சினிமா

சுதா கொங்கரா பிறந்தநாள்.. மீண்டும் இணையும் குழு.. 'சூர்யா 43' Update கொடுத்த ஜி.வி. பிரகாஷ் !

சுதா கொங்கரா பிறந்தநாள்.. மீண்டும் இணையும் குழு..  'சூர்யா 43' Update கொடுத்த ஜி.வி. பிரகாஷ் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'சூரரைப்போற்று'. இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஊர்வசி, காளி வெங்கட்,உடுமலை கலாம், கிருஷ்ணகுமார் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட திரைபிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருந்தார்.

இந்தியாவின் முதல் ஜெட் விமானத்தை உருவாக்கிய GR கோபிநாத் என்பவரின் வாழ்க்கை வரலாற்று புத்தகமான 'Simply Fly: A Deccan Odyssey' என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம், சூர்யாவின் 2D entertainment தயாரிப்பு நிறுவனம் தயாரித்து இருந்தது. மேலும் இந்த படம் வெளியான போது கொரோனா நேரம் என்பதால் நேரடியாக amazon prime ஓடிடி-யில் வெளியானது.

சுதா கொங்கரா பிறந்தநாள்.. மீண்டும் இணையும் குழு..  'சூர்யா 43' Update கொடுத்த ஜி.வி. பிரகாஷ் !

இந்த படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர், நடிகை, இயக்குநருக்கான Behindwoods Gold Icon Awards, Blacksheep Digital Awards, Indian Film Festival of Melbourne உள்ளிட்ட பல விருதுகளை சூர்யா, அபர்ணா, சுதா கொங்கரா பெற்றனர்.

அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த படம், இயக்குநர், நடிகர், நடிகை, இசை, ஒளிப்பதிவாளர், பின்னணி பாடகர் உள்ளிட்ட விருதுகளை வென்றது. தொடர்ந்து ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்த படமானது, கடந்த ஆண்டு நடைபெற்ற 68-வது தேசிய திரைப்பட விருதுகள் 2020-க்கான சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும், சிறந்த நடிகைக்கான விருதை அபர்ணாவும், சிறந்த இசையமைப்பாளர் விருதை இந்த படத்திற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷும், திரைக்கதை எழுதிய சுதா கொங்கராவும் பெற்றனர்.

சுதா கொங்கரா பிறந்தநாள்.. மீண்டும் இணையும் குழு..  'சூர்யா 43' Update கொடுத்த ஜி.வி. பிரகாஷ் !

தொடர்ந்து இந்த படம் பட்டி தொட்டி எங்கும் பேச, இதனை இந்தியில் ரீ-மேக் செய்து வருகிறது. இதில் சூர்யா கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடித்து வரும் நிலையில், இந்த படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைக்கிறார். அதோடு சுதா கொங்கரா தான் இயக்குகிறார். மீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் சூரரைப் போற்று இந்தி வெர்ஷனை காண ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருக்கின்றனர்.

சுதா கொங்கரா பிறந்தநாள்.. மீண்டும் இணையும் குழு..  'சூர்யா 43' Update கொடுத்த ஜி.வி. பிரகாஷ் !

இந்த சூழலில் இவர் தனது அடுத்த படத்தை மீண்டும் சூர்யாவை வைத்து இயக்கவுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். இதனை ஜி.வி பிரகாஷும் தனது ட்விட்டர் பக்கத்தில் மறைமுகமாக குறிப்பிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சுதா கொங்கராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.. சூரரைப்போற்று இந்தி பதிப்பில் நீங்கள் செய்த மேஜிக்கை உலகம் காண காத்திருக்கிறேன்... பாலிவுட்டே திகைக்கப் போகுது, அதற்குப் பிறகு தமிழில் இது... " என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சுதா கொங்கரா பிறந்தநாள்.. மீண்டும் இணையும் குழு..  'சூர்யா 43' Update கொடுத்த ஜி.வி. பிரகாஷ் !

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த சுதா, தனது அடுத்த படம் சூர்யாவுடன் என்றும், அதற்கு ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், விரைவில் அதற்கான பணி தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். தற்போது சூர்யா வணங்கான், வாடிவாசல் கங்குவா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதை தொடர்ந்து சூர்யா தனது 43-வது படத்தில் சுதா கொங்கராவுடன் மீண்டும் இணையவுள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories