
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் தொடங்கி நான்கு வாரங்களை கடந்து விட்டது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் இருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா மற்றும் ஆதிரை ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் வாரம் முழுவதும் கத்திகொண்டே இருந்த போட்டியாளர்களை எச்சரிக்க வந்தார் விஜய்சேதுபதி.
அத்துடன், வரும்போதே கையில் ஒரு loud speaker-ஐ எடுத்துக்கொண்டு வந்த விஜய் சேதுபதி, "கத்திகிட்டே இருந்தா எப்படி ஷோ பாக்குறது" என்று போட்டியாளர்களிடம் கேட்டார். மேலும், இந்த முறை watermelon star திவாகர் வீட்டின் அனைத்து கேமராக்களையும் பார்த்து தான் ஒரு நடிப்பு அரக்கன் என்று கூறிக்கொண்டு பிக்பாக்ஸையும் அலட்சியம் செய்துவிட்டு reels செய்து கொண்டிருந்தார்.
அத்துடன் சக பொறியாளர்களிடம் தகுதி, தராதரம் போன்ற வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தி இருந்தார். இது குறித்து கண்டிக்க தொடங்கிய விஜய் சேதுபதி, ''எப்ப பாத்தாலும் தமிழக மக்களேன்னு பேசிகிட்டு ரீல்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க, வெளியிலையும் அதைத்தானே பண்ணிட்டு இருந்தீங்க'' என்று கேள்வி எழுப்பினார். மேலும், நீங்க அதுக்கு மட்டும் உள்ள வரல என்று சுட்டிக்காட்டியதுடன், அவர் ரீல்ஸ் போடறதை ஏன் பின்னாடி நின்னு கிண்டல் பண்றீங்க? என்று பிரவீன், வினோத் ஆகியோரிடம் கேள்வி எழுப்பினார்.

குறிப்பாக, சென்ற வாரம் watermelon star திவாகர் வீட்டிற்குள் சட்டை போடாமல் reels செய்தது போட்டியாளர்களிடைய சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்தும் கேள்வி எழுப்பி இருந்த விஜய் சேதுபதி, "வேற யாரும் சட்டை போடாம இருந்ததே இல்லையா? ஏன் FJ, கம்ருதீன் ஆகியோர் வீட்டிற்குள் சட்டைபோடாமல் இருக்கும்போது கேட்டீங்களா? நண்பனா இருந்தா பொறுத்துக்கிறீங்க.. வேண்டாவதனா இருந்தா கண்டிக்கிறீங்க.. என்ன நியாயம் இதெல்லாம்" என்று கனியிடம் கேள்வி எழுப்பினார். "நியாயம் கேட்க ஒண்ணு சேர்றது தப்பு இல்ல. ஆனா அது groupism ஆனாத்தான் தப்பு" என்று அனைத்து போட்டியாளர்களையும் எச்சரித்தார்.
அடுத்ததாக, FJ-விடம் அதென்ன knockout பண்ணிட்டு வெளியே போவேன்னு சொல்லுறீங்க .. இப்பவே கூட போகலாம் என்று எச்சரித்ததுடன் சரளமாக கெட்ட வார்த்தை பயன்படுத்தி வந்த கலையிடம் ''உங்களுக்கு பீப் சவுண்ட் போடதான் பிக்பாஸ் டீம் இருக்கா?” என்று கேள்விகளால் விளாசி இருந்தார்.
இதையடுத்து போன வாரத்திற்கான எவிக்ஷன் பிராஸஸ் நடைபெற்றது. இதில் பார்வதி, கமருதீன், கலையரசன், ஆரோரா மற்றும் வினோத் ஆகியோர் இடம்பெற்றிருந்த நிலையில், கலையரசன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

இதையடுத்து பார்வையாளர்கள் அனைவரும் அதிகமாக எதிர்பார்த்து இருந்த wild card entry நேரம் வந்தது. இந்த முறை நிஜ ஜோடிகளான பிரஜின் மற்றும் சாண்ட்ரா, சீரியல் நடிகை திவ்யா கணேஷ், சீரியல் நடிகர் அமித் பார்கவ் ஆகியோர் வீட்டிற்குள் சென்றுள்ளனர். ஏற்கனவே இருந்த போட்டியாளர்களிடம் சுவாரசியம் குறைவாக உள்ளது, கத்திகிட்டே இருக்காங்க போன்ற புகார்கள் அதிகமாக இருக்கும் நிலையில், உள்ளே சென்ற போட்டியாளர்களை வைத்து தனது ஆட்டத்தை ஆரம்பித்தார் பிக்பாஸ்.
இந்த வாரம் super deluxe வீடு, பிக்பாஸ் வீடு என்ற பிரிவினை இல்லாமல் ஒரே வீடாக மாற்றப்படுகிறது என்று அறிவித்தார் பிக்பாஸ். 'வீட்டு தல'-க்கு மட்டும் தனி அறை உண்டு. இதையடுத்து இந்த வாரத்திற்கான "வீட்டு தல" யார் என்று தேர்வு செய்ய வேண்டிய நேரம் வந்தது. இதிலும் twist வைத்த பிக்பாஸ், வீட்டிற்குள் wild card entryயாக வந்த நான்கு நபர்கள்தான் இந்த போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று அறிவித்தார்.

மேலும், தல-யை முடிவு செய்ய நடைபெற்ற "வலை வீசு வலை வீசு" என்ற டாஸ்கில் வெற்றி பெற்ற திவ்யா இந்த வாரத்திற்கான "வீட்டு தல"யாக தேர்வானார். இதனால், "வீட்டு தல" திவ்யா, wild card entry அமித் பார்கவ், பிரஜின் மற்றும் சாண்ட்ரா, ஏற்கனவே nomination free pass வைத்திருக்கும் கனி ஆகியாரை nominate செய்ய முடியாது என்று பிக்பாஸ் அறிவித்தார்.
அத்துடன் இந்த சீசனின் முதல் ஓபன் நாமினேஷன் நடைபெற்றது. இதில், வழக்கம்போல பார்வதியும், watermelon star திவாகரும் nominate ஆக, இவர்களுடன் சபரி, வியானா, விக்ரம், கெமி, துஷார், FJ, ரம்யா ஜோ, கமருதீன், பிரவீன் மற்றும் வினோத் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். இதையடுத்து, பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான "ஆஹா ஓஹோ hotel" என்ற weekly task ஆரம்பமானது. இந்த டாஸ்கில் கவலை கெடமா இருக்குற ஹோட்டல promote செய்ய மூன்று விருந்தினர்கள் வர போவதாக அறிவித்தார் பிக்பாஸ்.
மேலும் இந்த டாஸ்கில் manager திவ்யா, assistant manager பார்வதி, head chef சாண்ட்ரா, assistant chef - திவாகர், vessel washing மற்றும் entertainment manager விக்ரம் என போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒரு பொறுப்பு வழங்கப்பட்டது. அத்துடன் சிறந்த service செய்யும் நபருக்கு விருந்தினர்கள் star வழங்குவார் என்றும் அதிகம் star பெரும் போட்டியாளர் அடுத்த வாரத்திற்கான "வீட்டு தல" போட்டியில் பங்குபெறலாம் என்றும் பிக்பாஸால் அறிவிக்கப்பட்டது.

இந்த டாஸ்க்கிற்கு சிறப்பு விருந்தினராக வீட்டிற்குள் வந்தது பிக்பாஸின் முந்தைய போட்டியாளர்களாக பிரியங்கா, மஞ்சரி, தீபக். இவர்கள் வீட்டிற்குள் வந்ததும் பாருவை வம்பு இழுக்கும் வகையில் பேச, மற்ற போட்டியாளர்களிடம், "ஏதாவது பாட்டு பாடுங்க... நடனம் ஆடுங்க" என்று கூறி நிகழ்ச்சியை சுவாரசியமாக்க முயன்றனர். இதனிடையே எல்லோரும் ஒரு நிமிஷம் மௌனமா இருக்கலாமா என்று கூறி பிக்பாஸ் வீட்டையே அமைதி ஆக்கிய தருணம் பார்வையாளர்களின் மனதையும் ஆசுவாசப்படுத்தியது.

இந்நிலையில், "யாருக்கு எந்த வேல பாக்குறதுனே தெரியல உங்க staff எல்லாம் ரொம்ப confused ஆ இருக்காங்க" என்று திவ்யா-விடம் தீபக் கூற, "நாங்க guest எங்களுக்கு service வேண்டும்" என மஞ்சரி திவ்யாவிடம் கேட்கிறார். மேலும், மூன்று guestகளும் கொடுத்த feedback-ன் படி, "நெறைய விஷயங்கள் முரணா இருக்கு, சரி செய்ய மாற்றம் தேவை" என போட்டியாளர்களிடம் பிக்பாஸ் கேட்கும் காட்சிகள் இன்றைய ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது. இதில் சக போட்டியாளர்கள் "manager மாறினா நல்லா இருக்கும்" என கூறியதால், திவ்யா பணிமாற்றம் செய்யப்படும் காட்சிகள் இன்றைய ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.






