சினிமா

இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் விஜய் மகன்.. படத்தைத் தயாரிக்கும் லைக்கா நிறுவனம் - கதை என்ன?

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படத்தின் மூலம் இயக்குநராக நடிகர் விஜய் மகன் அறிமுகமாக விருக்கிறார்.

இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் விஜய் மகன்..  படத்தைத் தயாரிக்கும் லைக்கா நிறுவனம் - கதை என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் நடிகர் விஜய். 1984ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த 'வெற்றி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார் நடிகர் விஜய்.

பின்னர் இவரை அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் 1993ம் ஆண்டு 'செந்தூரப் பாண்டி' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் செய்தார். அதிலிருந்து இன்று வரை 40 ஆண்டுகளுக்கு மேலாகவே நாயகனாகவே தமிழ் சினிமாவில் வளம் வந்து கொண்டு இருக்கிறார்.

எத்தனையோ வெற்றி தோல்விகள் சந்தித்து வந்தாலும் இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமும், ரசிகர் மன்றமும் உள்ளது. 'வாரிசு' படத்தை அடுத்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விரைவில் வெளிவர உள்ள 'லியோ' படத்தில் நடித்துள்ளார் விஜய். இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். இவர் "வேட்டைக்காரன்' திரைப்படத்தில் 'நா அடிச்சா தாங்க மாட்ட' பாடலில் நடிகர் விஜயுடன் சேர்ந்து நடனமாடினார். அதில் இருந்து தந்தையைப் போன்று மகனும் சினிமாவில் நடிகராக வருவார் என பலரும் எதிர்பார்த்தனர், இயக்குநர்களும் அவரை சந்தித்தனர்.

மேலும் 'பிரேமம்' இயக்குநர் அல்போன்சு புத்திரன் கதாநாயகனாக அறிமுகம் செய்வதற்காக ஒரு கதையும் சொல்லி இருந்தார். ஆனால் ஜேசன் சஞ்சய் மேற்படிப்பிற்காக வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டார்.

இவர் குறும்படங்களை இயக்கி வந்த நிலையில் லைகா நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்.

இதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் லைக்கா நிறுவனம் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளது. மேலும் லைக்கா நிறுவனத்துடன் ஜேசன் சஞ்சய் கையெழுத்திடும் படமும் வெளியாகியுள்ளது. இந்த படம் தற்போது வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் நடிகர்கள் யார் யார் என்பது விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories