சினிமா

“அவர் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல.. நல்ல மனிதர்..” - ராகவா லாரன்ஸுக்கு புகழாரம் சூட்டிய கங்கனா ரணாவத் !

சந்திரமுகி 2 படத்தில் தனது பாகத்தை இன்றுடன் நிறைவு செய்வதாக நடிகை கங்கனா ரணாவத் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“அவர் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல.. நல்ல மனிதர்..” - ராகவா லாரன்ஸுக்கு புகழாரம் சூட்டிய கங்கனா ரணாவத் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மலையாளத்தில் ஷோபனா, மோகன்லால் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 1993-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'மணிச்சித்ரதாழு'. இந்த படம் அங்கு பெரிய ஹிட் கொடுத்த நிலையில், இதனை தமிழில் இயக்குநர் பி.வாசு 'சந்திரமுகி' என்ற பெயரில் இயக்கினார்.

கடந்த 2005-ல் வெளியான இந்த படத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வினீத், வடிவேலு, ஷீலா, நாசர், கே.ஆர். விஜயா, மாளவிகா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். பாடலும் படமும் பெரிய அளவில் மாஸ் ஹிட் கொடுத்த நிலையில், அப்போதே இதன் வசூல் 75 கோடி தாண்டி அள்ளிக் குவித்தது.

“அவர் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல.. நல்ல மனிதர்..” - ராகவா லாரன்ஸுக்கு புகழாரம் சூட்டிய கங்கனா ரணாவத் !

திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் தமிழகத்தில் சுமார் 890 நாட்கள் தியேட்டரில் திரையிடப்பட்டு பெரிய சாதனையை செய்தது. இன்றளவும் நின்று பேசப்பட்டு, ரசிகர்களால் பெரிய அளவில் வரவேற்கப்பட்ட இந்த படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு இதன் அடுத்த பாகம் வெளியாகவுள்ளது.

“அவர் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல.. நல்ல மனிதர்..” - ராகவா லாரன்ஸுக்கு புகழாரம் சூட்டிய கங்கனா ரணாவத் !

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில், வடிவேலு, ராதிகா, ரவி மரியா, சுபிக்‌ஷா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இதன் படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்களும் அண்மையில் வெளியானது.

தொடர்ந்து இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியதையடுத்து, அவர் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டார். அதோடு கங்கனா இந்த படத்தில் நடிக்கும் கதாபாத்திரம் முந்தைய பகுதியில் ஜோதிகா கதாபாத்திரமான 'கங்கா'வை விட அதிகம் பேசப்படும் எனவும் சொல்லப்படுகிறது.

“அவர் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல.. நல்ல மனிதர்..” - ராகவா லாரன்ஸுக்கு புகழாரம் சூட்டிய கங்கனா ரணாவத் !

மேலும் இந்த படத்திற்காக கங்கானாவை படக்குழுவினர் அணுகியபோது, "சந்திரமுகி படம் பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த படம் அது" என்று கூறி, பாதி கதையை கேட்டே, படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

“அவர் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல.. நல்ல மனிதர்..” - ராகவா லாரன்ஸுக்கு புகழாரம் சூட்டிய கங்கனா ரணாவத் !

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வடிவேலுவும், ராகவா லாரன்ஸும் ரொமான்ஸ் செய்வது போல் புகைப்படம் அண்மையில் வெளியாகி இணையத்தை கலக்கியது. அதோடு படப்பிடிப்பு தளத்தில் கங்கனா ஹோலி பண்டிகை கொண்டாடுவது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகியது.

“அவர் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல.. நல்ல மனிதர்..” - ராகவா லாரன்ஸுக்கு புகழாரம் சூட்டிய கங்கனா ரணாவத் !

இந்த நிலையில் தனது பாத்திரத்தை இன்று முடித்து விட்டதாகவும், ராகவா லாரன்ஸ் ஒரு அற்புதமான மனிதர் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் கங்கனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் சந்திரமுகி படத்தில் இன்று எனது பாத்திரத்தை நிறைவு செய்கிறேன். நான் சந்தித்த பல அற்புதமான மனிதர்களிடம் விடைபெறுவது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது. லாரன்ஸ் மாஸ்டர் என்று பிரபலமாக அறியப்படும் ராகவா லாரன்ஸ் சார் ஒரு நடன இயக்குனராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

ஆனால் இன்று.. அவர் ஒரு பிளாக்பஸ்டர் திரைப்பட இயக்குநர் / சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல.. அவர் ஒரு நம்பமுடியாத உயிரோட்டமுள்ள, கனிவான, தாராளமான, அற்புதமான மனிதர் ஆவார். உங்கள் கருணை, அற்புதமான நகைச்சுவை உணர்வு மற்றும் எனது பிறந்தநாளுக்கு அனைத்து முன்பாகவே கொடுக்கப்பட்ட பரிசுகளுக்கும் நன்றி சார். உங்களுடன் பணிபுரிந்த நேரம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.” என்று குறிப்பிட்டுள்ளார். நடிகை கங்கனாவுக்கு வரும் மார்ச் 20-ம் தேதி பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

“அவர் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல.. நல்ல மனிதர்..” - ராகவா லாரன்ஸுக்கு புகழாரம் சூட்டிய கங்கனா ரணாவத் !

முன்னதாக நடிகை கங்கனா, "உண்மையில் சந்திரமுகியில் ஜோதிகாவின் சின்னச் சின்ன நடிப்பை நான் ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறேன், ஏனென்றால் க்ளைமாக்ஸை நாங்கள் படமாக்கி வருகிறோம். முதல் பாகத்தில் ஜோதிகாவின் நடிப்பு வியப்பை அளிக்கக்கூடியது. அவருடைய நடிப்பை ஈடு செய்துவது சாத்தியமற்றது" என்று ஜோதிகாவை புகழ்ந்து ட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories