சினிமா

சினிமாவில் வாய்ப்பு: தாயை தொடர்ந்து மகள்.. வன்கொடுமை செய்த பிரபல இயக்குநர்.. சிறை பிடித்த கேரள போலீஸ் !

சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தாயையும், மகளையும் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பிரபல மலையாள இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சினிமாவில் வாய்ப்பு: தாயை தொடர்ந்து மகள்.. வன்கொடுமை செய்த பிரபல இயக்குநர்.. சிறை பிடித்த கேரள போலீஸ் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திரைத்துறையில் பாலியல் தொடர்பான அட்ஜெஸ்ட்மன்ட் நிகழ்வுகள் இருப்பதாக ஏற்கனவே பல செய்திகள் வெளிவந்த நிலையில், இது குறித்து அண்மைக்காலமாக சில நடிகைகள் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். தங்களுக்கும் இதே போல் பாலியல் தொந்தரவும் சினிமா துறையில் இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு ஒத்துழைப்பு வழங்கினால், அவர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும்; இல்லையெனில் அவர்கள் புறக்கணிப்படுவார்கள் என்றும் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். இந்த சூழலில் தற்போது இதே போல் ஒரு சம்பவத்தின் கேரளாவை சேர்ந்த பிரபல இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளார். 36 வயதான அவர் சிறுமிக்கு சினிமா வாய்ப்பு கொடுப்பதாக கூறி வன்கொடுமை செய்துள்ளார்.

சினிமாவில் வாய்ப்பு: தாயை தொடர்ந்து மகள்.. வன்கொடுமை செய்த பிரபல இயக்குநர்.. சிறை பிடித்த கேரள போலீஸ் !

மலையாளத்தில் கடந்த மே 26-ம் தேதி வெளியான திரைப்படம் தான் 'பைனரி' (Binary). கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படத்தை ஜாசிக் அலி (Jasik Ali) என்பவர் இயக்கியுள்ளார். 36 வயதான இவர் கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள நடக்கடவு என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். இந்த சூழலில் இவர் தனது அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி 18 வயதுக்கு கீழ் உள்ள இளம்பெண் ஒருவரிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

அந்த பெண்ணும் தான் திரையுலகில் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்தில், அவருடன் ஷூட்டிங்கிற்காக பகுதிகள் பார்க்க செல்வதாக எண்ணி பல இடங்களுக்கு சென்றுள்ளார். அப்போது ஒரு முறை தங்குவதற்காக அந்த பகுதி லாட்ஜ் ஒன்றில் ரூம் புக் செய்துள்ளார். அந்த சமயத்தில் அந்த இளம் பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

சினிமாவில் வாய்ப்பு: தாயை தொடர்ந்து மகள்.. வன்கொடுமை செய்த பிரபல இயக்குநர்.. சிறை பிடித்த கேரள போலீஸ் !

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், இந்த சம்பவம் குறித்து தனது தாயாரிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் உடனடியாக இயக்குநர் ஜாசிக் அலி மீது கோயிலாண்டி காவல் நிலைலத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அவர்கள் ஜாசிக் அலியை தேடி வந்தனர். ஆனால் அதற்குள்ளும் அவர் தலைமறைவாகி விட்டார்.

இந்த நிலையில் நடக்கடவு பகுதியில் உள்ள தனது வீட்டில் தலைமறைவாக இருந்த இயக்குநர் ஜாசிக் அலியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட இளம்பெண் 18 வயது நிரம்பாதவர் என்பதால் குற்றம்சாட்டப்பட்ட இயக்குநர் மீது போக்ஸோ வழக்கும் இருக்கிறது.

முன்னதாக இதே பெண்ணின் தாயாருக்கு மிரட்டல் விடுத்ததாக போலிசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் ஜாசிக் அலி வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories