சினிமா

புது சீசன், புது விதிகள் : எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா பிக் பாஸ் சீசன் 7?

புது சீசன், புது விதிகள் : எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா பிக் பாஸ் சீசன் 7?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது!

ஏற்கனவே 6 சீசன்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது 7-வது சீசன் தொடங்கியிருக்கிறது.

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டிற்குள் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீணா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸ்ன், வினுஷா தேவி, மணிச்சந்திரா, அனுஷயா உதயக்குமார், ஜோவிகா விஜயகுமார், ஐஷு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லத்துரை, அனன்யா ராவ், விஜய் வர்மா ஆகிய 18 போட்டியாளர்கள் வந்துள்ளனர்.

‘என்ன பெரிய பிக்பாஸ், பிக்பாஸ்? எப்போதும் போல போட்டியாளர்கள் வந்து ‘Task செய்கிறேன்’ என்ற பெயரில் ரசிகர்கள் அனைவரையும் வெறுப்பேத்தி விட்டு கடையை சாத்தி விட்டு சென்று விடுவார்கள், அவ்வளவுதானே!’ என நீங்கள் சலித்துக் கொள்ளலாம். ஆனால் இம்முறை உங்களுக்கு ஒரு surprise!

புது சீசன், புது விதிகள் : எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா பிக் பாஸ் சீசன் 7?

பிற சீசன்களில் இருந்ததை போலன்றி, இதில் ஒரு வீடு இல்லை. இரண்டு வீடு!

ஒன்று பிக்பாஸ் வீடு, இன்னொன்று ஸ்மால் பாஸ் வீடு.

வழக்கமாக போட்டியாளர்கள் வீட்டிற்குள் வந்து ஆற அமர செட்டில் ஆன பின்னர் தான் பிக்பாஸ் தனது வேலையை ஆரம்பிப்பார். ஆனால் இந்த முறை போட்டியாளர்கள் நுழையத் தொடங்கும்போதே, வீட்டுக்கான கேப்டன்சி டாஸ்க் தொடங்கப்பட்டுவிட்டது. இதில் விஜய் வர்மா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். அடுத்ததாக கேப்டனை கவரத் தவறிய போட்டியாளர்கள் என சிலர் தேர்வு செய்யப்பட்டனர். பவா செல்லதுரை, நிக்ஸன், அக்‌ஷயா, ரவீனா, ஆயிஷா, வினுஷா ஆகிய அந்த 6 பேரும் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சுவாரஸ்யம் என்னவென்றால் ஸ்மால் பாஸ் வீட்டிலும் ஒரு ’குட்டி பாஸ்’ இருக்கிறார்.

புது சீசன், புது விதிகள் : எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா பிக் பாஸ் சீசன் 7?

ஆரவாரத்துடன் தொடங்கியிருக்கும் நிகழ்ச்சியில், ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல கூடாது என்றும் வீட்டை சுத்தம் செய்வது, பாத்ரூம் சுத்தம் செய்வது எல்லாம் அவர்களேதான் செய்யவேண்டும் என்றும் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் எப்போது காபி, டீ, ஸ்நாக்ஸ் கேட்டாலும் கொடுக்க வேண்டும் என்றும் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் சமையல் செய்ய தேவையில்லை என்றும் பல விதிகள் போடப்பட்டிருக்கின்றன.

புது சீசன், புது விதிகள் : எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா பிக் பாஸ் சீசன் 7?

நாமினேஷன் நடத்தப்பட்டது. அதில், பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களை நாமினேட் செய்தனர். அதே போல ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களை நாமினேட் செய்தனர். வயதில் மூத்தவர், மொழியில் பிரச்சனை, வலுவான போட்டியாளர் போன்ற பல காரணங்கள் நாமினேஷனுக்கு சொல்லப்பட்டன.

பவா செல்லதுரை, ஐஷு, அனன்யா ராவ், ரவீணா, யுகேந்திரன், பிரதீப், ஜோவிகா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருக்கின்றனர். யார் வீட்டில் இருந்து வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

உழைப்பு, சொகுசு என ஏற்கனவே நாட்டில் மக்கள் பிரிந்து கிடக்கையில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் அத்தகைய பிரிவை முன் வைக்கலாமா என்கிற கேள்வியும் நமக்கு தோன்றாமலில்லை. அடுத்தடுத்து வரும் அத்தியாயங்களே அந்த கேள்விக்கான பதிலுரைக்கும்.

- சீ. ரம்யா

banner

Related Stories

Related Stories