச்சாரங்கள் குறித்து முன்வைக்கப்பட்ட கேள்விக்கு உண்மை வரலாற்றின் வழியாக விளக்கங்களை வழங்கினார்.

அதுபோல, அடுத்த நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக வந்த திராவிட சிந்தனையாளரான நாஞ்சில் சம்பத், ஆதிக்கவாதிகளையும், அடிமைகளையும் தன்னுடைய விளக்கங்களால் விளாசி இருந்தார்.

அதனையடுத்து, கடந்த வாரம் நடைபெற்ற ’பொய் பெட்டி’ நிகழ்ச்சியில் பங்கேற்ற நாஞ்சில் சம்பத், சமூக வலைதளம் வாயிலாகவும், கடிதம் வாயிலாகவும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

அதில், “2021ம் ஆண்டு தி.மு.கழக தலைவர், அண்ணன் மு.க.ஸ்டாலினால் மட்டுமே அதிசயத்தை நிகழ்த்த முடியும். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளையும் ஒரு அணியே வென்றது என்ற நிலையை தலைவர் மு.க.ஸ்டாலின் சாதித்து காட்டுவார்” நாஞ்சில் சம்பத் பேசியிருக்கிறார்.

இதனை ட்விட்டரில் பகிர்ந்த தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நடக்காததை நடந்தது போலவும், நடக்கவே முடியாததை நடத்திக்காட்டுவோம் என மேடைகளில் திரித்து பேசும் எத்தனை எத்தனையோ கதைகள் வேதனையளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories