சினிமா

‘இராவண கோட்டம் முதல் MS தோனி வரை..’ - இன்னும் 3 நாளில் வெளியாகும் அந்த 6 முக்கிய படங்கள் என்னென்ன ?

மே 12-ம் தேதி தமிழில் 6 முக்கிய படங்கள் வெளியாகவுள்ளது. அதன் பட்டியல் இதோ !

‘இராவண கோட்டம் முதல் MS தோனி வரை..’ - இன்னும் 3 நாளில் வெளியாகும் அந்த 6 முக்கிய படங்கள் என்னென்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தற்போதுள்ள காலகட்டத்தில் பல்வேறு மொழிப்படங்களையும் மக்கள் ரசிக்கிறார்கள். உலகம் முழுக்க நாள்தோறும் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மொழியிலும் குறைந்தது ஒரு படமாவது வெளியாகும். அந்த வகையில் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு ஒரு திரைப்படம் வெளியானால், கூடவே இன்னும் ஒரு படமாவது வெளியாகும்.

அந்த வகையில் வரும் மே 2-ம் தேதி திரையரங்குகளில் தமிழில் வெளியாகவிருக்கும் படங்களின் பட்டியலை இதில் பார்க்கலாம்.

‘இராவண கோட்டம் முதல் MS தோனி வரை..’ - இன்னும் 3 நாளில் வெளியாகும் அந்த 6 முக்கிய படங்கள் என்னென்ன ?

மே 12 :

>> ஃபர்ஹானா (Farhana) - தமிழ்

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர், ட்ரைலர் அண்மையில் வெளியானது. அதில் ஒரு பெண் தனது குழந்தைகளுக்காக மத ரீதியான கட்டுப்பாட்டில் இருந்து வெளியே வருகிறார். அவ்வாறு வரும்போது அவர் மேற்கொள்ளும் சிக்கல்கள் என்ற கோணத்தில் இருந்தது. இந்த படம் வரும் மே 12-ம் தேதி வெளியாகவுள்ளது.

‘இராவண கோட்டம் முதல் MS தோனி வரை..’ - இன்னும் 3 நாளில் வெளியாகும் அந்த 6 முக்கிய படங்கள் என்னென்ன ?

>> குட் நைட் (Good Night) - தமிழ்

இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன், மீதா ரகுநாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவை சார்ந்ததாக இருக்கும். இது திரைப்படம் வரும் மே 12-ம் தேதி வெளியாகவுள்ளது.

‘இராவண கோட்டம் முதல் MS தோனி வரை..’ - இன்னும் 3 நாளில் வெளியாகும் அந்த 6 முக்கிய படங்கள் என்னென்ன ?

>> M.S. Dhoni: The Untold Story - தமிழ், தெலுங்கு, ஹிந்தி

கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் தோனியாக நடித்திருந்தார். கடந்த 2016-ம் ஆண்டு நாடு முழுவதும் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.

இந்த சூழலில் ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படம் மீண்டும் வரும் மே 12-ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையிடப்படவுள்ளது.

‘இராவண கோட்டம் முதல் MS தோனி வரை..’ - இன்னும் 3 நாளில் வெளியாகும் அந்த 6 முக்கிய படங்கள் என்னென்ன ?

>> இராவண கோட்டம் (Raavana Kottam) - தமிழ்

'மதயானைக் கூட்டம்' படம் மூலம் பெரிய பெயர் பெற்ற இயக்குநர் விக்ரம் சுகுமாரன், தற்போது இயக்கியுள்ள படம்தான் ‘இராவண கோட்டம்’. சாந்தனு பாக்யராஜ், கயல் ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் கருவேல மரங்களால் ஏற்படும் பாதிப்புகளை அடிப்படையாக வைத்து உருவாக்கப்ட்டுள்ளது. இது வரும் 12-ம் தேதி வெளியாகவுள்ளது.

‘இராவண கோட்டம் முதல் MS தோனி வரை..’ - இன்னும் 3 நாளில் வெளியாகும் அந்த 6 முக்கிய படங்கள் என்னென்ன ?

>> கஸ்டடி (Custody) - தமிழ், தெலுங்கு

பிரபல இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்த் சாமி, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ள இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழில் முதன்முறையாக நாக சைதன்யா கதாநாயகனாக நேரடியாக அறிமுகமாகிறார். இந்த படம் வரும் 12-ம் தேதி வெளியாகவுள்ளது.

‘இராவண கோட்டம் முதல் MS தோனி வரை..’ - இன்னும் 3 நாளில் வெளியாகும் அந்த 6 முக்கிய படங்கள் என்னென்ன ?

>> Fast X

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் ஹாலிவுட் திரைப்படமான இந்த படம் மே 12-ல் திரையரங்கில் வெளியாகவுள்ளது.

banner

Related Stories

Related Stories