சினிமா

‘AGR’ தரிசனத்துக்கு தயாராகும் ரசிகர்கள்.. “பத்து தல” ஆடியோ வெளியீட்டு விழா எங்கே? எப்போது? - மாஸ் Update!

சிம்பு நடிப்பில் உருவாகும் பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

‘AGR’ தரிசனத்துக்கு தயாராகும் ரசிகர்கள்.. “பத்து தல” ஆடியோ வெளியீட்டு விழா எங்கே? எப்போது? - மாஸ் Update!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர்களில் முக்கியமானவர் நடிகர் சிலம்பரசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி திரையுலகில் அறிமுகமான இவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்றார். அதன்பிறகு காதல் அழிவதில்லை படத்தில் இளைஞராக அறிமுகமான இவர், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

‘AGR’ தரிசனத்துக்கு தயாராகும் ரசிகர்கள்.. “பத்து தல” ஆடியோ வெளியீட்டு விழா எங்கே? எப்போது? - மாஸ் Update!

நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராக, பாடகராக, பாடலாசியராக, தயாரிப்பாளராக பன்முகத் தன்மை கொண்டவராக உள்ளார். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான மாநாடு, வெந்து தனிந்தது காடு உள்ளிட்ட படங்கள் மூலம் மாஸ் கம்பேக் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறார்.

‘AGR’ தரிசனத்துக்கு தயாராகும் ரசிகர்கள்.. “பத்து தல” ஆடியோ வெளியீட்டு விழா எங்கே? எப்போது? - மாஸ் Update!

தற்போது 'பத்து தல' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஓபிலி என். கிருஷ்ணா இயக்கியுள்ள இந்த படத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி, டிஜே அருணாசலம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பை பெற்றது.

‘AGR’ தரிசனத்துக்கு தயாராகும் ரசிகர்கள்.. “பத்து தல” ஆடியோ வெளியீட்டு விழா எங்கே? எப்போது? - மாஸ் Update!

இதையடுத்து கடந்த மாதம் இந்த படத்தின் முதல் பாடலான 'நம்ம சத்தம்' என்ற பாடல் வெளியானது. தற்போது வரை சுமார் 8.7 மில்லியன் பார்வையாளர்களை கடந்த இந்த பாடலை ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ளார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படம் இந்த மாதம் (மார்ச்) இறுதியில் திரையரங்கில் வெளியாகவுள்ளது.

‘AGR’ தரிசனத்துக்கு தயாராகும் ரசிகர்கள்.. “பத்து தல” ஆடியோ வெளியீட்டு விழா எங்கே? எப்போது? - மாஸ் Update!

இதைத்தொடர்ந்து படம் குறித்த அப்டேட்கள் வெளியாகி வருகிறது. அதன்படி இந்த படத்தின் டீசர் கடந்த 3-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. "மூணு கடல் கூடும் குமரி கண்டத்துல" என்று தொடங்கும் இந்த டீசரில், நடிகர் சிம்பு மிரட்டலான கெட்டப்பில் நடித்துள்ளார். AGR என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிம்பு, நெகடிவ் கேங்ஸ்டர் ஹீரோவாக நடித்திருப்பதாக தெரிகிறது.

‘AGR’ தரிசனத்துக்கு தயாராகும் ரசிகர்கள்.. “பத்து தல” ஆடியோ வெளியீட்டு விழா எங்கே? எப்போது? - மாஸ் Update!

தொடர்ந்து இந்த படத்தில் அடுத்த பாடலான 'நினைவிருக்கா..' பாடல் நேற்று வெளியாகியது. ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீன் இந்த பாடலை பாடியுள்ளார். இந்த படத்தின் ஆடியோ லான்ச், மற்றும் ட்ரைலர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

‘AGR’ தரிசனத்துக்கு தயாராகும் ரசிகர்கள்.. “பத்து தல” ஆடியோ வெளியீட்டு விழா எங்கே? எப்போது? - மாஸ் Update!

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா வரும் 18-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த இசை வெளியீட்டு விழா சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மாலை 5 மணிக்கு தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 30-ம் தேதி திரையில் வெளியாகும் இந்த படத்துக்காக ரசிகர்கள் வழிமேல் விழிவைத்து காத்திருக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories