தி.மு.க

”மிசா கைதை நிரூபிக்கும் இஸ்மாயில் கமிஷன் அறிக்கை இதோ” - அ.தி.மு.க-வுக்கு சவால் விடும் தி.மு.க!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்த ஆதாரங்களை வெளியிட்டுள்ளார் தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் புதுக்கோட்டை அப்துல்லா.

”மிசா கைதை நிரூபிக்கும் இஸ்மாயில் கமிஷன் அறிக்கை இதோ” - அ.தி.மு.க-வுக்கு சவால் விடும் தி.மு.க!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படவில்லை என, தரங்கெட்ட வகையில் அ.தி.மு.க அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்த கருத்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தி.மு.க-வின் தியாக வரலாற்றையும், தலைவர் மு.க.ஸ்டாலினையும் அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை கண்டித்து தி.மு.கவினர் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதையடுத்து, அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தைக் கைவிடும்படி தி.மு.க நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், “சுமார் 44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தி.மு.கவின் தியாக வரலாற்று நிகழ்வுகளை, அவருடைய அரசியல் லாப நோக்கில், வக்கிர எண்ணத்துடன், திருத்தி எழுத எத்தனிக்கிறார், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். நான் மட்டுமல்ல, தி.மு.கவைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அன்றைய மத்திய அரசு அமல்படுத்திய அவசர நிலைப் பிரகடனத்தை எதிர்த்த காரணத்தால், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டோம்.

அதற்கான ஆவணங்கள் சிறைத்துறையில், சட்டப்பேரவை ஆவணங்களில், நீதியரசர் எம்.எம். இஸ்மாயிலால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில் நிரம்ப இருக்கின்றன. படிக்கத் தெரிந்தவர்கள், படிக்க மனமிருப்பவர்கள், பார்த்துத் தெரிந்து தெளிவுகொள்ளலாம்.” என எதிர்வினையாற்றி இருந்தார் மு.க.ஸ்டாலின்.

”மிசா கைதை நிரூபிக்கும் இஸ்மாயில் கமிஷன் அறிக்கை இதோ” - அ.தி.மு.க-வுக்கு சவால் விடும் தி.மு.க!

ஆனாலும், ஆவணங்களைத் தேடிப் படிக்க மனதற்ற அ.தி.மு.க-வினர் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர். தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை ஆவணத்தில் இடம்பெற்றுள்ள மிசா தடைச் சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது குறித்த குறிப்பு சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், மிசா தொடர்பாக மு.க.ஸ்டாலின் பகிர்ந்துகொண்ட நினைவுகளும் பகிரப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணை செயலாளர் புதுக்கோட்டை அப்துல்லா, நக்கீரன் செய்தி தளத்திற்கு பேட்டியளித்தார். அப்போது, இஸ்மாயில் கமிஷன் அறிக்கை நகலின் பக்கங்களைக் காட்டி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா தடைச் சட்டத்தில் கைதானது குறித்த ஆதாரங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தப் பேட்டியில், உண்மை வரலாற்றையும், அடையாளங்களையும் அழித்தொழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவோரை கடுமையாகச் சாடியிருக்கிறார் புதுக்கோட்டை அப்துல்லா.

banner

Related Stories

Related Stories