
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் தொடங்கி 38 நாட்களை கடந்து விட்டது. நிகழ்ச்சியின் சுவாரசியத்தை அதிகபடுத்த பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ், அமித் பார்கவ் ஆகிய நான்கு நபர்களும் wild card போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து இருந்தனர். மேலும் போன வாரம் நடைபெற்ற Hotel டாஸ்க்கிற்காக பிக்பாஸின் முந்தைய போட்டியாளர்களாக தீபக், மஞ்சரி மற்றும் பிரியங்கா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர்.

இதையடுத்து வார இறுதி நாட்களில் போட்டியாளர்களை சந்திக்க வந்த விஜய்சேதுபதி, "ஆட்டத்தை மாத்துறேன்னு உள்ள போனவங்களும் கூட்டத்துல ஒருத்தர் ஆகிட்டாங்க" என்று wild card போட்டியாளர்கள் குறித்து கேளிக்கையாக விமர்சித்து இருந்தார். அத்துடன் போன வாரம் சாண்ட்ராவுக்கு பிக்பாஸால் வழங்கப்பட்ட secret task குறித்து குறும்படம் போடப்பட்டது. டாஸ்கில் வெற்றிபெற்ற சாண்ட்ரா மற்றும் பிரஜினுக்கு இருவரில் ஒருவருக்கு இந்த வாரத்திற்கான nomination free passயும், ஒரு நபரை direct nomination செய்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டது. மேலும், போன வாரம் double eviction நடைபெற்று துஷார் மற்றும் பிரவீன் ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினர்.
இதையடுத்து, பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான "பாட்டில் மணி" என்ற captaincy டாஸ்க் நடைபெற்றது. இதில், திவ்யா, பாரு மற்றும் சபரி ஆகியோர் பங்கேற்றனர். இந்த டாஸ்கின் பொழுது சபரியின் பாட்டிலை பாரு எடுக்க முயன்றதால் இருவருக்கும் இடையை மோதல் ஏற்பட்டு பாருவின் கண்ணில் பலமாக அடிபட்டது. கண்கள் வீங்கிய நிலையிலும் பாரு டாஸ்கில் பங்கேற்றார். ஆனால் இறுதியில் டாஸ்கில் வெற்ற பெற்ற சபரி இந்த வார captain-ஆக தேர்வுசெய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான nomination process நடைபெற்றது. இதில் போன வார secret டாஸ்கில் வெற்றி பெற்ற பிரஜினுக்கு இந்த வாரம் nomination-ல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அத்துடன், சுபிக்ஷா இந்த வாரம் direct nomination செய்யப்பட்டிருந்தார். வாராவாரம் ஒரே நபருக்கு எதுக்கு இதனை nomination ஓட்டு என விஜய் சேதுபதி கேள்வியெழுப்பி வந்தது இந்த வாரம்தான் போட்டியாளர்களுக்கு புரிந்து இருக்கும் போல. இந்த வாரம் ஓட்டு பிரிந்தது. இறுதியில் சுபிக்ஷா, திவ்யா, அரோரா, ரம்யா, விக்ரம், சாண்ட்ரா, வியானா, கனி, திவாகர் மற்றும் பாரு ஆகியோர் நாமினேஷனில் இடம்பெற்றனர்.
சீசன் 9 விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வீட்டிற்குள் எலியும், பூனையுமாக வலம்வரும் watermelon star திவாகர் மற்றும் கானா வினோத்தை வைத்து டாஸ்க் தர முடிவுசெய்தார் பிக்பாஸ். இந்த weekly டாஸ்கிற்காக பிக்பாஸ் வீடு இரண்டு சாம்ராஜ்யமாக மாறியது. ஒன்று கானா சாம்ராஜ்யம் மற்றொன்று தர்பீஸ் சாம்ராஜ்யம். இந்த இரண்டு சாம்ராஜ்யத்துக்கு ஏழாம் பொருத்தம்தான் என்று அறிவித்தார் பிக்பாஸ். இதில் வினோத் (மன்னர்), கமருதீன், திவ்யா, பிரஜின், விக்ரம், ரம்யா, அமித் மற்றும் கெமி ஆகியோர் கானா சாம்ராஜ்யத்தை சேர்ந்தவர்களாகவும், திவாகர் (மன்னர்), கனி, பாரு, அரோரா, வியானா, சாண்ட்ரா, சபரி, சுபிக்ஷா மற்றும் FJ ஆகியோர் தர்பீசு சாம்ராஜ்யத்தை சேர்ந்தவர்களாகவும் பிக்பாஸால் அறிவிக்கப்பட்டனர்.

டாஸ்க்கிற்காக அனைவரும் வேடம் அணிந்து தாயாராக தொடங்கினர். அப்போது எதிர் நாட்டணியினரின் கிரீடத்தை சத்தமில்லாமல் எடுத்து வந்து வினோத்திடம் கொடுத்தார் கமருதீன். இந்த கிரீட விவகாரம் இரு நாட்டினருக்கு இடையே வாக்குவாதமாக மாறியது. சற்று நேரத்திற்கு பிறகு குறுக்கிட்ட பிக்பாஸ், “சுட்டதும்.. சுட்டீங்க... கிரீடத்தை பத்திரமா வச்சுக்கோங்க..” என்று கூறினார்.
இதையடுத்து. தர்பீஸ் ராஜாவை பல்லக்கில் வைத்து அழைத்து வந்தனர் தர்பீஸ் நாட்டினர். அதே போல, "பொதுவாக என் மனசு தங்கம். ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்" என்று பாட்டுப்பாடி கானா ராஜாவை அழைத்து வந்தனர் கானா நாட்டினர். இதையடுத்து, "தர்பீசு... தர்பீசு... உன் ராஜ்ஜியமே தமாசு…" என்ற வரிகளுடன் திவாகரின் சாம்ராஜ்ஜியத்தை வறுத்தெடுக்க தொடங்கினார் கானா வினோத். அடுத்தடுத்து இருநாட்டினரும் தங்களது நடிப்பு மற்றும் பாடல் திறமைகளை வைத்து தனது எதிர்நாட்டினரை கலாய்த்துக்கொண்டிருந்தனர்.
இதையடுத்து இருநாட்டினருக்கும் ஒரு டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் பிக்பாஸ் தரப்பில் இருந்து கொடுக்கப்படும் வரிகளை ஒருதரப்பினர் நடித்துக்காட்டி கண்டுபிடிக்க வேண்டும் மற்றொரு தரப்பினர் ஒலியெழுப்பி வார்த்தைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் ஒரு பாயிண்ட் அதிகம் பெற்ற தர்பீஸ் சாம்ராஜ்யம் டாஸ்கில் வெற்றி பெற்றது.

அடுத்ததாக இரு நாட்டு மன்னர்களையும் மாற்ற முடிவு செய்தார் பிக்பாஸ். இதில் திவாகருக்கு பதிலாக பாருவும், வினோத்துக்கு பதிலாக விக்ரமும் மாற்றப்பட்டனர். வினோத்தும் , திவாகரும் மனவருத்தம் படக்கூடாது என்பதற்காக “நீங்க நல்லா செய்யலைன்னு அர்த்தமில்ல. மாத்திப் பார்த்தா எப்படியிருக்கும்ன்னு பார்க்கலாம்னு" நினைக்குறேன் என்று பின்குறிப்பும் தெரிவித்துக்கொண்டார் பிக்பாஸ். இதையடுத்து இருநாட்டு மன்னர்களுக்கும் ஏக உபச்சாரத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, "கொடி பறக்குது" என்ற அடுத்த டாஸ்கை ஆரம்பித்தார் பிக்பாஸ். இருநாட்டினருக்கும் தலா மூன்று கொடிகள் வழங்கப்பட்டது. இரு அணிகளும் தங்கள் தேசத்து கொடிகளை ஒளித்து வைக்கவேண்டும், அதை எதிரணியினர் கண்டுபிடிக்க வேண்டும், மூன்று கொடிகளையும் யார் கண்டுபிடித்து நடுகிறார்களோ அவர்களே வெற்றி பெற்ற அணி ஆகும்.
டாஸ்க் தொடங்கியது இரு அணியினரும் குளிர்சாதன பெட்டி, கட்டிலின் பின்னே என ஆங்காங்கே கொடிகளை ஒளித்து வைத்தனர். "இது ஒரு fun டாஸ்க்" என்று பிக்பாஸ் அறிவித்திருந்தார். ஆனால் டாஸ்கில் fun எங்கே என்றுதான் தெரியவில்லை. இந்த டாஸ்கில் தங்களது நாட்டின் கொடியையே கண்டுபிடித்து எடுத்து வந்தார் வியானா. இந்த டாஸ்க்கிலும் தர்பீஸ் அணியினரே மூன்று கொடிகளையும் கண்டுபிடித்தால் தர்பீஸ் அணி மீண்டும் வெற்றி பெற்றது.

இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் போட்டியாளர்களிடையே Rank task நடைபெறுகிறது. இதற்கு, கனி, விக்ரம் மற்றும் அமித் பார்கவ் ஆகியோர் நடுவர்களாக இருக்கின்றனர். முதல் மூன்று இடங்களில் சபரி, சுபிக்ஷா,கெமி ஆகியோரும் கடைசி மூன்று இடங்களில் FJ, பாரு மற்றும் திவாகர் ஆகியோர் இருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதில் கடைசி மூன்று இடங்களில் இருக்கும் FJ, பாரு மற்றும் திவாகர் ஆகியோரை சிறை அடைக்கும்படி பிக்பாஸ் கூறும் காட்சிகளும் இன்றைய ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.






