சினிமா

#FactCheck: ரஞ்சிதமே பாடலுக்கு விராட் கோலி உண்மையில் VIBE செய்தாரா? -தமன் பகிர்ந்த வீடியோவின் உண்மை என்ன?

#FactCheck: ரஞ்சிதமே பாடலுக்கு விராட் கோலி உண்மையில் VIBE செய்தாரா? -தமன் பகிர்ந்த வீடியோவின் உண்மை என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் கோடி கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். இவரது படம் சுமாராக இருந்தாலும் அதனை ஹிட் செய்து விடும் அளவுக்கு இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

#FactCheck: ரஞ்சிதமே பாடலுக்கு விராட் கோலி உண்மையில் VIBE செய்தாரா? -தமன் பகிர்ந்த வீடியோவின் உண்மை என்ன?

அதோடு இவரது படங்களில் இடம்பெறும் பாடல்கள் சமீப காலமாக இந்தியா மட்டுமின்றி உலகளவில் ஹிட் ஆகி வருகிறது. கடந்த சில ஆண்களுக்கு முன்னர் வெளியான 'மாஸ்டர்' படத்தில் இடம்பெற்ற "வாத்தி கமிங்" பாடல் உலக அளவில் ஹிட் ஆனது. இந்திய அளவிலும் இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

#FactCheck: ரஞ்சிதமே பாடலுக்கு விராட் கோலி உண்மையில் VIBE செய்தாரா? -தமன் பகிர்ந்த வீடியோவின் உண்மை என்ன?

கிரிக்கெட் வீரர்கள் இந்த பாடலுக்கு வைப் செய்து விடியோவையும் வெளியிட்டனர். இதையடுத்து இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வாரிசு. தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டது.

#FactCheck: ரஞ்சிதமே பாடலுக்கு விராட் கோலி உண்மையில் VIBE செய்தாரா? -தமன் பகிர்ந்த வீடியோவின் உண்மை என்ன?

ரஷ்மிகா, யோகி பாபு, சரத்குமார், ஷ்யாம், சங்கீதா, பிரகாஷ் ராஜ் என பலரும் நடித்துள்ள இந்த படம் வசூல் ரீதியாக உலகளவில் மாபெரும் வெற்றி பெற்றது. தமன் இசையமைத்துள்ள இந்த படத்தின் வெற்றிக்கொண்டாட்டத்தை படக்குழு பல மாதங்களாக கொண்டாடி வந்தனர்.

#FactCheck: ரஞ்சிதமே பாடலுக்கு விராட் கோலி உண்மையில் VIBE செய்தாரா? -தமன் பகிர்ந்த வீடியோவின் உண்மை என்ன?

இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் "ரஞ்சிதமே.." பாடல்தான் முதலில் இந்த படத்திலிருந்து வெளியான பாடல். சில விமர்சங்களுக்கு உள்ளானாலும் குழந்தைகள், ரசிகர்கள், குடும்பங்கள் மத்தியில் பெரிதளவு ஈர்க்கப்பட்டது. பல நாட்களாக நம்பர் 1 ட்ரெண்டிங்கில் இருந்த இந்த பாடலுக்கு பலரும் ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டு வந்தனர்.

இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த பாடலை நடிகர் விஜய் மற்றும் மானசி பாடியுள்ளார். விஜயுடன் ரஷ்மிகா ஆடியுள்ள நடனம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த பாடல் திரையரங்கில் கூட ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த பாடலுக்கு ரசிகர்கள் வரவேற்பை அளித்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட தூங்கி கொண்டிருந்த குழந்தை "ரஞ்சிதமே.." பாடலை கேட்டதும் எழுந்து வைப் செய்யும் வீடியோவை இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த சூழலில் தற்போது கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடுவது தொடர்பான வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஆனால் உண்மையில் அந்த பாடலுக்கு விராட் கோலி ஆடினாரா என்று இணையத்தை சோதனை செய்தபோது, விராட் உண்மையில் அந்த பாடலுக்கு நடனமாடவில்லை என்று தெரியவந்துள்ளது. மேலும் அவர் The Quick Style என்ற நடன குழுவுடன் மியூசிக் ஒன்றுக்கு ஆடியுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

#FactCheck: ரஞ்சிதமே பாடலுக்கு விராட் கோலி உண்மையில் VIBE செய்தாரா? -தமன் பகிர்ந்த வீடியோவின் உண்மை என்ன?

The Quick Style என்ற ஹிப் ஹாப் நடன குழு கடந்த 5 நாட்களுக்கு முன்னர் தனது இன்ஸ்டா பக்கத்தில் இது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதில் விராட் கோலி இந்த நடனக்குழுவுடன் சேர்ந்து நடனமாடுகிறார். அந்த வீடியோவில் ஒலித்த இசை, "Ishq Ho Gaya - Stereo Nation" ஆகும்.

#FactCheck: ரஞ்சிதமே பாடலுக்கு விராட் கோலி உண்மையில் VIBE செய்தாரா? -தமன் பகிர்ந்த வீடியோவின் உண்மை என்ன?

மேலும் The Quick Style நடன குழுவுடன் இருக்கும் புகைப்படத்தை விராட் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் விராட் ரஞ்சிதமே பாடலுக்கு வைப் செய்யவில்லை என்று தெரியவந்துள்ளது. மேலும் ரஞ்சிதமே பாடலை அந்த வீடியோவுடன் எடிட் செய்து ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories