சினிமா

வீட்டை விட்டு வெளியேறிய ரம்யா, வியானா : சாண்ட்ரா, கமரு, FJ -வை paint பூசி nominate செய்த housemates!

பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற இந்த வார nomination process-ல் சாண்ட்ரா, கமரு, FJ ஆகியோரை housemates முகத்தில் paint பூசி nominate செய்யும் காட்சிகள் இன்றைய ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.

வீட்டை விட்டு வெளியேறிய ரம்யா, வியானா : சாண்ட்ரா, கமரு, FJ -வை paint பூசி nominate செய்த housemates!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
S Ramya
Updated on

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் தொடங்கி 71 நாட்களை கடந்து விட்டது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, துஷார், பிரவீன், கலையரசன், watermelon star திவாகர், கெமி, பிரஜின் ஆகியோர் வெளியேறி இருந்தனர். பிரஜின் வெளியேறும்போது சாண்ட்ரா அழுது கதறிய காட்சிகள் மக்கள் மத்தியல் அவர் நடிக்கிறார் என்றும் சிலரால் நிஜமாகவே அவர் வருத்தப்படுகிறார் என்றும் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது. மேலும், பிரஜின் வெளியேறிய பின்னர் திவ்யாவின் நடவடிக்கையால் மனதளவில் வருத்தமடைந்த சாண்ட்ரா, திவ்யாவுடனான நட்பை துண்டித்துக்கொண்டு பேசுவதையும் நிறுத்தினார்.

மேலும், பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற "BALL டாஸ்கில்" வெற்றிபெற்ற அமித், போன வாரம் "வீட்டுத்தல"-யாக தேர்வாகி இருந்தார். அத்துடன் ரம்யா, வியானா, சாண்ட்ரா, சபரி, கமருதீன், FJ மற்றும் வினோத் ஆகியோர் nominate செய்யப்பட்டிருந்தனர். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் சில பல பிரச்சனைகளை காண முடிந்தது. அதிலும் குறிப்பாக ஆதிரை, FJ மீது போட்ட வழக்கை FJ, விக்ரமுடன் சேர்ந்து கையாண்ட விதம், பாரு - கமருதீனின் bestie விளையாட்டால் பிக்பாஸ் housemates அனைவரும் பால், முட்டை, tea, coffee போன்ற அனைத்தையும் இழந்தது, இதற்கெல்லாம் மேலே ஒருதலைப்பட்சமான captaincy...

வீட்டை விட்டு வெளியேறிய ரம்யா, வியானா : சாண்ட்ரா, கமரு, FJ -வை paint பூசி nominate செய்த housemates!

இந்த முறை சீசனில் முழுவதும் கத்துவது, சண்டை, கூச்சல் குழப்பம் என காண்பதற்கே சலிப்பை ஏற்படுத்தும் காட்சிகளே பெரும்பாலும் இடம்பெற்றுவருகிறது. இதில் பாரு மற்றும் கமுருதீன் காதல் உலா வந்துகொண்டிருந்தனர். அவர்கள் பேசும் சில வார்த்தைகள் யாருக்கும் கேட்க கூடாது என்பதற்காக அவர்கள் அணிந்து இருந்த mic-ஐ கழற்றிவிட்டு பேசுவது, கையால் மறைந்துகொண்டு பேசுவது போன்று மீண்டும் மீண்டும் செய்து வந்தனர். இவர்களின் செயலை சுட்டிக்காட்டி பிக்பாஸ் mic அணியும்படியும் தொடந்து கூறி வந்த நிலையிலும் அவர்கள் mic-ஐ மறைத்து பேசுவது தொடந்ததால் கோபம் அடைந்த பிக்பாஸ், housemates அனைவரும் உணவு அருந்த தட்டில் முட்டையுடன் காத்துக்கொண்டிருந்த தருணத்தில் உள்நுழைந்து, பாரு, கமுருதீன் செய்த செயலுக்காக வீட்டில் யாருக்குமே, பால், முட்டை, tea, coffee போன்ற எதுவும் வழங்க படாது என்று அறிவித்தார்.

வீட்டை விட்டு வெளியேறிய ரம்யா, வியானா : சாண்ட்ரா, கமரு, FJ -வை paint பூசி nominate செய்த housemates!

அத்துடன் plate இருந்து முட்டையையும் சேர்த்து அகற்றினார். இதனால் பாருவும், கமருதீனும் வருத்தப்படுவார்கள் விதிமீறலில் ஈடுபடாமல் இருப்பார்கள் என்பது பிக்பாஸின் கணக்காக இருந்தது போல. பால், முட்டை, tea, coffee என அனைத்தையும் பறிகொடுத்த housemates பாரு மற்றும் கமருதீனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறினர்.

இதற்காக சபை கூட்டி நீங்கள் இருவரும் ஒருவர் மற்றொருவருடன் பேசக்கூடாது என்று கூறினார் வீட்டுத்தல ஆனால் அதற்கு இருவரும் இணங்காததால், ஒரு வழியாக பேசி முடிந்து சமையல் தவிர்த்து வீட்டுவேலை அனைத்தையும் அவர்கள் இருவரும்தான் செய்யவேண்டும் என housemates ஆல் தீர்மானிக்கப்பட்டது.

வீட்டை விட்டு வெளியேறிய ரம்யா, வியானா : சாண்ட்ரா, கமரு, FJ -வை paint பூசி nominate செய்த housemates!

இதையடுத்து பிக்பாஸ் வீடு போன வாரம் BB வழக்காடுமன்றமாக மாறியது. இதில் முதல் வழக்கு watermelon star திவாகர் வெளியேற தான்தான் காரணம் என்று ஆதிரை சொல்வது தவறு என்பதை நிரூபிக்க வினோத் - ஆதிரை மீது போட்ட வழக்குதான். இதில் விக்ரம் மற்றும் அரோரா வழக்கறிஞர்களாகவும், அமித் மற்றும் திவ்யா நீதிபதிகளாவும் களமிறங்கினர். இந்த வழக்கில் வெற்றி பெற்றது வினோத்.

அடுத்ததாக, பார்வையாளர்களே பெரிதளவில் காத்துக்கொண்டிருந்த FJ- ஆதிரை வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தது. இதில், "எனக்கும் FJ-க்கு love எல்லாம் இல்லை, அது பிரெண்ட்ஷிப்பிற்கு மேல ஒண்ணு... ஆதிரை என்னை வெச்சு லவ் கன்டென்ட் பண்ண டிரை பண்ணா... நான் ஒதுக்கலனுக்கு எல்லார்கிட்டயும் FJ சொல்லிருக்காரு, men card வச்சி play பண்ண try பன்னிருக்காரு... இதே மாதிரி இன்னொரு பொண்ணு கிட்டயும் பண்ணாரு... என் மேல சொல்லப்பட்டது பொய்ன்னு proof பண்ணணும்" போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்தார் ஆதிரை.

வீட்டை விட்டு வெளியேறிய ரம்யா, வியானா : சாண்ட்ரா, கமரு, FJ -வை paint பூசி nominate செய்த housemates!

FJ தரப்பு வழக்கறிஞராக விக்ரமும், ஆதிரை தரப்பு வழக்கறிஞராக அரோராவும் களமிறங்கினர். அத்துடன் அமித் மற்றும் சுபிக்ஷா நீதிபதிகளாக தேர்வுசெய்யப்பட்டனர். இந்த வழக்கில் மன்னிப்பு கேட்டு வழக்கை முடித்துவைக்க வேண்டும் என்பது மட்டுமே விக்ரம் மற்றும் FJ-வின் ஒரே நோக்கமாக இருந்ததால், ஆதிரை முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்டர் FJ. எனினும் அரோரா குறுக்கு விசாரணை செய்ய விரும்புவதாக கூறும்பொழுதும், "அதான் குற்றத்தை ஒத்துக்கிட்டாங்களே.. அப்புறம் எதுக்கு விசாரணை" என்று கூறி வழக்கை முடித்து வைத்தார் அமித்.

