ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர்வி க்ரம் சுகுமாரன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்த இவர் தனது பயணத்தின் தொடக்கமாக பாலுமகேந்திராவிடம் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கி இருக்கிறார். அதேபோல் 1999 இல் தொடங்கி 2000 வரை வெளியான கதை நேரம் வரிசையில் சுமார் 56 குறும்படங்களை இயக்கியிருக்கிறார்.
வெற்றிமாறன் இயக்கிய 'பொல்லாதவன்' படத்தில் நடிகராக அறிமுகமானார். கொடிவீரன் படத்திலும் நடித்திருக்கிறார். அதபோல் விக்ரம் சுகுமாரன் ’மதயானை கூட்டம்’, 'ராவணக்கோட்டம்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். மேலும் வெற்றிமாறனுடன் இணைந்து ’ஆடுகளம்’ திரைப்படத்திற்கு வசனம் எழுதி இருக்கிறார்.
ஏறு தழுவுதல் மையமாக வைத்து 'தேறும் போரும்' என்ற ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மாரடைப்பு காரணமாக விக்ரம் சுகுமாரன் உயிரிழந்தார். விக்ரம் சுகுமாரனின் திடீர் மரண செய்தி ரசிகர்கள் மற்றும் திரைதுறைவாசிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது பலரும் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சாந்தனு, ”அமைதியாக உறங்குங்கள் சகோதரா உங்களிடமிருந்து நான் பலமான விஷயங்களை கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு தருணத்தையும் நான் என்றும் நினைவில் வைத்திருப்பேன். நீங்கள் மிக விரைவாக விலகி விட்டீர்கள்” என்று தனது ஆழ்ந்த வருத்தத்துடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சில நாட்களுக்கு முன்புதான் நடிகர் ராஜேஷ் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் தற்பொழுது இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருப்பது திரைத்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.