சினிமா

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த இளம் நடிகை: சோகத்திலும் பெற்றோர் செய்த நெகிழ்ச்சி -கண்கலங்கிய ரசிகர்கள்

பிரபல கொரிய இளம் நடிகை படிக்கட்டில் இருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த இளம் நடிகை: சோகத்திலும் பெற்றோர் செய்த நெகிழ்ச்சி -கண்கலங்கிய ரசிகர்கள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தென் கொரியாவை சேர்ந்தவர் பார்க் சூ ர்யூன் என்ற நடிகை. ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்த இவர், அதன்பிறகு மியூசிக் ஆல்பத்தில் நடிப்பதில் வாய்ப்பு கிடைத்து நடிக்க தொடங்கினார். தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு Il Tenore என்ற மியூசிக் ஆல்பத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். தனது முதல் ஆல்பத்திலே பிரபலமான இவர் தொடர்ந்து நடிக்க தொடங்கினார். மேலும் Snowdrop, Siddhartha, Finding Mr. Destiny, The Days We Loved என பலவற்றில் தோன்றியுள்ளார்.

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த இளம் நடிகை: சோகத்திலும் பெற்றோர் செய்த நெகிழ்ச்சி -கண்கலங்கிய ரசிகர்கள்

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் முன்தினம், பார்க் சூ ர்யூன் வீட்டில் வேலை தனது வேலையை முடித்து விட்டு படிக்கட்டுகளில் இறங்கும் போது நிலைதடுமாறி தவறி கீழே விழுந்துள்ளார். இதனை கண்ட பெற்றோர் உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கே அவர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த இளம் நடிகை: சோகத்திலும் பெற்றோர் செய்த நெகிழ்ச்சி -கண்கலங்கிய ரசிகர்கள்

எனினும் அவருக்கு சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் இறந்தும் விட்டார். இதனை கேட்டு அதிர்ந்த பெற்றோர், கதறி அழுதனர். மேலும் தனது மகள் இல்லையென்றாலும், அவரால் மற்றவர்கள் நன்றாக இருக்கட்டும் என நினைத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர்.

அதன்படி அவரது முக்கிய உறுப்புகளை எடுத்த பிறகு, அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இளம் வயதில் பிரபல நடிகை உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரசிகர்கள் திரை பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories