
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் தொடங்கி 56 நாட்களை கடந்து விட்டது. நிகழ்ச்சியில் இருந்து இதுவரை நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, துஷார், பிரவீன், கலையரசன், watermelon star திவாகர், கெமி ஆகியோர் வெளியேறியுள்ளனர். மேலும் போன வாரம் நடைபெற்ற nomination process-ல் சாண்ட்ரா, பிரஜின், திவ்யா, கமருதீன், கனி, FJ, வி்க்ரம், அமித், ரம்யா, வியானா, அரோரா, மற்றும் பாரு ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அத்துடன் 'வீட்டு தலை'யை தேர்வு செய்வதற்காக நடைபெற்ற ‘சாய்ஞ்சா போச்சு’ என்ற டாஸ்கில் வெற்றி பெற்ற FJ இந்த சீசனில் தொடந்து இரண்டாவது முறையாக 'வீட்டு தல' ஆனார். முதல்முறை FJ கேப்டன் ஆனபொழுது அவரது captaincy நன்றாக இருந்தது என்று விஜய் சேதுபதியும் பாராட்டி இருந்தார்.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீடு இந்த வாரம் Residential schoolஆக மாறியது. இந்த டாஸ்கில், students-ஆக விக்ரம், திவ்யா, ரம்யா, சாண்ட்ரா, வியானா, சுபிக்ஷா, வினோத், சபரி, கமருதீன், அரோரா ஆகியோரும், பிரஜின் principal மற்றும் moral science teacher -ஆகவும், கனி திரு தமிழம்மாவாகவும், அமித் english teacher-ஆகவும், பாரு warden மற்றும் FJ assistant warden-ஆகவும் பொறுப்பேற்றனர். இதில் ஏற்கனவே பாருவா, அரோரா என்று இந்த பக்கமும் அந்த பக்கமும் உழன்று கொண்டிருந்த கமருதீன்க்கு அரோரா student-ஆனதும் மிகவும் குஷி ஆனது.

இதனிடையே கனி அம்மாவின் தமிழ் பாடம் தொடங்கியது. கனி மாணவர்களுக்கு திருக்குறள் சொல்லித்தர, அதை வைத்தே டீச்சரை கலாய்த்து மாணவர்கள் content செய்தனர். ரஜினி மற்றும் எம்.ஜி.ஆர் ஸ்டைலில் கமருதீன் திருக்குறள்களை சொன்னார். அதேபோல விக்ரம் செய்த சேட்டைகள் பல காண்பதற்கு ரசிக்கும் விதத்தில் இருந்தது. அதே போல english டீச்சர் அமித் வாக்கியங்களை பாடலாக மாற்றி மாணவர்களுக்கு பாடம் எடுத்தார். BB ஸ்கூலின் டீச்சர் strictஆக இருக்க முயற்சித்தாலும், மாணவர்களின் சேட்டை அதிகமாகவே இருந்தது.
குறிப்பாக வியானா, அமித் shoeவை ஒளித்து வைத்து அவரை எரிச்சல் படுத்தியது, அரோரா, சபரியின் மாதுளம்பழங்களை ஒளித்து வைத்தது.. அதனால் கோபத்தின் உச்சிக்கே சென்று வந்தார் சபரி, மேலும் ஒரு பொருளை மற்றொரு இடத்தில் ஒளித்து வைப்பது, யார், என்ன பேசி, என்ன செய்ய முயற்சித்தாலும் அங்கு சென்று தனது பங்கிற்கு ஒரு கலகம் செய்வது என வியானா வித விதமாக முயற்சி செய்திருந்தார். ஆனால் இந்த டாஸ்கில் எதுவுமே செய்யாமல் தான் "வீட்டு தல" என்பதையும் மறந்து வியானாவுடன் வலம் வருவதே முழு நேர வேலையாக இருந்தது FJ மட்டும்தான்.

இந்த டாஸ்கிலேயே பெரிய டாஸ்க், பாரு சமையல் செய்த காட்சிகள்தான். மாணவர்கள் பாருவை கதற வைத்து கொண்டிருந்தனர். ஒரு புறம் கிட்சன் சுத்தமாக இல்லை என்று புகார், மறுபுறம் சபரியும் விக்ரமும் சேர்ந்து பாருவின் சேலையை ஒளித்து வைத்தனர். சாண்ட்ரா வந்து வசந்தி ஆன்ட்டி என்று கூறியதால் பாரு கடுப்பானது போன்ற காட்சிகள் பல இடம்பெற்றிருந்தன. இதனிடையே அமித்தின் உதவியுடன் பாரு மாணவர்களுக்கு சமையல் செய்து வந்தார். அப்பொழுது சாம்பாரில் தண்ணீர் அதிகமாகிவிட்டதால் கோதுமை மாவை எடுத்து கொட்டி கோதுமை சாம்பார் செய்திருந்தார் பாரு.
அதே போல, பாரு செய்த கோவக்காயில் மசாலா தடவி கொடுத்தது போல இருக்கு என்று சபரியும் விக்ரமும் கேமரா முன்பு வந்து சொல்லி விட்டு மறுபுறம் பாருவிடம் கோவக்காய் அருமை என்று சொன்னது, பாருவின் தலைமுடியை cut செய்து விட்டதாக கூறி prank செய்தது, போன்ற காட்சிகள் காண்போரை ரசிக்க வைக்கும் விதமாக இருந்தது. மேலும், FJ விரலில் அடிபட்டதால் அவர் கிச்சனில் இருந்து வெளியேறிய நிலையில், தர்மலிங்கத்தை (அமித்) அவர் வசம் கொண்டு வர குட்டி வார்டனை வசந்தி (பாரு) வெளியே அனுப்பிட்டாங்க என்று மொட்டைக் கடிதாசி ஒன்று போடப்பட்டது. இதனால் வீட்டிற்குள் பிரளயமே வெடித்தது.
இந்த டாஸ்கின் முடிவில் அமைதியாக சமத்தாக இருந்த ரம்யா, best student-ஆகவும், பிரஜின் best teacher-ஆகவும் தேர்வாகினர். அத்துடன், இவர்கள் இருவரும் அடுத்த வார "வீட்டு தல" போட்டியில் பங்கேற்பார்கள் என்று பிக்பாஸால் அறிவிக்கப்பட்டது. அதே போல, FJ மற்றும் கானா வினோத் worst performersஆக தேர்வாக இருவருக்கும் சிறை தண்டனையுடன் சிவப்பு, பச்சை ஆகிய இரு நிறங்களில் 1000 பாசி மணிகள் வழங்கப்பட்டு 200 மாலைகளாக அதை கோற்க வேண்டும் என்று வேடிக்கையான தண்டனை வழங்கப்பட்டது.

இதையடுத்து வார இறுதி நாட்களில் "டாஸ்க் ஆடுங்கன்னு சொன்னா, ஆளாளுக்கு ஒரு ஜோடியை பிடிச்சு ஆடியிருக்காங்க" என்று கூறியபடியே போட்டியாளர்களை சந்திக்க வந்தார் தொகுப்பாளர் விஜய் சேதுபதி. தொடர்ந்து போட்டியாளர்களிடம் பேச தொடங்கிய விஜய்சேதுபதி ஸ்கூல் டாஸ்க்கிற்காக தடியை எடுத்து விட்டு குழந்தைகள் போலவே மாறி தங்களது முழு அர்ப்பணிப்பையும் கொடுத்த போட்டியாளர்களை பாராட்டினார். மேலும், ஸ்கூல் டாஸ்கில் பல செயல்கள் ரசிக்கும்படியாக அமைந்திருந்தது என்று கூறினார்.
அத்துடன், இந்த வாரம் கேப்டன்ஸி எப்படி இருந்தது என்று FJ குறித்து சக போட்டியாளர்களிடம் விஜய் சேதுபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பெரும்பாலானோர், அவர் "வீட்டு தல"-யாகவே செயல்படவில்லை, டாஸ்கின் வார்டனாகவும் செயல்படவில்லை, வியானாவுடனேயே பெரும்பாலான நேரங்களை கழித்தார் போன்ற புகார்களை தெரிவித்தனர். ஆனால் வியானா மட்டும் FJ-விற்கு ஆதரவாக பேச, வினாவுக்கு nosecut கொடுத்து அமரவைத்தார் விஜய் சேதுபதி.

அடுத்ததாக teacher ஒருபக்கமும், students ஒருபக்கமுமாக அமரச்சொன்னார் விஜய் சேதுபதி. இந்த டாஸ்கில் "students naughty-ஆ இருக்கணும்ங்கறதுதான் முக்கியமான point. இதை புரிஞ்சிகிட்டு நல்லா பண்ணது சொல்லுங்க?" என்று கேள்வி எழுப்பினார். இதில் பெரும்பாலானோர் வியானாவை சொல்ல, "அப்போ அமைதியா இருந்த ரம்யாவை best performer-னு சொல்லி இருக்கீங்க" என்று தனது கேள்விகளால் அனைவருக்கும் twist வைத்தார் விஜய் சேதுபதி. இதையடுத்து "performance கம்மியா இருந்த teacher-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்" என கூறிய விஜய் சேதுபதிக்கு, பெரும்பாலும் கிடைத்த பதில்கள் fj.
"மாணவப்பருவம் எவ்வளவு சுவாரசியமா இருக்கும்? இந்த டாஸ்குல நீங்க என்னென்னமோ பண்ணியிருக்கலாம்... அதை வேஸ்ட் பண்ணிட்டீங்க.. மொட்டை கடிதாசி கூட உங்களுக்கு எழுதத் தெரியலையே.." போட்டியாளர்கள் அனைவரும் சக போட்டியாளர்களுக்கு மொட்டை கடிதாசி போடுங்க என்று கூறி இருந்தார்.

இதன் விளைவு, "FJ மற்றும் வியானா குறித்து அதிகமாக எழுதப்பட்டிருந்தது. மேலும் பாருவுக்கு, அரோரா, கமருதீனை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று ஆசை, 'டேய் விசித்திர விக்ரம்.. உன் காமெடியும் சரியில்ல. டைமிங்கும் சரியில்ல' என்ற கமெண்ட். மேலும், விக்ரமிற்கு பாரு மேல் ஒரு secret love, திவ்யா எப்பொழுதும் பிரஜின், சாண்ட்ராவுடன் சேர்ந்து விளையாடாமல் தனியா ஆடுங்க" போன்று அனைத்து போட்டியாளர்களுக்கு ஒரு கமெண்ட் வந்திருந்தது, சாண்ட்ராவை தவிர்த்து.
இந்த மொட்டை கடிதாசி புராணம் முடிந்த பின்னர், பாருவின் kitchen அலப்பறை குறித்து ஒரு நகைச்சுவையான குறும்படம் போடப்பட்டது. இதையடுத்து , போனவாரம் நாமினேஷனில் இடம்பெற்றிருந்த போட்டியாளர்களில் விக்ரம், பாரு, பிரஜின், அமித், கனி, கமருதீன், அரோரா, திவ்யா, சாண்ட்ரா என ஒவ்வொருவராக save செய்து வந்த நிலையில், இதில் இறுதியாக ரம்யா மற்றும் வியானாவை save செய்துவிட்டு இந்த வாரம் no eviction, ஆனா உங்களுக்கு ஒரு surprise இருக்கு என்று கூறி விடை பெற்றார். அந்த suprise பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக மீண்டும் வந்த ஆதிரைதான்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று "குறி வச்சா தப்பாது" என்ற கேப்டன்சி டாஸ்க் நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கு 15 bricks மற்றும் 3னு ballsயும் கொடுக்கப்பட்டு வீட்டு தலையை தேர்வு செய்வதற்கான டாஸ்க் நடைபெறுகிறது. இந்த டாஸ்கில் வெற்றி பெற்றுள்ள ரம்யா இந்த வாரம் "வீட்டு தல" ஆகியுள்ள காட்சிகள் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த வீட்டில் kitchen வேலைகளிலும், பொறுப்புகளிலும் யார் best, ஆண்களா? பெண்களா? என்று இருதரப்பினருக்கும் இடையே விவாதம் நடைபெறும் காட்சிகளும் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.
பிக்பாஸ் வீட்டிற்குள் ஆதிரை re-entry கொடுத்துள்ளதும், ரம்யா வீட்டு தலையாக தேர்வாகி உள்ளதும் இந்த வாரம் நிகழ்ச்சி எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பை பார்வையாளர்களிடையே அதிகரிக்க செய்துள்ளது.






