தி.மு.க

#CAAவுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் : வீடு வீடாகசசென்று கையெழுத்து பெற்ற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கத்தை சென்னை கொளத்துரில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தர்.

#CAAவுக்கு எதிரான கையெழுத்து இயக்கம்  : வீடு வீடாகசசென்று கையெழுத்து பெற்ற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க அரசு சமீபத்தில் கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகத்திலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தி.மு.க கூட்டணி கட்சிகளின் சார்பில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்று முடிந்த தி.மு.க தலைமை செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டபடி, குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக ஜனவரி 24-ம் தேதி தி.மு.க தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

பல்வேறு கட்சியினரும் கலந்துகொண்ட இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அனைத்து குடிமக்களையும் பாதிக்கக்கூடிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது எனக் கூறி இந்தத் தீர்மானங்களை தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் நிறைவேற்றியுள்ளன.

மேலும் அதற்காக தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய மக்களைச் சந்தித்து மாபெரும் கையெழுத்து இயக்கத்தை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கையெழுத்து இயக்கத்தை பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி முதல் வரை நடத்தி, பொதுமக்களுடைய கையெழுத்துகளைப் பெற்று, இந்திய குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வழங்க முடிவு செய்திருக்கிறோம் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அறிவித்திருந்தார்.

அதன்படி, சென்னை கொளத்தூரில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கையெழுத்து இயக்கத்தை இன்று தொடங்கி வைத்தார். அப்போது கையெழுத்து இயக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட படிவத்தில் தனது முதல் கையெழுத்தை இட்டு இயக்கத்தைத் தொடங்கிவைத்தார்.

அதுமட்டுமின்றி, கையெழுத்து இயக்கத்திற்காக வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றார். அப்போது சிலரின் பெயர்களை தி.மு.க தலைவரே கேட்டு படிவத்தில் நிரப்பி கையெழுத்து மட்டும் பெற்றுக்கொண்டார். இந்த கையெழுத்து இயக்கத்தில் அனைத்து தரபட்ட மக்களும் கலந்துக்கொண்டு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இட்டனர்.

#CAAவுக்கு எதிரான கையெழுத்து இயக்கம்  : வீடு வீடாகசசென்று கையெழுத்து பெற்ற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!

அதுமட்டுமின்றி, குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என அச்சிடப்பட்ட துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது. மு.க.ஸ்டாலின் சென்ற இடங்களில் மக்கள் இனிப்பு வழங்கி வரவேற்பு அளித்தனர். மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தி.மு.க தலைவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

இந்த கையெழுத்து இயக்கத்தில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி, மற்றும் தி.மு.க முக்கிய நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்துக்கொண்டனர். மேலும் தமிழகம் முழுவதும் நடைபெறும் கையெழுத்து இயக்கத்தில் தி.மு.க தோழமைக் கட்சி தலைவர்கள் துவக்கி வைத்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories