சினிமா

”ஏப்ரல் 30ம் தேதி உனக்கு கடைசி நாள்”.. நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த 16 வயது சிறுவன்!

பிரபல நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த 16 வயது சிறுவனை போலிஸார் கைது செய்துள்ளனர்.

”ஏப்ரல் 30ம் தேதி உனக்கு கடைசி நாள்”.. நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த 16 வயது சிறுவன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு உலகம் முழுவதும் பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. அவர் நடிப்பில் வெளியாகும் படம் பெரிய எதிர்பார்ப்பை எப்போதும் ஏற்படுத்தும். இப்போதும் வசூல் கொடுக்கும் நடிகராகவே சல்மான் கான் இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சல்மான் கானுக்கு தொடர்ச்சியாக பல்வேறு காரணங்களுக்காக கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அவருக்கு போலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

”ஏப்ரல் 30ம் தேதி உனக்கு கடைசி நாள்”.. நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த 16 வயது சிறுவன்!

டெல்லியைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் என்பவர் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் போதும் அடியாட்களை வைத்து நான்கு முறை சல்மான் கானுக்கு கொலை மிரட்ட விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் நடிகர் சல்மான் கான் குண்டு துளைக்காத டொயாட்டோ காரை பயன்படுத்தி வருகிறார். தற்போது புதிதாக அதிநவீன குண்டு துளைக்காத கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த கார் இந்தியாவில் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. வளைகுடா நாடுகளிலிருந்து இந்த காரை அதிக விலைக்குத் தனியார் நிறுவனம் மூலம் நடிகர் சல்மான் கான் இறக்குமதி செய்துள்ளார்.

”ஏப்ரல் 30ம் தேதி உனக்கு கடைசி நாள்”.. நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த 16 வயது சிறுவன்!

இந்நிலையில் நடிகர் சல்மான் கானுக்கு 16 வயது சிறுவன் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்து கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இதில் தான் ராஜஸ்தானில் இருந்து பேசுவதாகவும் தனது பெயர் ராக்கி பாய் என்றும் அறிமுகம் படுத்திக் கொண்டுள்ளார்.

பின்னர் அந்த நபர் வரும் 30ம் தேதி நடிகர் சல்மான் கான் கொலை செய்யப்படுவார் என தெரிவித்து இணைப்பைத் துண்டித்துள்ளார். இதையடுத்து இது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி அந்த நபரை தேடி வந்தனர்.

”ஏப்ரல் 30ம் தேதி உனக்கு கடைசி நாள்”.. நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த 16 வயது சிறுவன்!

பிறகு இந்த தொலைப்பேசி அழைப்பு தானே மாவட்டம், சஹாபூர் பகுதியிலிருந்து வந்தது என்பதை போலிஸார் கண்டுபிடித்தனர். அங்கு சென்று விசாரணை செய்தபோது 16 வயது சிறுவன் ஒருவன்தான் கொலை மிரட்டல் விடுத்தது என்பதை போலிஸார் உறுதி செய்தனர்.

இதையடுத்து அச்சிறுவனை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏன் 16 வயது சிறுவன் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்பது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் பாலிவுட் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories