சினிமா

"கலைஞர் இறந்த பிறகு நான் அனாதை ஆனதைப் போல உணர்ந்தேன் " -நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேச்சு !

எல்லாரும் பேனாவில் மை ஊற்றி எழுதும் போது, நெருப்பாற்றை பேனாவில் ஊற்றி எழுதியவர் கலைஞர் என நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கூறியுள்ளர்.

"கலைஞர் இறந்த பிறகு நான் அனாதை ஆனதைப் போல உணர்ந்தேன் " -நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேச்சு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் கழகம் சார்பில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட இளைஞரணியின் முன்னாள் அமைப்பாளர் மகேஷ்குமார் தலைமையில், கொளத்தூர் ஜி.கே.எம் காலணி மைதானத்தில் "கலையின் சாதனை கலைஞர், காலம் வியக்கின்ற தலைவர்" என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் ஜெயம் ரவி, நடிகர் எம்எஸ்.பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இதில் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன தலைவர் ப.ரங்கநாதன், கொளத்தூர் பகுதிச் செயலாளர்கள், நாகராஜன், ஐ.சி.எப்.முரளி, சென்னை மாநகராட்சி 6-வது மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ் குமார், சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்" தலைவன், தமிழின தலைவர், முதலமைச்சர் என கலைஞரை எப்படி அழைத்தாலும் அவர் எப்போதும் எனக்கு அப்பா தான், 3 பேர் மறைவு எய்திய போது நான் மிகவும் பாதிக்கப்பட்டேன், ஒன்று எனது தந்தை, 2 வது சிவாஜி அப்பா, 3 வது கலைஞர் அப்பா. அவர்கள் இருவர் இறந்த போதும் நான் அனாதை ஆனது இல்ல, ஆனால் கலைஞர் அப்பா இறந்த பிறகு நான் முழுவதும் அனாதை ஆனேன்.

"கலைஞர் இறந்த பிறகு நான் அனாதை ஆனதைப் போல உணர்ந்தேன் " -நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேச்சு !

எல்லாரும் பேனாவில் மை ஊற்றி எழுதும் போது, நெருப்பாற்றை பேனாவில் ஊற்றி எழுதியவர் கலைஞர், புறநானூறு, குரளோவியம் என எதை கூறுவது. தமிழை தமிழாக பேசுவதற்கு கற்று கொடுத்தவர் எங்கள் அப்பா கலைஞர், எனக்கு 3 தகப்பனார், என் அப்பா, கலைஞர், சிவாஜி, என் அப்பா அடித்து சொல்லிக் கொடுத்தார், கலைஞர் அப்பா படித்து சொல்லி கொடுத்தார், சிவாஜி அப்பா நடித்து சொல்லி கொடுத்தார்.

தமிழ்நாடு அரசின் சிறந்த குணச்சித்திர விருது கலைஞர் அப்பா கையில் பெற்று இருந்தேன் என்ற பெருமையை விட வேறு என்ன பெருமை வேண்டும். நான் கலைஞர் அப்பா எழுத்தில் நடித்து விட்டேன், அண்ணன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடித்த குறிச்சி மலரிலும் நடித்து விட்டேன், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடனும் நடித்து விட்டேன்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories