சினிமா

அமிதாப், ரஜினி, ஷாருக், அஜித், பிரபாஸ்.. இப்போ.. - ‘DON’ குரூப்பில் இணைந்த புது நடிகர்.. ரசிகர்கள் குஷி!

ஷாருக் நடிப்பில் பிரபலமான டான் திரைப்படத்தின் 3-வது பாகத்தில் நடிகர் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

அமிதாப், ரஜினி, ஷாருக், அஜித், பிரபாஸ்.. இப்போ.. - ‘DON’ குரூப்பில் இணைந்த புது நடிகர்.. ரசிகர்கள் குஷி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பிரபல பாலிவுட் இயக்குநர் ஃபர்ஹான் அக்தர் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 2006-ல் வெளியான படம்தான் 'Don'. 1978-ல் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான 'டான்' படத்தின் நியூ வெர்ஷனாக அமைந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் அடுத்த பாகம் Don-2 வெளியாகி ரசிகர்கள் மடியில் அமோக வரவேற்பை பெற்றது.

இந்த இரண்டு பாகங்களிலும் ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் நடித்தனர். வில்லன் மற்றும் ஹீரோ என்று இரண்டு பாத்திரங்களில் நடித்த ஷாரூக்கிற்கு இந்த படம் பெரிய திருப்புமுனையாகவே அமைந்திருந்தது. 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் 3-வது பாகம் எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

அமிதாப், ரஜினி, ஷாருக், அஜித், பிரபாஸ்.. இப்போ.. - ‘DON’ குரூப்பில் இணைந்த புது நடிகர்.. ரசிகர்கள் குஷி!

எனினும் அதற்கான சரியான நேரம் இல்லை என்பதால் இதன் 3-வது பாகம் கிடப்பில் போட பட்டது. மேலும் இந்த படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இதுகுறித்த தகவல் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்த சூழலில் சுமார் 12 வருடங்களை தாண்டி டான் 3 படத்தின் அப்டேட் அண்மையில் வெளியானது.

நீண்ட வருடங்களுக்கு பின்னர் இதன் அப்டேட் வெளியான நிலையில், இந்த படத்திலும் ஷாருக் நடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் இந்த படத்தில் ஷாருக் நடிக்க மாட்டார் என்ற தகவல் வெளியானது. மேலும் இதில் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளார் என்றும் சொல்லப்பட்டது. இதுகுறித்த படக்குழுவினர் எந்த தகவலும் வெளியிடாமல் இருந்த நிலையில், தற்போது இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி டான் 3 படத்தின் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் மோஷன் டீசரும் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ரன்வீர் சிங் டானாக காட்சியளிக்கிறார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. ஒரு புறம் ஷாருக்கை மிஸ் பண்ணும் ரசிகர்கள் இருந்தாலும், மறுபுறம் ரன்வீர் சிங் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அமிதாப், ரஜினி, ஷாருக், அஜித், பிரபாஸ்.. இப்போ.. - ‘DON’ குரூப்பில் இணைந்த புது நடிகர்.. ரசிகர்கள் குஷி!

டான் படம் 1978-ல் சலிம் - ஜாவத் உருவாக்கத்தில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியானது. தொடர்ந்து இந்த படம் தமிழில் 1980-ல் ரஜினி நடிப்பில் பில்லா படமாக ரீ-மேக் செய்யப்பட்டது. இதையடுத்து ஷாருக் நடிப்பில் டான் என்று அதே பெயரில் 2006-ல் வெளியானது. அதே போல் தமிழில் 2007-ல் அஜித் நடிப்பில் 'பில்லா' என்ற பெயரில் வெளியானது. தொடர்ந்து தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் 2009-ல் பில்லா என்ற பெயரில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories