சினிமா

“காதல் ரோஜாவே..”: இந்தியில் பாடிய பாடகர் ஹரிஹரன்.. தமிழில் பாடிய ஆடியன்ஸ்.. இலங்கையில் சுவாரஸ்யம்| Video

இலங்கையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் “காதல் ரோஜாவே..” பாடலை பாடகர் ஹரிஹரன் இந்தியில் பாடியபோது, அங்கிருந்த ரசிகர்கள் தமிழில் பாடியுள்ள நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“காதல் ரோஜாவே..”: இந்தியில் பாடிய பாடகர் ஹரிஹரன்.. தமிழில் பாடிய ஆடியன்ஸ்.. இலங்கையில் சுவாரஸ்யம்| Video
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழில் 1992-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் 'ரோஜா'. அரவிந்த் சாமி, மதுபாலா நடிப்பில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான இந்த படம் தற்போது வரை 90'ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த படமாக உள்ளது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் இன்றளவும் பலருக்கும் டாப் 10-ல் ஒன்றாக இருக்கிறது. இந்த பாடல்களின் ஹிட் மூலம் ஏ.ஆர்.ரகுமான் மேலும் பிரபலமானார்.

“காதல் ரோஜாவே..”: இந்தியில் பாடிய பாடகர் ஹரிஹரன்.. தமிழில் பாடிய ஆடியன்ஸ்.. இலங்கையில் சுவாரஸ்யம்| Video

அதில் குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் கே"காதல் ரோஜாவே.." பாடல். இந்த பாடலை மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பி. பாடியிருப்பார். இந்தியாவின் பல மொழிகளில் வெளியான இந்த பாடலை கேட்டால் அனைவரும் மெய்மறந்து போகும் அளவு அமைந்திருக்கும். இதனை பல மியூசிக் ஷோவிலும், இசை போட்டிகளிலும் போட்டியாளர்கள் பாடுவார். இந்த சூழலில் இந்த பாடலை பிரபல பாடகர் தனது இசை நிகழ்ச்சியில் பாடியுள்ளார்.

“காதல் ரோஜாவே..”: இந்தியில் பாடிய பாடகர் ஹரிஹரன்.. தமிழில் பாடிய ஆடியன்ஸ்.. இலங்கையில் சுவாரஸ்யம்| Video

பல ஹிட் பாடல்களை கொடுத்து இன்றளவும் பிரபல பாடகராக விளங்குபவர் ஹரிஹரன். இவரது குரலுக்கு என்றே தனி ரசிகர்கள் உள்ளனர். இதனாலே இவர் அடிக்கடி இசை நிகழ்ச்சி நடத்துவார். அப்போது ரசிகர்கள் ஆரவாரமாக கூடி மகிழ்வர். அந்த வகையில் தனது இசை நிகழ்ச்சியை கடந்த வாரம் இலங்கையில் நடத்தினார். இதற்கும் ரசிகர்கள் குவிந்தனர்.

அப்போது ஹரிஹரன் "காதல் ரோஜா.." பாடலின் இந்தி வெர்ஷனை பாடினார். இவர் பாடும்போது உற்ச்சாகமூட்டிய ரசிகர்கள், ஒரு கட்டத்தில் தமிழில் பாட தொடங்கினர். அதிலும் குறிப்பாக "என்னானதோ ஏதானதோ..சொல்..சொல்.. காதல் ரோஜாவே.. எங்கே நீ எங்கே..?" என்று முழுமையாக தமிழில் பாடத்தொடங்கினர்.

ரசிகர்களின் குரலுக்கு நடுவே ஹரிஹரனின் குரல் மறைந்து போக, அவரும் உடனே தமிழில் பாடினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அதற்கு ரசிகர்கள் பலரும் "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories