தி.மு.க

“அடிமைகளையும் ஆதிக்கவாதிகளையும் கதறவிட வருகிறார் நாஞ்சில் சம்பத்” - ‘பொய் பெட்டி’யின் அடுத்த நிகழ்வு!

‘பொய் பெட்டி’யின் அடுத்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக அரசியல் விமர்சகரும், திராவிடச் சிந்தனையாளருமான நாஞ்சித் சம்பத் பங்கேற்கிறார்.

“அடிமைகளையும் ஆதிக்கவாதிகளையும் கதறவிட வருகிறார் நாஞ்சில் சம்பத்” - ‘பொய் பெட்டி’யின் அடுத்த நிகழ்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பொய்களுக்கும், புரட்டுகளுக்கும் பெயர் போன எதிரிகளின் அவதூறுக் கணைகளைச் சுக்குநூறாக்க, ‘பொய் பெட்டி’ எனும் முயற்சியை முன்னெடுத்து வருகிறது உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க இளைஞரணி.

பெரியார், அண்ணா, கலைஞர் காலம் முதல் தற்போது வரை தி.மு.க-வுக்கு எதிராகப் பரப்பப்பட்டு வரும் பொய்களை முறியடிக்கும் விதமாக தொடங்கப்பட்ட இந்நிகழ்வின் முதல் அழைப்பாளராக பத்திரிகையாளர் கோவி.லெனின் பங்கேற்றார். இந்நிலையில், அடுத்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக அரசியல் விமர்சகரும், திராவிட சிந்தனையாளருமான நாஞ்சித் சம்பத் பங்கேற்கிறார்.

இதுகுறித்து தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு : “சில ஆதிக்க பாசிச சக்திகளும், அவர்களின் கால்பிடித்து அடிமை சேவகம் செய்யும் ஆட்சியாளர்களும், சமூகநீதிக் கொள்கையால் தமிழ் நிலத்தைத் தலைநிமிரவைத்த திராவிட இயக்கத்தைப் பற்றியும், அதன் தனிப்பெரும் தலைவர்களை பற்றியும், ஆதாரங்களே இல்லாத குற்றச்சாட்டுகள், அடிப்படையே இல்லாத அவதூறுகளைப் பரப்பி, அரசியல் லாபம் அடைய விரும்புகின்றனர்.

இந்தநிலையில், உண்மை அரசியல் வரலாற்றையும், ஆதிக்கத்தை ஒழித்த கழகத்தின் கொள்கைகளையும், இன்றைய இணையத் தலைமுறை இளைஞர்களைக் கவனத்தில் கொண்டு, பொதுமக்கள் முன்பாக வெளிச்சமிட்டுக் காட்ட, கழக இளைஞர் அணியால் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சியே ‘பொய் பெட்டி’.

“அடிமைகளையும் ஆதிக்கவாதிகளையும் கதறவிட வருகிறார் நாஞ்சில் சம்பத்” - ‘பொய் பெட்டி’யின் அடுத்த நிகழ்வு!

‘பொய் பெட்டி’யின் முதல் நிகழ்வில் பத்திரிகையாளர் அண்ணன் கோவி.லெனின் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்பித்தார். அதன் காணொளிகள் சமூக வலைதளங்களில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றன.

அதைத்தொடர்ந்து ‘பொய் பெட்டி’யின் இம்மாத நிகழ்வு நாளை நடைபெற உள்ளது. இதன் சிறப்பு அழைப்பாளராக நாஞ்சில் சம்பத் பங்கேற்கிறார். அடிமைகளையும், ஆதிக்கவாதிகளையும் கதறவிடும் வகையில், அவரிடம் கேட்க விரும்பும் உங்களின் கேள்விகளை கமென்ட்டில் பதியவும். அடித்து ஆடுவோம் வாருங்கள்!”

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.

banner

Related Stories

Related Stories