சினிமா

நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்ட LEO படக்குழு.. நடிகர்களின் Reaction என்ன? உடனிருந்து வீடியோ வெளியிட்ட Irfan

நேற்று காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை லியோ படக்குழுவுடன் ஹோட்டலில் தங்கியிருந்த யூடியூபர் Irfan தனது பக்கத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளார்

நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்ட LEO படக்குழு.. நடிகர்களின் Reaction என்ன? உடனிருந்து வீடியோ வெளியிட்ட Irfan
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உலகம் முழுவதும் அண்மைக்காலமாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக துருக்கி - சிரியா நிலநடுக்கம் உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இதன் தொடர்ச்சியாக சில நாடுகளில் நிலநடுக்கம் காணப்பட்டது. அதில் இந்தியாவும் விதிவிலக்கில்லை. குஜராத்தின் அகமதாபாத்தில் ஜனவரியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அந்த வகையில் நேற்று (21.03.2023) காஷ்மீரிலும் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை கண்டு அதிர்ந்த அப்பகுதி மக்கள், வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்தனர்.

நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்ட LEO படக்குழு.. நடிகர்களின் Reaction என்ன? உடனிருந்து வீடியோ வெளியிட்ட Irfan

காஷ்மீரில் வந்த நிலநடுக்கத்தின் அளவு 6.6 ரிக்டர் என தகவல்கள் வெளியாகின. இந்த நிலநடுக்கமானது டெல்லி, பஞ்சாப் மற்றும் வடமாநிலங்களின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனால் அங்கு சற்று பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்ட LEO படக்குழு.. நடிகர்களின் Reaction என்ன? உடனிருந்து வீடியோ வெளியிட்ட Irfan

இந்த நிலையில் தற்போது காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருக்கும் விஜயின் லியோ படக்குழு இந்த நிலநடுக்கம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம்தான் லியோ. திரிஷா, அர்ஜுன், மிஸ்கின், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், கெளதம் மேனன், டான்சர் சாண்டி என திரைபட்டாளமே நடித்து வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்துகொண்டிருக்கிறது.

நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்ட LEO படக்குழு.. நடிகர்களின் Reaction என்ன? உடனிருந்து வீடியோ வெளியிட்ட Irfan
நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்ட LEO படக்குழு.. நடிகர்களின் Reaction என்ன? உடனிருந்து வீடியோ வெளியிட்ட Irfan
நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்ட LEO படக்குழு.. நடிகர்களின் Reaction என்ன? உடனிருந்து வீடியோ வெளியிட்ட Irfan

இந்த சூழலில் அங்கு இப்படி ஒரு நிகழ்வு நடத்துள்ளது தமிழ் திரை ரசிகர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து லியோ படத்தின் வசனகர்த்தா ரத்ன குமார் தனது ட்விட்டர் பக்கதில் 'BLOOODY Earthquake' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் படத்தை தயாரிக்கும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ 'We are safe nanba' என்று குறிப்பிட்டுள்ளது. இதனிடையே இந்த நிலநடுக்கம் குறித்து பிரபல யூடியூபர் Irfan தனது பக்கத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

படக்குழு தங்கியிருக்கும் ஹோட்டலில் இருந்து நிலநடுக்கம் வந்தபோது அதனை வீடியோவாக எடுத்து தற்போது தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் லியோ படக்குழுவினர் உள்ளனர். குறிப்பாக பிரியா ஆனந்த், கதிர், லோகேஷ் கனகராஜ், ஜெகதீஷ், லலித் குமார் என பலரும் உள்ளனர். இந்த வீடியோவை அவர் வெளியிட்ட 3 மணி நேரங்களில் 1 லட்ச பார்வையாளர்களை கடந்துள்ளது.

நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்ட LEO படக்குழு.. நடிகர்களின் Reaction என்ன? உடனிருந்து வீடியோ வெளியிட்ட Irfan

Irfan எடுத்த வீடியோவில் அவர் பிரியா ஆனந்தை ஒரு தள்ளு வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டே விளையாடிக்கொண்டிருக்கிறார். மேலும் அவர் லியோ படக்குழுவுடன் கலந்துரையாடுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன்மூலம் இந்த படக்குழு நலமுடன் இருப்பதும் தெரியவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories