தி.மு.க

மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் : தி.மு.க அறிவிப்பு

ஆற்ற வேண்டிய களப்பணிகள் குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜூன் 3ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

வருங்காலங்களில் ஆற்ற வேண்டிய களப்பணிகள் குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜூன் 3ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.

இதுகுறித்து தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், " கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் - சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 3-6-2019 திங்கட்கிழமை காலை 10.00 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கத்தில்” நடைபெறும். அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் - சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories