சினிமா

BIGGBOSS வீடு : “படிப்பு முக்கியம் இல்லையா?..” - இணையத்தில் விவாதப் பொருளான கல்வி !

கல்வி குறித்து பிக்பாஸ் வீட்டில் ஜோவிகா பேசியுள்ளது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

BIGGBOSS வீடு : “படிப்பு முக்கியம் இல்லையா?..” - இணையத்தில்  விவாதப் பொருளான கல்வி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி 5 நாட்கள் நிறைவடைந்துள்ளன. இரு வீடு, இரு ரூல்ஸ் ஆனால் ஒரே கிட்சன் என்ற விதிமுறைகள், இந்த முறை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. 18 போட்டியார்களுடன் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில், போட்டியாளர்கள் அனைவருமே safe play தான் பண்ணுறாங்க என்று நான்கு நாட்கள் கடந்துவிட்டது. இந்த நிலையில்தான் பிக்பாஸ் வீட்டில் நேற்றைய தினம் போட்டியார்களின் சுயரூபம் வெளிவர தொடங்கியுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தனக்கு படிப்பு சரியாக வரவில்லை அதனால் 9ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டேன், நடிப்பதில் மிகுந்த ஆர்வம் இருப்பதால் அதில் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறேன் என ஜோவிகா கூறி இருந்தார். அப்போது, ஜோவிகாவுக்கு விசித்ரா மற்றும் யுகேந்திரன் ஆகியோர் அறிவுரை வழங்கி இருந்தனர். அதிலும் குறிப்பாக விசித்ரா, அனைவரும் 12ஆம் வகுப்பு வரையிலாவது கண்டிப்பாக படித்திருக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த கருத்து நேற்று பிக்பாஸ் வீட்டில் பெரும் சர்ச்சையாக உருமாறி இருந்தது.

ஜோவிகா தனது கல்வி பற்றி பேசவேண்டாம் என விசித்ராவிடம் கூறியும், அவர் திரும்ப திரும்ப பேசியது பிக்பாஸ் வீட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. எனக்கு படிப்பு வரவில்லை என்பதால் தான் நிறுத்தி விட்டேன், என்னை போன்று பலரும் இங்கு உள்ளனர். அவர்களுக்காகத்தான் நான் இங்கு வந்துள்ளேன், எல்லாருமே டாக்டர் ஆகி விட்டால், யார் கம்பவுண்டர் வேலை பார்ப்பது? இது போன்று காட்டாயப்படுத்தும் காரணங்களால் தான் மாணவர்கள் தவறான முடிவுக்கு செல்கின்றனர் என்று ஜோவிகா பேசி இருந்தார். இந்த கருத்துக்கு சக போட்டியாளர்கள் பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

BIGGBOSS வீடு : “படிப்பு முக்கியம் இல்லையா?..” - இணையத்தில்  விவாதப் பொருளான கல்வி !

பிக்பாஸ் வீட்டில் நடந்த இந்த சர்ச்சை மக்கள் மத்தியில் விவாத பொருளாக மாறியுள்ளது.

ஜோவிகாவின் இந்த கருத்துக்கு சிலர் ஆதரவு தெரிவித்து வந்தாலும், ஜோவிகா வசதி படைத்த வீட்டில் இருந்து வந்த பெண்; அவர் படிக்கவில்லை என்றாலும் அதனை அவர்களால் சாமளிக்க முடியும். ஆனால் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் இன்றைய இளையதலைமுறையினர் இதுபோன்ற கருத்துகளை முன்மாதிரியாக எடுத்து கொண்டால் அது அவர்களது குடும்பத்தையே பாதிக்கலாம் என்று சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.

கல்வியை குறித்து வள்ளுவர் காலத்தில் இருந்தே பேசப்பட்டு வருகிறது. ஒருவன் தனது செல்வங்கள் அனைத்தையும் இழந்துவிட்டாலும் கல்வி எப்பொழுதும் கைகூடும் என்ற நிலையும் இருந்துதான் வருகிறது. தற்போதுள்ள திரைப்படங்களில் கூட கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசப்பட்டு வருகிறது. "காடு இருந்தா எடுத்துக்குவாங்க, ரூபா இருந்த பிடிங்குக்குவாங்க, ஆனா படிப்ப மட்டும் உன் கிட்ட இருந்து எடுத்துக்குவே முடியாது" என்ற அசுரன் படத்தில் வரும் வசனம் பெரிய அளவில் கவனிப்பை பெற்றிருந்தது.

எந்த சூழலில் இருந்தாலும் வருங்காலத்தில் கல்வி நமக்கு பேருதுவியாக இருக்கும். கர்மவீரர் காமராசர் முதல் பலரும் படிக்காமல் வாழ்வில் பெரிய அளவில் உயர்ந்து இருந்தாலும் இன்றைய போட்டி மிகுந்த உலகில் அடிப்படை கேள்வி என்பது அவசியமானதாகவே கருதப்படுகிறது.

BIGGBOSS வீடு : “படிப்பு முக்கியம் இல்லையா?..” - இணையத்தில்  விவாதப் பொருளான கல்வி !

கல்வியின் முக்கியத்துவம் குறித்து தமிழ்நாடு அரசு பலவழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்கல்வியின் முக்கியத்துவத்தை பறைசாற்றும் வகையில், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் மூவலூர் இராமாமிர்தம் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்வி என்பது அழியாத மட்டுமல்ல, நம்மிடம் இருந்து எடுக்க முடியாத சொத்து என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

சமூக வலைதளங்களை அனைத்து வயதினரும் பயன்படுத்தி வருகின்றனர். இதில் பல கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது. அதில், நடைமுறைக்கு சாத்தியமான கருத்துகளை ஆராய்ந்து தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவரும் இருந்து வருகிறோம். எனவே ஒரு கருத்தை நாம் ஏற்றுக்கொள்ளும் முன் அதனை நன்கு ஆராய வேண்டும்.

- சீ. ரம்யா

banner

Related Stories

Related Stories