சினிமா

டக்கர் முதல் The Flash வரை.. ஜூன் மாதம் தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன ? பட்டியல் இதோ !

ஜூன் மாதம் வெளியாகவிருக்கும் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

டக்கர் முதல் The Flash வரை.. ஜூன் மாதம் தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன ? பட்டியல் இதோ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தற்போதுள்ள காலகட்டத்தில் பல்வேறு மொழிப்படங்களையும் மக்கள் ரசிக்கிறார்கள். உலகம் முழுக்க நாள்தோறும் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மொழியிலும் குறைந்தது ஒரு படமாவது வெளியாகும். அந்த வகையில் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு ஒரு திரைப்படம் வெளியானால், கூடவே இன்னும் ஒரு படமாவது வெளியாகும்.

டக்கர் முதல் The Flash வரை.. ஜூன் மாதம் தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன ? பட்டியல் இதோ !

அந்த வகையில் ஜூன் மாதம் தமிழில் பல படங்கள் வெளியாகவுள்ளது. அதன்படி,

ஜூன் 9 -

விமானம் :

சமுத்திரக்கனி, அனசுயா பரத்வாஜ், மாஸ்டர் துருவன், மீரா ஜாஸ்மின், ராகுல் ராமகிருஷ்ணா, தன்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை சிவ பிரசாத் யனலா இயக்கியுள்ளார். இந்த படம் வரும் 9-ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

டக்கர் முதல் The Flash வரை.. ஜூன் மாதம் தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன ? பட்டியல் இதோ !

டக்கர் :

கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் சித்தார்த், திவ்யான்ஷா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நிவாஸ் பிரசன்னா இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த 2019ஆம் ஆண்டே வெளியானது. சில பிரச்னை காரணமாக இந்த படம் ஒத்திவைக்கப்பட்டு வரும் ஜூன் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

டக்கர் முதல் The Flash வரை.. ஜூன் மாதம் தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன ? பட்டியல் இதோ !

போர் தொழில் :

சரத்குமார், அசோக் செல்வன் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

டக்கர் முதல் The Flash வரை.. ஜூன் மாதம் தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன ? பட்டியல் இதோ !

ஜூன் 15 -

The Flash :

DC காமிக்ஸ் மற்றும் வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தி ஃப்ளாஷ்’ படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் வரும் ஜூன் 15-ம் தேதி திரையரங்கில் வெளியாகிவுள்ளது.

டக்கர் முதல் The Flash வரை.. ஜூன் மாதம் தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன ? பட்டியல் இதோ !

ஜூன் 16 -

ஆதிபுருஷ் :

பிரபல 'இராமாயண' கதையை தழுவி பாலிவுட் பிரபல இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கிரீத்தி சனோன், சைப் அலிகான் உள்ளிட்ட பலரும் நடிக்கும் படம்தான் 'ஆதி புருஷ்'. இந்த படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள், நெட்டிசன்கள் மத்தியில் பெரும் நகைப்பை ஏற்படுத்தியதோடு, இதனை பெரிய கன்டென்டாகவும் மாற்றி கிண்டல் செய்து வந்தனர். இந்த படம் வரும் ஜூன் 16-ம் தேதி வெளியாகவுள்ளது.

டக்கர் முதல் The Flash வரை.. ஜூன் மாதம் தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன ? பட்டியல் இதோ !

பொம்மை :

பிரபல இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் உட்பட பலரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் வரும் ஜூன் 16ஆம் தேதி வெளியாகவுள்ளது.

banner

Related Stories

Related Stories