தமிழ்நாடு சேலம் மாவட்டம் அரிசி பாளையம் பகுதியில் 1932 ஆம் ஆண்டு அருணாச்சலம். ராஜம்மாள் ஆகியோர் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தவர் சகுந்தலா. இவர் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த ’சி.ஐ.டி சங்கர்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இந்த படம் அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. இதனால் சி.ஐ.டி சகுந்தலா என்ற அடைமொழி அவருக்கு கிடைத்தது. பின்னர் இவர் கதாநாயகியாகவும் வில்லியாகவும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 600க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக தமிழ் திரையில் கொடிக் கட்டிப் பறந்த ஜெய்சங்கர், சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் உள்ளிட்ட முன்னணி திரைப்பட நடிகர்களுடன் சகுந்தலா நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சின்னத்திரையில் நடித்து வந்துள்ளார்.
இந்நிலையில் பெங்களூருவில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி அவருக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் . ஆனால் சகுந்தலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து உயிரிழந்த சகுந்தலாவுக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.