இதையடுத்து, FJ மீது பாரு வழக்கு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கிற்கு அமித்தையும் பாருவையும் இணைத்து FJ தவறாகப் பேசினார் என்றும், பாரு லவ் கன்டென்ட் மட்டுமே செய்து கொண்டிருக்கிறார் என்றும் காரணமாக கூறப்பட்டது. இந்த வழக்கில் பாருவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதையடுத்து விக்ரம் - சுபிக்க்ஷாவின் வழக்கு, இதில் சுபிக்க்ஷா ஒரே பாட்டை மீண்டும் மீண்டும் பாடி சாவடிப்பதாக விக்ரம் வழக்கு தொடுத்திருந்தார். மீனவ சமூகத்தில் இருந்து பிக்பாஸ் வந்துள்ள சுபிக்க்ஷா சொந்தமாக பாட்டு எழுதி அந்த தினமும் திருப்பி திருப்பி பாடிக்கொண்டே இருக்கிறார். இந்த வழக்கில் சுபிக்க்ஷா போன்ற பெண்கள் பலருக்கும் முன்னுதாரணமாக இருப்பார்கள் என்று கூறி சுபிக்க்ஷா தரப்பில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

வீட்டை விட்டு வெளியேறிய ரம்யா, வியானா : சாண்ட்ரா, கமரு, FJ -வை paint பூசி nominate செய்த housemates!

இறுதியாக, கமரு - பாருவின் mic பிரச்சினை நீதிமன்றத்துக்கு வந்தது. இந்த வழக்கை சுபிக்ஷா, திவ்யா, சாண்ட்ரா, ரம்யா ஆகியோர் கூட்டாக இணைந்து தொடுத்திருந்தனர். இதில் பாரு தரப்பில் அமித் வழக்கறிஞராக வர, ஒட்டுமொத்த வீடுமே அவர்களுக்கு எதிராக இருந்தது. எனினும் mic-ஐ மறைத்து வைத்து பேசிவிட்டு அதனால் housemates அனைவருக்கும் தண்டனை வாங்கி கொடுத்த வருத்தம் கொஞ்சம் கூட இல்லாமல் இருவரும் செயல்படுவது கண்டிக்கத்தக்க விஷயமே. இந்த வழக்கின் இறுதியில் சுபிக்ஷா, திவ்யா, சாண்ட்ரா, ரம்யா ஆகியோரின் தரப்பிற்கு தீர்ப்பு சாதகமாக அமைந்தது.

இதையடுத்து வார இறுதி நாட்களில் போட்டியாளர்களை சந்திக்க வந்த விஜய் சேதுபதி, உள்ள வரும் போது, "நான் ரொம்ப boldனு சொல்லிட்டு வந்தாங்க, ஆனா வீட்டு உள்ள mic-அ மறைச்சிட்டு பேசுறாங்க என்னனு போய் விசாரிப்போம்" என்று கூறி போட்டியாளர்களை சந்தித்தார். "tea, coffee குடிக்காம எல்லாரும் நல்லா இருக்கீங்களா "என்று போட்டியாளர்களை விசாரித்த விஜய் சேதுபதி, "உங்களுக்கு பிக்பாஸும் housemates-யும் கொடுக்காத privacy-அ நான் தரேன்" என்று கூறி இருவர்க்கும் mic -ஐ கழட்டி வைத்துவிட்டு தனியாக சென்று அமரச் சொன்னார்.

மேலும் housemates அனைவருமே இருவருக்கும் எதிராக கருத்து சொன்ன நிலையில், பாரு - கமரு இருவரும் பொறுப்பு இல்லாமல், தங்களால் ஏற்பட்ட செயலில் விளைவுகளை பற்றி கொஞ்சம் கூட வருத்தம் இல்லாமல் இருந்ததை கடினமாக சுட்டிக்காட்டினார். கமருவிற்கு அதிகமாக support செய்து வந்த வினோத்திடம் அவரின் தவறை சுட்டிக்காட்டிய விஜய் சேதுபதி நீங்க எல்லாம் என்னதான் பண்ணீங்க.. நாளைக்கு சோறும் கட் பண்ணாதான் கேள்வி கேப்பீங்களா? என்று கேள்வி எழுப்பினார்.

வீட்டை விட்டு வெளியேறிய ரம்யா, வியானா : சாண்ட்ரா, கமரு, FJ -வை paint பூசி nominate செய்த housemates!

இதையடுத்து கமரு, திவ்யாவிடம் தவறான வார்த்தைகளை பயன்படுத்தியது குறித்து கேள்வி எழுப்பினார். இந்த பிரச்சினை சிறையின் அருகே நடந்ததால் அங்கே அமித், சான்ட்ரா, வினோத், ரம்யா ஆகியோர் அருகில் அமர்ந்து இருந்தனர். மேலும் அமித்திடம், "நீங்கதானே வீட்டு தல நீங்கதானே கேட்ருக்கனும்" என்று விஜய் சேதுபதி கேள்வி எழுப்பினார். "வியானா உங்க பொண்ணு மாதிரின்னு சொல்றீங்க. அவங்களுக்கு இப்படி நடந்தாலும் வேடிக்கைதான் பார்த்துருப்பீங்களா? அநியாயத்தை யார் வேணும்னாலும் கேக்கலாம்." என்றும் கூறினார்.

இந்த பிரச்சினையின் இடையே வந்த கமுரு-விடம் "செஞ்ச தவறுக்கு வருந்தியிருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா.. இந்த ஷோவிற்கு எதுக்கு வந்தீங்க... நாங்க என்ன உங்க வீட்லயா வந்து எட்டிப் பார்த்தோம்... திவ்யா உங்க பிரெண்ட் கிடையாது... போடி வாடின்னுல்லாம் பேச உங்களுக்கு உரிமை இல்லை" என்று கடுமையாக எச்சரித்தார். மேலும் பாரு, கமரு இருவரிடமும் mic இல்லாததால் அவர்கள் என்ன கருத்து கூற வந்தாலும் கேட்கல சத்தமா பேசுங்க என்று விஜய் சேதுபதி கூறினார். விஜய் சேதுபதியின் இந்த செயலாவது அவர்கள் இருவரும் செய்த தவறை புரிய வைத்திருக்கும் என்று நம்புவோம்.

வீட்டை விட்டு வெளியேறிய ரம்யா, வியானா : சாண்ட்ரா, கமரு, FJ -வை paint பூசி nominate செய்த housemates!

மேலும், BB வழக்காடுமன்றம் டாஸ்க் பற்றி விசாரித்த விஜய் சேதுபதி, “decorum என்ற வார்த்தையைப் பற்றி தெரியுமா, யாரவது அதை பின்பற்றினீர்களா போன்ற கேள்விகளை எழுப்பினார். மேலும், FJ- ஆதிரை வழக்கை முடித்து வைக்க முயன்ற விதத்தை சுட்டிக்காட்டிய விஜய் சேதுபதி, விக்ரமின் செயல் இருவரும் வெளியே வந்து கொண்டாடியது போன்ற அனைத்தும் சுட்டிக்காட்டினார். அத்துடன் BB வழக்காடுமன்றம் குறித்து முழுமையா விசாரித்தும் இருந்தார்.

இதையடுத்து இந்த வாரம் அமித்தின் captaincy பற்றி பேசபட்டது. இதிலும், அமித் சொதப்பியதை மிகத்தெளிவாக எடுத்துரைத்திருந்தார் விஜய் சேதுபதி. இறுதியாக பிக்பாஸ் வீட்டில் சனி மற்றும் ஞாயிறு கிழமை இரண்டு நாட்களுமே eviction நடைபெற்றது. இதில் முதலாவதாக ரம்யாவும், இரண்டாவதாக வியானாவும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினர்.

வீட்டை விட்டு வெளியேறிய ரம்யா, வியானா : சாண்ட்ரா, கமரு, FJ -வை paint பூசி nominate செய்த housemates!

இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான nomination process நடைபெறும் காட்சிகள் இன்றைய ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது. இதில் nominate செய்யப்படும் நபர்களுக்கான காரணத்தை சொல்லிவிட்டு bowl-லில் வைக்கப்பட்டுள்ள paint-ஐ எடுத்து அவர்களில் முகத்தில் பூசவேண்டும் என கூறப்படுகிறது. இந்த open nomination-ல் சாண்ட்ரா, கமருதீன், அமித், திவ்யா, FJ, கனி ஆகியோர் நிமினேஷனில் இடம்பெறுகின்றனர்.

banner

Related Stories

Related Stories