சினிமா

300 கோடியில் திரைப்படமாக உருவாகவுள்ள ‘சக்திமான்’ ... ஆனாலும் ரசிகர்களுக்கு காத்திருந்த ஒரு அதிர்ச்சி !

சக்திமான் திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாக கையெழுத்திடப்பட்டுள்ளதாக நடிகர் முகேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

300 கோடியில் திரைப்படமாக உருவாகவுள்ள ‘சக்திமான்’ ... ஆனாலும் ரசிகர்களுக்கு காத்திருந்த ஒரு அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

90ஸ் கிட்ஸ்களின் மிகவும் பிடித்தமான ஷோ என்றால் முதலில் 'சக்திமான்' தான். இப்போதிருக்கும் அவெஞ்சர்ஸ், பேட்மேன், சூப்பர் மேன் போன்ற சூப்பர் ஹீரோக்கள் அமெரிக்காவில் இருந்து உலகத்தை காப்பாற்றிக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவில் இருந்து கொண்டு உலகத்தை காப்பாற்றியது 'சக்திமான்' தான்.

சக்திமான் தங்களை காப்பாற்றுவார் என்று கூறி, மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரை விட்ட சிறுவர்களும் உண்டு. இப்படி சக்திமான்.. சக்திமான்.. என்று மந்திரம் போல் உச்சரிக்கும் பெயராகவே இது இருந்துள்ளது. காலப்போக்கில் அனைத்தும் மாற மாற 1997-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பான சக்திமான் தொடர் 2005 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.

300 கோடியில் திரைப்படமாக உருவாகவுள்ள ‘சக்திமான்’ ... ஆனாலும் ரசிகர்களுக்கு காத்திருந்த ஒரு அதிர்ச்சி !

அண்மையில் வந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் லாக்டவுன் நேரத்தில் கூட சக்திமான் தொடரை மறு ஒளிபரப்பு செய்யவேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். அப்போது இருந்த இந்த தொடருக்கு இப்போதும் மவுசு இருக்கிறது என்பதை உணர்ந்து சக்திமான் கதாநாயகனான முகேஷ் கண்ணா கூட இந்த தொடரை ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து சக்திமான் கதையை திரைப்படமாக உருவாக்கப்போவதாக சக்திமான் குழுவினர் அறிவித்தனர். அதற்காக கதை, நடிகர் என தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் இந்த படத்தை இயக்கப்போவது யார் என்றும், நடிக்க போவது யார் என்றும் என்பது குறித்த தகவல்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

300 கோடியில் திரைப்படமாக உருவாகவுள்ள ‘சக்திமான்’ ... ஆனாலும் ரசிகர்களுக்கு காத்திருந்த ஒரு அதிர்ச்சி !

இந்த சூழலில் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவலை முகேஷ் கண்ணா முற்றிலும் மறுத்துள்ளார். மேலும் இந்த படத்தில் முன்னதாக தானும் ஒரு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும், தான் இல்லாமல் இந்த படம் இருக்காது என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் கூட தான் நடிக்கவில்லை என்று முகேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

300 கோடியில் திரைப்படமாக உருவாகவுள்ள ‘சக்திமான்’ ... ஆனாலும் ரசிகர்களுக்கு காத்திருந்த ஒரு அதிர்ச்சி !

இதுகுறித்து அண்மையில் பேட்டி அளித்த அவர், "சக்திமான் படம் 200-300 கோடி என பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. இந்த படத்தின் காட்சிகளும் பிரம்மாண்டமாக இருக்கும். இந்த படத்திற்கான ஒப்பந்தம் தற்போது கையெழுத்திடப்பட்டுள்ளது. எந்த ஒரு ஒப்பீடும் வேண்டாம் என்பதால் இந்த படத்தில் நான் சிறப்பு தோற்றத்தில் கூட நடிக்க மாட்டேன். சோனி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் அப்டேட்கள், நடிகர்கள், இயக்குநர் குறித்து விரைவில் அறிவிப்புகள் வெளியாகும்" என்றார்.

300 கோடியில் திரைப்படமாக உருவாகவுள்ள ‘சக்திமான்’ ... ஆனாலும் ரசிகர்களுக்கு காத்திருந்த ஒரு அதிர்ச்சி !

முன்னதாக சக்திமான் திரைப்படத்தை 'மின்னல் முரளி' படத்தை இயக்கிய இயக்குநர் பாசில் ஜோசப் இயக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு இந்த படத்தை இயக்க ஒரு இந்து அல்லாத இயக்குநருக்கு கொடுக்க தனக்கு விருப்பமில்லை' என்று சக்திமான் முகேஷ் கண்ணா தெரிவித்துள்ளதாக ஒரு செய்தி பரவியது. இதனால் பல்வேறு தரப்பினரும் இது குறித்து பேசி கண்டனங்கள் குவிந்தன.

300 கோடியில் திரைப்படமாக உருவாகவுள்ள ‘சக்திமான்’ ... ஆனாலும் ரசிகர்களுக்கு காத்திருந்த ஒரு அதிர்ச்சி !

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த முகேஷ் கண்ணா, “திறமையான கலைஞருக்கு மதம் எதுவாக இருந்தாலும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. “இதுபோன்ற பேச்சு முற்றிலும் தவறானது மற்றும் தேவையற்றது. சக்திமான் என்பது இந்தியாவின் கருத்து. ஒருவரின் சிறிய பொய்யை விட இது பெரியது” என்று விளக்கம் அளித்தார்.

banner

Related Stories

Related Stories