
விஜய்சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் தொடங்கி 7 வாரங்கள் எட்டிவிட்டது. இந்த நிகழ்ச்சியின் போன வார இறுதியில் "captain மதில்" என்ற வீட்டுத்தலையை தேர்வுசெய்வதற்கான டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்க்கில் பங்கேற்ற FJ, சபரி, சுபிக்க்ஷா மற்றும் வினோத் ஆகியோரில் FJ வெற்றி பெற்று ஏழாவது வாரத்தின் கேப்டனாக தேர்வாகினார்.
இதையடுத்து வார இறுதிநாட்களில் போட்டியாளர்களை சந்திக்க வந்த தொகுப்பாளர் விஜய் சேதுபதி, பாரு மற்றும் திவாகர் அபாண்டமாக அரோரா மீதி பழி சுமத்திய ஆபாச குறியீடு விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக கோட்டைக்கட்ட தேவைப்பட்ட பிளாக்குகளை கையுடன் எடுத்து வந்திருந்தார்.

போட்டியாளர்களை சந்தித்தவுடன் பாருவின் கண் எப்படி இருக்கிறது என்று நலம் விசாரித்த விஜய்சேதுபதி, சக போட்டியாளர் உடல்ரீதியாக அவதிப்படும்பொழுது துணை நிற்பதும், உதவியாக இருப்பதும் அவசியம் என உபதேசம் செய்தார். இதையடுத்து, பாரு யார்யாருக்கெல்லாம் பட்டப்பெயர்களை வைத்திருக்கிறார் என்பது குறித்தான விசாரணையை தொடங்கினார் விஜய்சேதுபதி.
கனிக்கு ராஜமாதா; அரோராவுக்கு குசும்பி; மேலும் விக்ரமிற்கு பாணபத்திர ஓணாண்டி, வக்ரம் விக்ரம் போன்று கேலியாக பெயர் வைத்ததாக பாரு கூறினார். இதில், பாணபத்திர ஓணாண்டி பெயரில் 'பாண' என்பது விக்ரமை உருவாக்கேலி செய்வது போலத்தானே இருக்கிறது என்று கூறி பாருவை வறுத்தெடுத்தார் விஜய்சேதுபதி. அத்துடன், ஆபாச குறியீடு விவகாரம் குறித்து பேசத்தொடங்கிய விஜய்சேதுபதி, :"இதை இப்படி அடுக்கினா.. பிளாக் சரியா நிக்கும்னு தானே அர்த்தம், அது எப்படி உங்களுக்கு ஆபாச குறியீடா தெரிஞ்சது?" என்று பாரு மற்றும் திவாகரை வறுத்தெடுத்தார்.
“தப்பா புரிஞ்சுக்கிட்டேன்” சார் என்று திவாகர் சமாளிக்க முயல, "உங்களுடைய பார்வையில அப்படி தெரிஞ்சா அது உங்க தவறு, அதுக்கு பேர் தான் வக்கிரம்" என்று பாரு மற்றும் திவாகரின் செயல்களை கடுமையாக எச்சரித்தார். அத்துடன் "பாட்டில் மணி" டாஸ்க்கில் பாருவுக்கு அடிபட்டது தொடர்பாக விசாரணையை தொடங்கி இருந்தார் விஜய்சேதுபதி, இதற்காக போட்டியாளர்களுக்கு குறும்படமும் போடப்பட்டது. இதில் பாருவுக்கு கண்ணில் அடிபட்டது முதல் பாருவை சபரி shoe கால்களுடன் மிதித்ததும், கைகளால் தள்ளிவிட முயற்சி செய்ததும், இந்த டாஸ்கில் கனி, விக்ரம் மற்றும் FJ ஆகியோர் ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டதையும் கடுமையாக விமர்சித்தார் விஜய் சேதுபதி.

இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் போன வாரம் நடைபெற்ற ராஜாங்கம் டாஸ்க் குறித்து விசாரிக்க தொடங்கினார் விஜய்சேதுபதி. இதில் நான் லவ் கன்டென்ட் பண்ணலாம்னு பாத்தேன் சார் ஆனா "எங்கள் நாட்டு இளவரசிங்க.. எதிர் நாட்டுக்கு போயிட்டாங்க. எனக்கு பொசசிவ் ஆகிடுச்சு" என்று திவாகர் கூற, பொசசிவ் ஆனது மன்னராவா இல்லைன்னா திவாகராவா என்று விஜய் சேதுபதி கேள்விகளால் மடக்கினார்.
மேலும் அமைச்சராக இருந்தபோது அரோராவிடம் கோவப்பட்டு திவாகர் டாஸ்கை விட்டு வெளியேறி இருந்தார். இது குறித்து கேள்வி எழுப்பிய விஜய் சேதுபதி, "இளவரசி சொன்னா அமைச்சர் கேட்டுக்கணுமா; இல்லைன்னா அமைச்சர் சொன்னா இளவரசி கேட்டுக்கணுமா" என்று சக போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பி "மன்னர் மாதிரி ஒரு கேரக்டர் கொடுத்தா செய்யத் தெரியல... அமைச்சர் கேரக்டர்க்கு மூளைய நிறைய use பன்னிருக்கணும்... அதையெல்லாம் விட்டுட்டு 60 கேமரால 600 ரீல்ஸ் பண்ணலாம்னு பிளானோடதான உள்ளே வந்துருக்கீங்க?" என்று தனது கேள்விகளால் திவாகரை வாயடைத்து போக செய்திருந்தார் விஜய்சேதுபதி.
இதனைதொடந்து போன வாரம் நாமினேஷனில் இடம்பெற்ற போட்டியாளர்களை ஒன்றுதிரட்டிய விஜய்சேதுபதி, சாண்ட்ரா, விக்ரம், சுபிக்ஷா, திவ்யா, வியானா, ரம்யா, பாரு, அரோரா என வரிசையாக save செய்தார். இந்த எவிக்ஷனில் இறுதியில் இடம்பெற்றது கனி மற்றும் திவாகர். இதில் கனியும் காப்பாற்றப்பட்டு Watermelon star திவாகர் இறுதியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி FJ தலைமையில் ஏழாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. "ஒருவழியா week 7க்குள்ள வந்துட்டோம் வழக்கம்போல நல்லா திட்டுவாங்கினீங்களா" என போட்டியாளர்களிடம் விஜய்சேதுபதியின் roast குறித்து விசாரணை நடத்திய பிக்பாஸ், "இந்த வாரமாவது என் மானத்தை வாங்காம இருங்க" என போட்டியாளர்களிடம் கேட்டுக்கொண்டார். அத்துடன் இந்த வாரம் weekly டாஸ்க் exictment-ஆ இருக்கும் என்று போட்டியாளர்களிடம் கூறி சென்ற பிக்பாஸ் சிறிது நேரம் கழித்து போட்டியாளர்கள் freeze என கூறி இந்த வாரத்திற்கான நாமினேஷன் டாஸ்கிற்கு போட்டியாளர்களை தேர்வு செய்யும்படி அறிவித்தார்.

இதையடுத்து இந்த வார நாமினேஷனில் அமித், சுபிக்ஷா, ரம்யா, திவ்யா, பிரஜின், சபரி, கனி, கெமி, வியானா, விக்ரம், அரோரா, பாரு மற்றும் சாண்ட்ரா ஆகியோர் இடம்பெற்றுளனர்.
இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று இந்த வாரத்திற்கான weekly task அறிவிக்கப்பட்டுள்ளது. "பிக்பாஸ் வீட்டை மூன்று team-ஆக பிரிக்க வேண்டும், Entertainment non stop ஆக இருக்க வேண்டும். எந்த team அதிகமான points பெறுகிறார்களோ அந்த team-ல் உள்ள நபர்கள் அனைவரும் அடுத்த வார வீட்டு தல போட்டியில் பங்கு பெரும் வாய்ப்பை பெறுவார்கள்" என்று பிக்பாஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதற்காக பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் சாம்பார் squad, mop மாயாவி, flush fighters என மூன்று அணிகளாக பிரிந்துள்ள காட்சிகள் இன்றைய ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.






