சினிமா

25 வயது பிரபல நடிகருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு.. திரையுலகில் மீண்டும் சோகம்.. கண்ணீரில் ரசிகர்கள்!

தமிழ் மற்றும் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்த பிரபல நடிகர் பவன் (25) மாரடைப்பால் உயிரிழந்தார்.

 25 வயது பிரபல நடிகருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு.. திரையுலகில்  மீண்டும் சோகம்.. கண்ணீரில் ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

அண்மை காலமாக இளம் வயதுடையோருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து வரும் செய்திகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட, நடனமாடும்போது, ஓடும்போது என கல்லூரி மாணவர்கள் சுருண்டு விழுந்து உயிரிழந்து வருகின்றனர். அதற்கு காரணமாக மாரடைப்பு என்று மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது பிரபல 25 வயது நடிகர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் பவன். 25 வயது இளைஞரான இவர், இளம் நடிகராக அறியப்படுகிறார். இவர் கன்னடத்தை விட தமிழ், இந்தி தொலைக்காட்சிகளில் நடித்துள்ளார்.

 25 வயது பிரபல நடிகருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு.. திரையுலகில்  மீண்டும் சோகம்.. கண்ணீரில் ரசிகர்கள்!

இந்தியில் அநேக வாய்ப்புகள் கிடைக்கவே, இவர் மும்பைக்கு குடியேறியுள்ளார். இந்த சூழலில் இவருக்கு நேற்று அதிகாலை நேரத்தில் சுமார் 5 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது அவரது உடல் சொந்த மும்பையில் இருந்து ஊரான கர்நாடகாவின் மாண்டியாவுக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

இவரை பிரிந்து வாடும் கும்பத்தினருக்கு, அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இளம் நடிகர் பவன் உயிரிழந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 25 வயது பிரபல நடிகருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு.. திரையுலகில்  மீண்டும் சோகம்.. கண்ணீரில் ரசிகர்கள்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட பிரபல கன்னட நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா, வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். விஜய் ராகவேந்திரா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜிம்மில் பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த புனித் ராஜ்குமாரின் உறவினர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories