சினிமா

“அது ஒன்றும் லுங்கி அல்ல..” - வேட்டி சட்டையில் ஆடிய சல்மான் கானை விமர்சித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் !

வேட்டி சட்டையில் சல்மான் கானின் ஆடிய பாடல் தென்னிந்திய கலாச்சாரத்தை இழிவுபடுத்துவதாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

“அது ஒன்றும் லுங்கி அல்ல..” - வேட்டி சட்டையில் ஆடிய சல்மான் கானை விமர்சித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் சல்மான் கான். 1988-ல் வெளியான 'Biwi Ho To Aisi' என்ற இந்தி படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இவர், தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். தற்போது பாலிவுட்டின் டாப் 5-ல் இருக்கும் இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

“அது ஒன்றும் லுங்கி அல்ல..” - வேட்டி சட்டையில் ஆடிய சல்மான் கானை விமர்சித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் !

இவர் ஒரு நடிகராக மட்டுமின்றி, எழுத்தாளர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருக்கிறார். தமிழ்நாட்டில் ரஜினி, கமல் எப்படியோ அதே போல், பாலிவுட்டில் இவரும் ஒருவர். இவரது படம் திரையில் வெளி வந்தாலே ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவர். இந்தி மட்டுமின்றி, தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

“அது ஒன்றும் லுங்கி அல்ல..” - வேட்டி சட்டையில் ஆடிய சல்மான் கானை விமர்சித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் !

அண்மையில் கூட ஷாருக் கான், தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான 'பதான்' படத்தில் இறுதியாக சிறப்பு காட்சியில் தோன்றி ரசிகர்களுக்கு Surprise கொடுத்தார். அதில் 'டைகர்' என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பை பெற்றார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலிவுட்டில் வெளியான படங்களில் மாஸ் ஹிட் கொடுத்த படம் பதான். இதற்கு சல்மான் கானும் ஒரு காரணம் என்றே கூறலாம்.

“அது ஒன்றும் லுங்கி அல்ல..” - வேட்டி சட்டையில் ஆடிய சல்மான் கானை விமர்சித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் !

இந்த நிலையில் சல்மான் கான் 'Kisi Ka Bhai Kisi Ki Jaan' என்ற படத்தில் நடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'வீரம்' படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சல்மானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் டகுபதியும் நடித்துள்ளார்.

வரும் 21-ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள இந்த படத்தின் 'Yentamma' என்ற பாடல் கடந்த 4-ம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ள இந்த பாடல் தற்போது வரை 3.3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங் 7-ல் உள்ளது. இந்த பாடலில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் தெலுங்கு நடிகர் ராம் சரண் தோன்றியுள்ளார்.

“அது ஒன்றும் லுங்கி அல்ல..” - வேட்டி சட்டையில் ஆடிய சல்மான் கானை விமர்சித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் !

இந்த பாடலில் முழுக்க முழுக்க வேட்டி கட்டி ஆடியிருக்கும் சல்மான் கான், வெங்கடேஷ், ராம் சரண் ஆகியோருக்கு ஆரம்பத்தில் ரசிகர்கள் பெரிதும் வரவேற்பை அளித்தனர். ஏனெனில் வட இந்தியாவில் தென்னிந்திய கலாச்சாரம் போன்று வேட்டி சட்டையில் ஆடியது இல்லை. இந்த சூழலில் சல்மானின் நடனத்துக்கு ரசிகர்கள் வாழ்த்தையும் வரவேற்பையும் தெரிவித்தனர்.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன்
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன்

இந்த நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன், இந்த பாடல் தென்னிந்திய கலாச்சாரத்தை இழிவுபடுத்துவதாக தெரிவித்துள்ளார்.

“அது ஒன்றும் லுங்கி அல்ல..” - வேட்டி சட்டையில் ஆடிய சல்மான் கானை விமர்சித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் !

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இது மிகவும் கேலிக்குரியது. நமது தென்னிந்திய கலாச்சாரத்தை இழிவுபடுத்துகிறது. இது ஒன்றும் லுங்கி அல்ல.. இது வேட்டி.. ஒரு கலாச்சார உடை அருவருப்பாக காட்டப்படுகிறது” என்று குறிப்பிட்டு விமர்சித்துள்ளார். இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories