சினிமா

செல்ஃபிக்கு போஸ் கொடுக்காத நடிகர் மீது தாக்குதல் நடத்திய ரசிகர்கள்.. மும்பையில் அதிர்ச்சி!

செல்ஃபி எடுக்கும் போது தொலைக்காட்சி நடிகர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்ஃபிக்கு போஸ் கொடுக்காத நடிகர் மீது தாக்குதல் நடத்திய ரசிகர்கள்.. மும்பையில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாக்கிய லட்சுமி என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் ஆகாஷ் சவுத்ரி. இவர் மும்பையில் சாலையில் நடந்து சென்றபோது அவரது ரசிகர்கள் செல்ஃபி எடுக்க முயன்றனர்.

அப்போது அவர் நெருங்கி நின்று போஸ் கொடுக்காததால் ஆவேசமடைந்த ரசிகர்கள், அவர் நடந்து சென்றபோது பின்னால் தண்ணீர் பாட்டில் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவர் கடந்த ஜூலை மாதம் தான் சாலை விபத்து ஒன்றில் சிக்கினார். இந்த விபத்து குறித்து அப்போது பேசிய நடிகர் ஆகாஷ் சவுத்ரி, "எங்கள் கார் மீது டிரக் மோதியது. பின்னர் என்ன நடந்தது என்றே என்னால் உணர முடியவில்லை. நாங்கள் காயமின்றி வெளியே வந்தோம். இந்த விபத்தால் பல இரவுகள் என்னால் நிம்மதியாகத் தூக்கவே முடியவில்லை" என தெரிவித்திருந்தார்.

பொதுவாகவே நடிகர் உள்ளிட்ட பிரபலங்கள் பொது இடங்களில் இருக்கும் போது அவர்களுக்கு இடையூறு செய்யும் விதமாக அவர்களது ரசிகர்கள் செல்ஃபி எடுக்க முயற்சி செய்கிறார்கள். இதைச் சிலர் ஏற்றுக் கொண்டாலும் பலர் ஏற்றுக்கொள்வதில்லை. இதனால் அடிக்கடி ரசிகர்களுக்கும் அவர்களது பிரபலங்களுக்கும் இடையே இப்படியான பிரச்சனை எழுகிறது.

banner

Related Stories

Related Stories