சினிமா

வீட்டு லாக்கரில் இருந்து மாயமான 60 சவரன் தங்க, வைர நகைகள்.. பரபர புகார் கொடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் !

நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா வீட்டின் லாக்கரில் வைத்திருந்த தங்க, வைர நகைகள் காணவில்லை என்று புகார் அளித்துள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வீட்டு லாக்கரில் இருந்து மாயமான 60 சவரன் தங்க, வைர நகைகள்.. பரபர புகார் கொடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்குக்ம் ரஜினிகாந்துக்கு இரண்டு ஐஸ்வர்யா, செளந்தர்யா என்ற மகள்கள் உள்ளனர். இதில் இருவருக்கும் திருமணமான நிலையில், மூத்த மகள் ஐஸ்வர்யா பிரபல நடிகர் தனுஷை கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர்.

வீட்டு லாக்கரில் இருந்து மாயமான 60 சவரன் தங்க, வைர நகைகள்.. பரபர புகார் கொடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் !

இதையடுத்து இருவரும் தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். இதன் விளைவாக தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து ஐஸ்வர்யா தனுஷ் என்ற பெயரை, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்று மாற்றிக்கொண்டர். தற்போது இவர் தனது தந்தை ரஜினிகாந்துடன் சென்னை போயஸ் கார்டன் ராகவீரா அவென்யூவில் வசித்து வருகிறார்.

வீட்டு லாக்கரில் இருந்து மாயமான 60 சவரன் தங்க, வைர நகைகள்.. பரபர புகார் கொடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் !

இந்த நிலையில் ஐஸ்வர்யா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது தனது வீட்டின் லாக்கரில் இருந்த தங்க, வைர நகைகள், நவரத்தின கற்கள் ஆகியவற்றை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரில், கடந்த 2019-ம் ஆண்டு தனது தங்கை சௌந்தர்யாவின் திருமணத்திற்கு பின்பு 6 லட்ச ரூபாய் மதிப்புள்ள 60 சவரன் தங்க, வைர நகைகளை லாக்கரில் வைத்திருந்ததாகவும், நான் லாக்கரில் நகைகளை வைத்திருந்தது, எனது வீட்டில் வேலை பார்த்து வரும் பணிப்பெண்கள் ஈஸ்வரி, லட்சுமி மற்றும் கார் ஒட்டுநர் வெங்கட் ஆகியோருக்கு தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டு லாக்கரில் இருந்து மாயமான 60 சவரன் தங்க, வைர நகைகள்.. பரபர புகார் கொடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் !

இந்த லாக்கரானது இதுவரை சுமார் 3 இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதாவது ஆகஸ்ட் 2021 வரை, செயின்ட் மேரி சாலையில் உள்ள அவரது குடியிருப்பில் இருந்த இந்த லாக்கர், பின்னர் சிஐடி காலனியில் நடிகர் தனுஷுடன் அவர் பகிர்ந்து கொண்ட குடியிருப்புக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து மீண்டும் செப்டம்பர் 2021 இல் செயின்ட் மேரி சாலை அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து ஏப்ரல் 9, 2022 அன்று, லாக்கர் நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு மாற்றப்பட்டது.

வீட்டு லாக்கரில் இருந்து மாயமான 60 சவரன் தங்க, வைர நகைகள்.. பரபர புகார் கொடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் !

இதையடுத்து தனது தந்தை வீட்டில் இருந்த லாக்கீரை கடந்த மாதம் ஐஸ்வர்யா திறந்து பார்த்துள்ளார். அப்போது அதில் இருந்த நகைகள் மயமானது தெரியவந்தது. இதையடுத்து அவர் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மேலும் தான் நகைகளை வைத்திருந்தது தனது வீட்டில் வேலை செய்பவர்களுக்கு தெரியும் என்றும், தான் இங்கே இல்லாத போது அவர்களும் அடிக்கடி அபார்ட்மெண்டிற்கு செல்வார்கள் என்றும் புகாரில் தெரிவித்துள்ளார்.

வீட்டு லாக்கரில் இருந்து மாயமான 60 சவரன் தங்க, வைர நகைகள்.. பரபர புகார் கொடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் !

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இதுகுறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் லாக்கரில் வைத்திருந்த 60 லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகள் திடீரென காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு இயக்குநர் ஆவார். இவர் 3, வை ராஜா வை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். மேலும் இவர் பின்னணி பாட்டும் பாடியுள்ளார். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம்பெற்ற "உன் மேல ஆசதான்.." பாடலை தனுஷுடன் சேர்ந்து இவரும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories