விளையாட்டு

"தோனி மட்டும் RCB-க்கு கேப்டனாக இருந்திருந்தால் இதுதான் நடந்திருக்கும்" - வாசிம் அக்ரம் கூறியது என்ன ?

தோனி கேப்டனாக இருந்திருந்தால் பெங்களூரு அணி இதுவரை மூன்று முறையாவது கோப்பையை கைப்பற்றி இருக்கும் என முன்னாள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

"தோனி  மட்டும் RCB-க்கு கேப்டனாக இருந்திருந்தால் இதுதான் நடந்திருக்கும்" - வாசிம் அக்ரம் கூறியது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

இதன் காரணமாக இதில் பங்கேற்க உலக நாடுகளின் வீரர்கள் தொடர்ந்து அணிவகுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் குஜராத் அணி கோப்பையைக் கைப்பற்றியது. எனினும் ஐபிஎல் தொடரில் வெற்றிகரணமாக அணிகளாக சென்னை மற்றும் மும்பை அணிகள் வளம் வருகிறது.

"தோனி  மட்டும் RCB-க்கு கேப்டனாக இருந்திருந்தால் இதுதான் நடந்திருக்கும்" - வாசிம் அக்ரம் கூறியது என்ன ?

அதே போல உலக கிரிக்கெட் அரங்கில் சூப்பர் ஸ்டார் விராட் கோலி நெருங்காலமாக விளையாடிவரும் பெங்களூரு அணியின் அதிக ரசிகர்களை கொண்ட அணிகளாக விளங்குகிறது. மற்ற ஐபிஎல் அணிகளுக்கு அவர்களின் சொந்த ஊரில் மட்டுமே ரசிகர்கள் இருக்கும் நிலையில் சென்னை, மும்பை, பெங்களூரு ஆகிய 3 அணிகளுக்கு மட்டுமே வெளியூர் மைதானங்களிலும் ரசிகர்கள் குவிவார்கள். இது தவிர சமூக வலைத்தளத்திலும் இந்த மூன்று அணியின் ரசிகர்களுமே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இதில் சென்னை அணி ஐபிஎல் கோப்பையை நான்கு முறையும், மும்பை அணி ஐந்து முறையும் வென்றுள்ள நிலையில், பெங்களூரு அணி ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. இந்த நிலையில், தோனி கேப்டனாக இருந்திருந்தால் பெங்களூரு அணி இதுவரை மூன்று முறையாவது கோப்பையை கைப்பற்றி இருக்கும் என முன்னாள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

"தோனி  மட்டும் RCB-க்கு கேப்டனாக இருந்திருந்தால் இதுதான் நடந்திருக்கும்" - வாசிம் அக்ரம் கூறியது என்ன ?

இது தொடர்பாக பேசிய அவர், "உலகின் மிகச் சிறந்த வீரரான விராட் கோலி பெங்களூரு அணியில் தான் ஆடி வருகிறார் . மேலும் அந்த அணிக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள் . ஆனாலும் அவர்களால் கோப்பையை வெல்ல முடியவில்லை. அது துரதிஷ்டவசமானது. கேப்டன் பதவி என்பது ஒரு பழக்கம் . ஒரு அணிக்கு தலைமை ஏற்று நடத்தும் பழக்கம் தோனிக்கு இருக்கிறது. அவர் மட்டும் பெங்களூரு அணிக்கு கேப்டனாக இருந்திருந்தால் இதுவரை மூன்று முறையாவது ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி இருக்கும்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories