தி.மு.க

“கலைஞர் சென்னை வந்தது எப்படி?” - அவதூறுகளை அடித்து நொறுக்கும் பொய் பெட்டியின் முதல் அத்தியாயம்!

பத்திரிகையாளர் கோவி.லெனின் பங்கேற்ற ‘பொய் பெட்டி’ நிகழ்வின் முதல் அத்தியாயத்தை இன்று தி.மு.க இளைஞரணியின் யூ-ட்யூப் பக்கத்தில் வெளியிட்டார் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.

“கலைஞர் சென்னை வந்தது எப்படி?” - அவதூறுகளை அடித்து நொறுக்கும் பொய் பெட்டியின் முதல் அத்தியாயம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஊழலில் திளைக்கும் அ.தி.மு.க-வும், பாசிச நடவடிக்கைகளால் மக்களை வதைக்கும் பா.ஜ.க-வும், அவர்களுக்கு எதிராகப் போராடும் தி.மு.க-வின் எதிர்வினைகளை மக்கள் மத்தியில் திசைதிருப்ப அவதூறுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.

பொய்களுக்கும், புரட்டுகளுக்கும் பெயர் போன எதிரிகளின் அவதூறுக் கணைகளைச் சுக்குநூறாக்க, ‘பொய் பெட்டி’ எனும் முயற்சியை முன்னெடுத்தது உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க இளைஞரணி.

பெரியார், அண்ணா, கலைஞர் காலம் முதல் தற்போது வரை தி.மு.க-வுக்கு எதிராகப் பரப்பப்பட்டு வரும் பொய்களை முறியடிக்கும் விதமாக தொடங்கப்பட்ட இந்நிகழ்வின் முதல் அழைப்பாளராக பத்திரிகையாளர் கோவி.லெனின் பங்கேற்றார்.

சமூக வலைதளங்களில் உலவும் பலரும், தி.மு.க-வினரும் எழுப்பிய கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் டிசம்பர் 22ம் தேதி நடைபெற்ற ‘பொய் பெட்டி’ நிகழ்வில் பதிலளித்தார் கோவி.லெனின். கலைஞர் சென்னைக்கு வந்தது குறித்து காலங்காலமாகப் பரப்பப்பட்டு வரும் அவதூறு குறித்து ஆதாரங்களுடன் உண்மைகளை விளக்கினார் அவர்.

இந்நிலையில், இளைஞர்களுக்கும், இணையம் மூலம் அரசியல் பழகும் புதியவர்களுக்கும் ‘பொய் பெட்டி’ நிகழ்வின் மூலம் பத்திரிகையாளர் கோவி.லெனின் அளித்த பதில்களின் முதல் அத்தியாயத்தை இன்று தி.மு.க இளைஞரணியின் யூ-ட்யூப் பக்கத்தில் வெளியிட்டார் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.

banner

Related Stories

Related Stories