சினிமா

நெல்லையில் பிக்பாஸ் பிரபலம் நடிகர் தினேஷ் கைதா?: “இது எல்லாம் ஒரு நடிகரால்தான்” - அவரே சொன்ன விளக்கம்!

பிக்பாஸ் பிரபலம் நடிகர் தினேஷ் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியான நிலையில், அவர் இதுகுறித்து பேட்டியளித்துள்ளார்.

நெல்லையில் பிக்பாஸ் பிரபலம் நடிகர் தினேஷ் கைதா?: “இது எல்லாம் ஒரு நடிகரால்தான்” - அவரே சொன்ன விளக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழில் சின்னத்திரை பிரபலங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தினேஷ். இவர் கடந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 7-ல் ஒரு பங்கேற்பாளராக இருந்தார். சரவணன் மீனாட்சி பிரபலம் ரச்சிதாவின் முன்னாள் கணவரான இவர், பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

இந்த சூழலில் நடிகர் தினேஷ் மீது பண மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தண்டார்குளத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகளுக்கு மின்சாரத்துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் பணத்தை நடிகர் தினேஷுக்கு கொடுத்ததாகவும், 2022ல் கொடுத்த பணத்தை கேட்ட போதெல்லாம் ஏமாற்றி வந்ததாகவும், ஒரு கட்டத்தில் பணத்தை கேட்டு போன தன்னை தினேஷ் தாக்கியதாகவும் புகார் கொடுத்துள்ளார்.

இவரது புகாரின் பேரில் நடிகர் தினேஷ் கைது செய்யப்பட்டதாக இன்று தகவல் வெளியான நிலையில், தான் கைது செய்யப்படவில்லை என்றே, நடிகர் தினேஷே பேட்டியளித்துள்ளார்.

நெல்லையில் பிக்பாஸ் பிரபலம் நடிகர் தினேஷ் கைதா?: “இது எல்லாம் ஒரு நடிகரால்தான்” - அவரே சொன்ன விளக்கம்!

இதுகுறித்து நடிகர் தினேஷ் அளித்த பேட்டியில் :-

தன்னைக் கைது செய்ததாகச செய்தி பரவ, உடனே தினேஷ் ஒரு வீடியோ வெளியிட்டு, என்ன நடந்ததுன்னுப் பதிவு செஞ்சிருக்காரு. "இன்று காலையிலிருந்து என்னைப் பற்றி ஒரு செய்தி பரவி வருகிறது. அது முற்றிலும் தவறு. நான் போலீஸால் கைது செய்யப்பட இல்லை. என் மீது கொடுக்கப்பட்ட புகார் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஒரு நபர் மீது கடந்த சில வருடங்களுக்கு முன்னாள் மோசடி வழக்கை நான் தொடர்ந்து, தற்போது வரை அந்த வழக்கு திருநெல்வேலி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இப்போது தன் மேல் தொடரப்பட்ட பொய் வழக்கோட பின்னணி என்னன்னு தினேஷ் சொல்லும்போது, "என் மீது இப்பொது புகார் கொடுத்த நபர், நான் கடந்த 22ஆம் தேதி அந்த நபரைத் தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதே தேதியில் அதே மணியில் நான் நீதிமன்றத்தில் சில மணி நேரம் இருந்தேன். பின்னர் எனது வழக்கறிஞருடன் காரிலும் சென்றுகொண்டிருந்தேன்.

நெல்லையில் பிக்பாஸ் பிரபலம் நடிகர் தினேஷ் கைதா?: “இது எல்லாம் ஒரு நடிகரால்தான்” - அவரே சொன்ன விளக்கம்!

இதற்கான ஆவணம் என்னிடம் உள்ளது. இன்று காலை போலீஸ் அதிகாரி என்னிடம் விசாரிக்க வந்தபோது, அவரிடம் இதனை அனைத்தையும் நான் காட்டினேன். என்ன நடந்தது என்பது பற்றி இன்று பணகுடி போலீசார் விசாரித்தனர். அந்த புகாரில், அந்த நபர், நானும் எனது அப்பாவும் சேர்ந்து தாக்கியதாக கூறியுள்ளார். எனது அப்பாவுக்கு 75 வயதாகிறது. அவ்வளவு வயதானவர்,ஒருத்தரை தாக்கினால் என்று சொன்னால் அதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். எனவே இது முற்றிலும் ஜோடிக்கப்பட்ட வழக்கு.

இதற்கு முக்கியமானக் காரணம் என்னவென்றால், பணகுடி கிராமத்துக்கு அருகில் இருக்கும் 'நாய்க்குட்டி' என்ற படத்தில் நடித்திருக்கும் செல்வின் என்ற நடிகர்தான். அவரும் நான் தொடர்ந்த வழக்கில் எதிர் தரப்பாக இருக்கிறார். அதனால், நான் தொடர்ந்த அந்த வழக்கு அவருக்கு எதிராகத் திரும்புகிறது என்பதால், என் மீது இப்படி ஒரு அவதூறான, ஜோடிக்கப்பட்ட ஒரு வழக்கை போட்டிருக்கிறார்.

ஒரு நடிகர் என்றால் ஈஸியாக மிரட்டிவிடலாம், மீடியாவில் அவர் பெயரை கெடுத்துவிட்டால் அவருடைய வாழ்க்கை முடிந்துவிடும் என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அப்படி நடக்காது. நான் எதையும் சட்டப்படி சரியாக சந்திப்பேன்" என்றார்.

banner

Related Stories

Related Stories