சினிமா

Heart of Stone : “இது படத்துக்கு கிடைத்த அதிர்ஷ்டம்..” - ஆலியா பட்டிடம் Wonder Woman நெகிழ்ச்சி !

நடிகை ஆலியா பட் தான் கர்ப்பமாக இருக்கும்போது தான் ஹாலிவுட் படமான Heart of Stone படத்தில் நடித்ததாக பகிர்ந்துள்ளார்.

Heart of Stone : “இது படத்துக்கு கிடைத்த அதிர்ஷ்டம்..” - ஆலியா பட்டிடம் Wonder Woman நெகிழ்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் மிக முக்கியமாக இருப்பவர் நடிகை ஆலியா பட். இவருக்கும் நடிகர் ரன்பீர் கபூருக்கும் கடந்த ஆண்டு திருமணமானது. இதையடுத்தும் இருவருமே படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர்களது நடிப்பில் 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வெறும் 10 நாட்களில் 100 கோடி தாண்டி வசூல் சாதனை படைத்தது வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த படத்தை இயக்கிய இயக்குநர் கரண் ஜோஹரும் மிகவும் உற்சாகத்தில் உள்ளார். தற்போது இவர் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளார். இந்த சூழலில் இவரது நடிப்பில் அடுத்து ஹாலிவுட் திரைப்படமான் 'Heart of Stone' என்ற படம் வெளியாகவுள்ளது.

Heart of Stone : “இது படத்துக்கு கிடைத்த அதிர்ஷ்டம்..” - ஆலியா பட்டிடம் Wonder Woman நெகிழ்ச்சி !

பாலிவுட், டோலிவுட் படம் என அறிமுகமான இவர் ஹாலிவுட்டிலும் அறிமுகமாகவுள்ளார். அதன்படி டாம் ஹார்பெர் இயக்கத்தில் ஹாலிவுட்டின் பிரபல நடிகையான 'Wonder Woman' புகழ் கேல் கடோட், '50 Shades' புகழ் ஜேமி டோர்னன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'Heart of Stone' என்ற படத்தில் ஆலியா பட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி Netflix ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இந்த படத்தை கேல் கடோட்டே தயாரித்துள்ளார்.

Heart of Stone : “இது படத்துக்கு கிடைத்த அதிர்ஷ்டம்..” - ஆலியா பட்டிடம் Wonder Woman நெகிழ்ச்சி !

இந்த நிலையில், இந்த படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சில ப்ரோமோஷன்கள் நடைபெற்று வருகிறது. எனவே இது தொடர்பாக Youtube சேனல் உள்ளிட்டவற்றிக்கு நடிகர்கள் பேட்டி அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஆலியா பட் அண்மையில் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில் தனது கர்ப்பம் குறித்த நிகழ்வை பற்றியும் பகிர்ந்துள்ளார்.

Heart of Stone : “இது படத்துக்கு கிடைத்த அதிர்ஷ்டம்..” - ஆலியா பட்டிடம் Wonder Woman நெகிழ்ச்சி !

இதுகுறித்து பேசிய நடிகை ஆலியா பட், "'Heart of Stone' படத்தின் நடிக்க ஒப்பந்தமாகி, படப்பிடிப்பு தொடங்கும் நிலையில் தான், எனக்கு நான் கர்ப்பமானது தெரியும். இதனால் ஆரம்பத்தில் இந்த படத்தில் நடிப்பது குறித்து யோசிக்கவும் செய்தேன். ஏனென்றால் இந்த படத்தில் எனக்கு நிறைய ஆக்ஷன் சீன்கள் இருந்தது. எனவே இது குறித்து நிச்சயம் கேல் கடோட்டிடம் கூற வேண்டும் என்று எண்ணினேன். ஒருவேளை இதனால் சற்று படத்தின் சீன்களில் தளரவுகள் இருக்க கூடும் என்று எண்ணினேன்.

எனவே அவருக்கு போன் செய்து நான் கர்ப்பமான விஷயத்தை தெரிவித்தேன். இதனை கேட்டதும் அவர் மிகவும் மகிழ்ச்சியில் இருந்தார். அதுமட்டுமின்றி அவர் எனக்கு உறுதுணையாகவும், பாசிட்டிவ் வார்த்தைகளையும் தெரிவித்தார். எல்லாவற்றிற்கும் மேலாக இது திரைப்படத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்று கூறினார்.

Heart of Stone : “இது படத்துக்கு கிடைத்த அதிர்ஷ்டம்..” - ஆலியா பட்டிடம் Wonder Woman நெகிழ்ச்சி !

அவர் கூறிய வார்தைகள் எனக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. எனவே நானும் படப்பிடிப்பில் கலந்துகொண்டேன். அவர் என்னை நன்றாக பாதுகாப்பாக அரவணைத்து கவனித்துக்கொண்டார்." என்றார். இந்த செய்தி தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ஆலியா பட் - ரன்பீர் கபூர் தம்பதிக்கு கடந்த நவம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories