சினிமா

விழா மேடையில் பெண் தொகுப்பாளரிடம் அத்துமீறல்.. பகிரங்க மன்னிப்பு கேட்ட கூல் சுரேஷ்.. நடந்தது என்ன?

மன்சூர் அலிகானின் 'சரக்கு' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மேடையில் பெண் தொகுப்பாளரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட கூல் சுரேஷுக்குக் கண்டனங்கள் வலுத்து வருகிறது.

விழா மேடையில் பெண் தொகுப்பாளரிடம் அத்துமீறல்.. பகிரங்க மன்னிப்பு கேட்ட கூல் சுரேஷ்.. நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பிரபல நடிகர் மன்சூர் அலிகான் தயாரிப்பில் உருவாகும் படம்தான் ‘சரக்கு’. ஜெயக்குமார் என்பவர் இயக்கும் இந்த படத்தில் பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், கிங்ஸ்லி, பழ கருப்பையா, கூல் சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படபடபிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு இந்த படம் தயாராக இருக்கும் நிலையில், இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (செப்.19) சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், மன்சூர் அலிகான், கூல் சுரேஷ், உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பலரும் இந்த படத்தை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அந்த சமயத்தில் மேடையில் பேசிக்கொண்டிருந்த கூல் சுரேஷ், தன்னிடம் உள்ள மாலை ஒன்றை அருகில் இருந்த தொகுப்பாளனி கழுத்தின் சட்டென்று அணிவித்து விட்டார். இதனால் அங்கு சற்று சலசலப்பு ஏற்பட்டது.

விழா மேடையில் பெண் தொகுப்பாளரிடம் அத்துமீறல்.. பகிரங்க மன்னிப்பு கேட்ட கூல் சுரேஷ்.. நடந்தது என்ன?

அதாவது இந்த நிகழ்வில் பேசிக்கொண்டிருந்த கூல் சுரேஷ், “இங்கே இருக்கும் அனைவருக்கும் மாலை அணிவித்து விட்டீர்கள்.. ஆனால் ஒருவருக்கு மறந்து விட்டீர்கள்” என்று கூறிக் கொண்டே தனது கையில் இருந்த மாலையை அருகில் நின்றுக் கொண்டிருந்த அந்த நிகழ்ச்சியின் பெண் தொகுப்பாளர் கழுத்தில் அணிவித்து விட்டார்.

தொடர்ந்து “இவர் தான் இந்த நிகழ்ச்சியில் அனைவருக்கும் சிறந்த வரவேற்பு கொடுக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் புது புது வார்த்தைகளை கண்டுபிடித்து பேசி வருகிறார்” என்றார். இதனால் பெரும் அதிருப்தியடைந்த பெண் தொகுப்பாளர், கழுத்தில் போடப்பட்ட மாலையை சட்டென்று கழற்றி கீழே போட்டு தனது அதிருப்தியை தெரிவித்தார்.

இந்த சம்பவத்தால் அந்த நிகழ்ச்சியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கீழே அமர்ந்திருந்த பத்திரிகையாளர்கள், கூல் சுரேஷுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து நடிகர் மன்சூர் அலிகான், கூல் சுரேஷை பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வைத்தார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இணையவாசிகள் மத்தியில் பெரும் கண்டனத்தை எழுப்பியுள்ளது. மேலும் அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது திரை வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

banner

Related Stories

Related Stories