சினிமா

T68 Update: முதலில் தயாரிப்பு.. இப்போ நடிப்பு அதுவும் முதல் படமே.. விஜயுடன் இணையும் தோனி? -ரசிகர்கள் குஷி

விஜய் 68 படத்தில் கிரிக்கெட் வீரர் தோனி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது.

T68 Update: முதலில் தயாரிப்பு.. இப்போ நடிப்பு அதுவும் முதல் படமே.. விஜயுடன் இணையும் தோனி? -ரசிகர்கள் குஷி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக அறியப்படுபவர் வெங்கட் பிரபு. இவரது இயக்கத்தில் உருவான சென்னை 28 - 1&2, கோவா, சரோஜா, மங்காத்தா உள்ளிட்ட படங்கள் மாஸ் ஹிட் கொடுத்தது. தொடர்ந்து இவரது இயக்கத்தில் சிம்புவின் கம் பேக் படமாக கருதப்படும் 'மாநாடு' படம் வெளியானது. இது சிம்புவுக்கு மட்டுமல்ல வெங்கட் பிரபுவுக்கும் கம் பேக் என ரசிகர்களால் கூறப்பட்டது.

இதனிடையே இவர் இயக்கிய படங்கள் சிலவை பெரிதாக பேசப்படவில்லை என்றாலும், மாநாடு படத்துக்கு பிறகு இவரது அடுத்த படம் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்த சூழலில் இவர் விஜயின் 68-வது படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இதுகுறித்து வெங்கட் பிரபுவே 'கனவு நிஜமானது' என்று ட்வீட் செய்து போஸ்டரை வெளியிட்டார்.

T68 Update: முதலில் தயாரிப்பு.. இப்போ நடிப்பு அதுவும் முதல் படமே.. விஜயுடன் இணையும் தோனி? -ரசிகர்கள் குஷி

அதன்படி விஜயின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளது உறுதியானது. AGS நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். ஏற்கனவே 2003-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'புதிய கீதை' படத்துக்கு இசையமைத்துள்ளார். இதன்மூலம் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய் படத்துக்கு யுவன் இசையமைக்கவுள்ளார்.

T68 Update: முதலில் தயாரிப்பு.. இப்போ நடிப்பு அதுவும் முதல் படமே.. விஜயுடன் இணையும் தோனி? -ரசிகர்கள் குஷி

இந்த நிலையில், விஜய் 68 படத்தில் விஜயுடன் பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் ஆனந்த அதிர்ச்சியில் உள்ளனர். இருப்பினும் இதுகுறித்து படக்குழு எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை. இந்த தகவல் உண்மையாக வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

T68 Update: முதலில் தயாரிப்பு.. இப்போ நடிப்பு அதுவும் முதல் படமே.. விஜயுடன் இணையும் தோனி? -ரசிகர்கள் குஷி

முன்னதாக தோனி மற்றும் அவரது மனைவி சேர்ந்து உருவாக்கிய 'தோனி எண்டர்டெயின்மென்ட்' தயாரிப்பு நிறுவனம் சார்பில் முதல் படமே, அதுவும் தமிழ் படமான ’LGM’ (Lets Get Married) என்ற படத்தை தயாரித்து சமீபத்தில் வெளியிட்டனர். ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

மேலும் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின்போது, தோனிக்கு நடிப்பதில் ஆர்வம் இருப்பதாகவும், அவர் விளம்பர படங்களில் நடித்ததால், படத்தில் நடிப்பது பெரிய பிரச்னையாக இருக்காது என்றும் அவரது மனைவி சாக்ஷி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories