சினிமா

“Romantic Hero-வாக பார்க்க ஆசைப்பட்டவர்களுக்காக..” - வெளியானது விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தின் போஸ்டர் !

விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

“Romantic Hero-வாக பார்க்க ஆசைப்பட்டவர்களுக்காக..” - வெளியானது விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தின் போஸ்டர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் விஜய் ஆண்டனி. 2005-ல் விஜய் நடிப்பில் வெளியான 'சுக்ரன்' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், அதன்பிறகு பல்வேறு படங்களுக்கு இசையமைத்தார். வெறும் இசைத்துறையில் மட்டும் ஆர்வம் இல்லதாவராக இருக்கும் இவர், 2006-ம் ஆண்டு வெளியான 'கிழக்கு கடற்கரை சாலை' படத்தில் சிறப்பு தோற்றத்தில் திரையில் அறிமுகமானார்.

அதன்பிறகு 2012-ல் ஜீவா சங்கர் இயக்கத்தில் வெளியான 'நான்' படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர், தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், எமன், சைத்தான், பிச்சைக்காரன் என பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இதில் சசி இயக்கத்தில் வெளியான 'பிச்சைக்காரன்' படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்று தந்ததோடு, அந்த படம் நல்ல லாபமும் ஈட்டியது.

“Romantic Hero-வாக பார்க்க ஆசைப்பட்டவர்களுக்காக..” - வெளியானது விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தின் போஸ்டர் !

விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. ரித்திகா சிங், காவ்யா தப்பர், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் நடித்த இந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அண்மையில் வெளியான 'கொலை', 'தமிழரசன்' ஆகிய படங்கள் பெரிதளவு பேசப்படவில்லை.

இருப்பினும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இதனிடையே இவர் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை உருவாக்கி படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் இவரது படமான பிச்சைகாரன், திமிரு பிடிச்சவன், கோடியில் ஒருவன், பிச்சைக்காரன் 2, தமிழரசன் ஆகிய படங்களை தயாரித்துள்ளார். அந்த வரிசையில் இவரது அடுத்த படத்தையும் இவரே தயாரிக்கவுள்ளார்.

“Romantic Hero-வாக பார்க்க ஆசைப்பட்டவர்களுக்காக..” - வெளியானது விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தின் போஸ்டர் !

இந்த நிலையில், இவரது அடுத்த படமான 'ரோமியோ' படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது. விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிருணாளினி நடிக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு மணிமாறன் திருநாவுக்கரசு, வினோத் கணேஷ் ஆகியோர் வசனம் எழுதியுள்ளனர்.

“Romantic Hero-வாக பார்க்க ஆசைப்பட்டவர்களுக்காக..” - வெளியானது விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தின் போஸ்டர் !

Good Devil-ஆக இருக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையையொட்டி வெளியாகவுள்ளது. இந்த போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள விஜய் ஆண்டனி, "என்னை romantic hero-வாக பார்க்க ஆசைப்பட்ட மக்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடகவியல் நண்பர்களுக்கும் நன்றி. உங்கள் வேண்டுதல் பலித்துவிட்டது." என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories