திரையுலகின் உயரிய விருதாக கருதப்படும் Oscar விருது ஆண்டுதோறும் அறிவிக்கப்படும். இந்த விருந்தானது உலகம் முழுவதுமுள்ள படங்கள், அதன் வேலைகள் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் சிறந்தவை எது என்று பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டின் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 97-வது ஆஸ்கர் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. ஏமி விருது வென்ற தொலைக்காட்சி தொகுப்பாளரும், நகைச்சுவை நடிகருமான கெனைன் ஓ பிரைன் தொகுத்து வழங்கும் இந்த ஆஸ்கர் விழாவில், உலக அளவில் பல நாடுகளில் இருந்தும் நடிகர், நடிகைகள் மற்றும் திரைத்துறை கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

சிறந்த நடிகர், திரைப்படம், இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், ஆங்கிலத் திரைப்படமான 'அனோரா' திரைப்படம் மட்டும் இதுவரை 5 ஆஸ்கர் விருதுகளை வென்று அசதியுள்ளது.
அதாவது, சான் பேக்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அனோரா' திரைப்படமானது, சிறந்த திரைப்படம், இயக்கம், நடிகை, எடிட்டிங், திரைக்கதை, என மொத்தமாக 5 விருதுகளை குவித்துள்ளது.
அதாவது சிறந்த நடிகைக்காக மைக்கி் மேடிசன் (Mikey Madison), இயக்கம், திரைக்கதை, எடிட்டிங்கிற்காக சான் பேக்கர் (Sean Baker), சிறந்த படத்திற்காக தயாரிப்பாளர்கள் சான் பேக்கர், சமந்தா க்வான், அலெக்ஸ் கோகோ ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

அனோரா திரைப்படமானது ஏற்கனவே பல்வேறு விருதுகளை வென்றுள்ள நிலையில், தற்போது ஆஸ்கர் விருதையும், அதுவும் 5 விருதுகளை வென்றுள்ளது பலர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.
'அனோரா' திரைப்படமானது, பாரில் டான்சராக இருக்கும் 'அனோரா' என்ற பெண் பாலியல் தொழிலாளியும் இளைஞரும் காதல் வசப்பட்டு திருமணம் செய்து கொண்டு வாழ நினைக்கும் நேரத்தில், இளைஞரின் வசதியான பெற்றோர் இந்த காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அந்த எதிர்ப்புகளை இவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்? அதன்பின்னர் என்ன நடக்கிறது? கதாநாயகி அனோராவின் வாழ்க்கை என்ன ஆனது? என்பதை மிக அருமையாக எடுத்துரைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








